இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை
இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை (ஆங்கிலம்: People's Consultative Assembly of the Republic of Indonesia; (MPR) இந்தோனேசியம்: Majelis Permusyawaratan Rakyat Republik Indonesia) (MPR-RI) என்பது இந்தோனேசிய அரசியல் அமைப்பில் (Politics of Indonesia) ஒரு சட்டவைப் பிரிவாகும் (Legislative Branch).
இந்தோனேசிய மக்களின் பேரவை People's Consultative Assembly Majelis Permusyawaratan Rakyat MPR-RI | |
---|---|
2024–2029 | |
வகை | |
வகை | |
அவைகள் | |
வரலாறு | |
உருவாக்கம் | 29 ஆகத்து 1945 |
முன்பு | ஓல்க்சுராட் Volksraad |
புதிய கூட்டத்தொடர் தொடக்கம் | 1 அக்டோபர் 2024 |
தலைமை | |
தலைவர் | அகமட் முசானி, கெரிந்திரா 3 அக்டோபர் 2024 முதல் |
துணைத்தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 732 (152 செனட்டர்கள், 580 உறுப்பினர்கள்) |
மேலவை (DPD) அரசியல் குழுக்கள் | கட்சி சார்பற்ற (152) |
ஆட்சிக்காலம் | ஐந்தாண்டுகள் |
தேர்தல்கள் | |
அண்மைய மேலவை (DPD) தேர்தல் | 14 பிப்ரவரி 2024 |
Last மக்களவை (DPR) election | 14 பிப்ரவரி 2024 |
அடுத்த மேலவை (DPD) தேர்தல் | 2029 |
அடுத்த மக்களவை (DPR) தேர்தல் | 2029 |
கூடும் இடம் | |
நுசந்தாரா II கட்டிடம் இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம், ஜகார்த்தா, இந்தோனேசியா | |
வலைத்தளம் | |
mpr | |
அரசியலமைப்புச் சட்டம் | |
1945 இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம், பகுதி II |
இது இந்தோனேசிய மக்களவை (DPR) உறுப்பினர்களையும், இந்தோனேசிய மேலவை (DPD) உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. 2004-ஆம் ஆண்டுக்கு முன்னர்; மற்றும் 1945 அரசியலமைப்பு திருத்தங்களுக்கு (1945 Constitution Amendments) முன்னர், இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வு மன்றம் என்பது இந்தோனேசியாவின் மிக உயர்ந்த ஆளும் பேரவையாக இருந்தது.
சட்ட எண் 16/1960-இன் படி (Law No. 16/1960), 1971-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை உருவாக்கப்பட்டது. இந்தோனேசிய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.
பொது
தொகு1977-1982 காலக் கட்டத்தில் இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 920-ஆக இருந்தது. 1987-1992; 1992-1997; மற்றும் 1997-1999 காலக் கட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1000-ஆக உயர்ந்தது.
2004-இல் இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேரவையில் இருந்து நீக்கப்பட்டதால்; பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 688-ஆக குறைந்தது.
உறுப்பினர்களின் எண்ணிக்கை
தொகு2019-2024 காலக் கட்டத்தில் 575 மக்களவை உறுப்பினர்கள்; மற்றும் 136 மேலவை உறுப்பினர்கள் என 711 உறுப்பினர்கள் உள்ளனர்.
2022-ஆம் ஆண்டில், கூடுதலாக 4 மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2024-2029 காலக் கட்டத்திற்கு, இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை 580 மக்களவை உறுப்பினர்கள்; மற்றும் 152 மேலவை உறுப்பினர்கள் என எண்ணிக்கை 732-ஆக அதிகரித்தது.
வரலாறு
தொகுஆகத்து 18 அன்று, சுகார்னோ இந்தோனேசியாவின் விடுதலையை அறிவித்த மறுநாள், இந்தோனேசிய விடுதலைக்கான ஏற்பாட்டுக் குழு (Independence of Indonesia the Preparatory Committee for Indonesian Independence (PPKI) இந்தோனேசியாவுக்கான புதிய அரசியலமைப்பை அங்கீகரித்தது.
அந்த அரசியலமைப்பின் இடைநிலை விதிகளின் கீழ், ஆறு மாத காலத்திற்கு, இந்தோனேசிய விடுதலைக்கான ஏற்பாட்டுக் குழு செயலபடும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன், புதிய குடியரசு அரசியலமைப்பின் படி ஓர் அதிபரால் இந்தோனேசியா எனும் ஒரு நாடு நிர்வகிக்கப்படும் என்றும்; அவருக்கு உதவியாக இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சுகார்னோ காலம்
தொகுகட்டுப்பாடற்ற நாடாளுமன்ற அமைப்பு
தொகுஆகத்து 29 அன்று, சுகார்னோ இந்தோனேசிய விடுதலைக்கான ஏற்பாட்டுக் குழுவைக் கலைத்தார். அதற்குப் பதிலாக இந்தோனேசிய மத்திய தேசியக் குழு (Central Indonesian National Committee; Komite Nasional Indonesia Pusat (KNIP) என ஒரு புதிய அமைப்பு நிறுவப்பட்டது.
அந்த அமைப்பில் 135 உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டார்கள். அவர்களில் பெருமபாலோர் இந்தோனேசிய விடுதலைக்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ஆவார்கள்.[1][2][3] இருப்பினும் முன்னாள் இந்தோனேசிய விடுதலைக்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் பலர், இந்தோனேசிய அரசாங்கம் மிகத் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகக் கவலை தெரிவிததனர்; மேலும் கட்டுப்பாடற்ற ஒரு நாடாளுமன்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர்.
தற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவை
தொகுஇராணுவத்தின் ஆதரவுடன், சூலை 5, 1959-இல், சுகார்னோ அப்போதைய தற்காலிக அரசியலமைப்பை நீக்கிவிட்டு, 1945 அரசியலமைப்பை மீண்டும் அமல்படுத்த ஆணையிட்டார்.
1960-ஆம் ஆண்டில், நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற இந்தோனேசிய மக்களவை (DPR) மறுத்தது. அதை அடுத்து, இந்தோனேசிய மக்களவையையும் சுகார்னோ கலைத்தார். தற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவை (Provisional People's Consultative Assembly) (MPRS) எனும் புதிய பேரவையையும் உருவாக்கினார்.
பாண்டுங் பொது அமர்வுகள்
தொகுதற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவை (Provisional People's Consultative Assembly) (MPRS) தனது முதல் பொது அமர்வை மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் 1960 நவம்பர் 10 முதல் திசம்பர் 3 வரை நடத்தியது.[4] அப்போது இரண்டு தீர்மானங்களை நிறைவேற்ற்ப்பட்டன:[5]
- தீர்மானம் எண். I/MPRS/1960 (Resolution No. I/MPRS/1960) - இந்தோனேசியா குடியரசின் கொள்கை அறிவிப்பு என்பது அரசாங்கக் கொள்கையின் வழிகாட்டுதல்களாக அமையும்
- தீர்மானம் எண். II/MPRS/1960 (Resolution No. II/MPRS/1960) - தேசிய ஒட்டுமொத்த திட்டமிடப்பட்ட வளர்ச்சியின் தொகுதி 1 (1961-1969)
வாழ்நாள் அதிபராக சுகார்னோ
தொகுதற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவையின் இரண்டாவது பொது அமர்வு 1963 மே 15 முதல் மே 22 வரை பாண்டுங்கில் நடைபெற்றது. இந்தப் பொது அமர்வில் தான், III/MPRS/1963 தீர்மானத்தின் மூலம் சுகார்னோ 'வாழ்நாள் அதிபராக' தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இந்தோனேசியா அரசியலமைப்பின் 7-ஆவது பிரிவுக்கு எதிரானது.
அந்தத் தீர்மானத்தை, தற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவையின் ஆயுதப்படை உறுப்பினர்கள் ஆதரித்தனர். இந்தோனேசிய பொதுவுடைமை கட்சிக்கும் (Communist Party of Indonesia); மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு இடையே அதிகரித்து வரும் செல்வாக்கிற்கும்; அந்தத் தீர்மானம் ஒரு கடுமையான அடியாக அமைந்தது.
சுகார்னோவின் வாரிசாக, கம்யூனிசக் கொள்கையில் சார்புடைய ஒருவர், மக்களாட்சி முறையில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என இந்தோனேசிய பொதுவுடைமை கட்சி எதிர்பார்த்தது.[6]
1965 பொது அமர்வு
தொகுதற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவை (MPRS) தனது மூன்றாவது பொது அமர்வை 11 முதல் 16 ஏப்ரல் 1965 வரை பாண்டுங்கில் நடத்தியது.[12] இந்தப் பொது அமர்வு, இந்தோனேசியாவின் நிர்வாகத்தில் சுகார்னோவின் கருத்தியல் அணுகுமுறைகளை மேலும் வலுப்படுத்தியது.[4]
சுகார்னோவின் விடுதலைத் தின உரைகளின் பல கூறுகள், நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கான வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1966 பொது அமர்வு
தொகுதற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவையின் (MPRS) 1966-ஆம் ஆண்டுப் பொது அமர்வு என்பது மற்ற எல்லா பொது அமர்வுகளைக் காட்டிலும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த 1966-ஆம் ஆண்டுப் பொது அமர்வு; 30 செப்டம்பர் 1965 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, சுகார்த்தோவின் புதிய தலைமையின் கீழ் 1966 சூன் 20 முதல் சூலை 5 வரை ஜகார்த்தாவில் நடைபெற்றது.
1966-ஆம் ஆண்டுப் பொது அமர்வில், அதிகாரப்பூர்வத் தலைமைத்துவ மாற்றம் நடைபெற்றது. சுகார்னோவின் அதிபராட்சி சுகார்த்தோவிடம் வழங்கப்பட்டது.
சுகார்த்தோ காலம்
தொகு1967 சிறப்பு அமர்வு
தொகு1966-ஆம் ஆண்டுப் பொது அமர்வு, 24 தீர்மானங்களை நிறைவேற்றியது; அவற்றுள் வாழ்நாள் அதிபர் பதவிக்கான சுகார்னோவின் நியமனத்தை ரத்து செய்தல்; "கம்யூனிசம்/மார்க்சிசம்-லெனினிசம்" தடை செய்தல்; ஆகியவை அடங்கும்.[4][7][8]
தற்காலிக மக்கள் கலந்தாய்வுப் பேரவையின் (MPRS) 1967-ஆம் ஆண்டு சிறப்பு அமர்வு, மார்ச் 7 முதல் 12 வரை நடைபெற்றது.[4] அந்த அமர்வு சுகார்னோவின் அதிபர் பதவியின் முடிவையும், சுகார்த்தோவின் அதிபர் பதவியின் தொடக்கத்தையும் பார்த்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ricklefs 2008, ப. 197–198.
- ↑ Kahin 1952, ப. 139–140.
- ↑ Cribb 2001, ப. 272–274.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Sagala 1978, ப. 270.
- ↑ Simanjuntak 2003, ப. 215–216.
- ↑ Simanjuntak 2003, ப. 236.
- ↑ Ricklefs 2008, ப. 454.
- ↑ Simanjuntak 2003, ப. 292–293.
சான்றுகள்
தொகு- Cribb, Robert (2001). "Parlemen Indonesia 1945–1959 (Indonesian Parliaments 1945–1959)". In Yayasan API (ed.). Panduan Parlemen Indonesia (Indonesian Parliamentary Guide) (in இந்தோனேஷியன்). Yayasan API. pp. 97–113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-96532-1-5.
- Feith, Herbert (2007) [1963]. The Decline of Constitutional Democracy in Indonesia. Singapore: Equinox Publishing (Asia) Pte Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-3780-45-0.
- Kahin, George McTurnan (1952). Nationalism and Revolution in Indonesia. Ithaca, New York: Cornell University Press.
- Ricklefs, M. C. (2008) [1981]. A History of Modern Indonesia Since c. 1300 (4th ed.). London: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-54685-1.
- Sagala, Budiman B (1978). "Beberapa Perbandingan Ketetapan-Ketetapan MPR & Permasalahannya" (in Indonesian). Jurnal Hukum & Pembangunan 8 (3): 270–282. doi:10.21143/jhp.vol8.no3.772. பன்னாட்டுத் தர தொடர் எண்:2503-1465.
- Simanjuntak, P. N. H. (2003). Kabinet-Kabinet Republik Indonesia: Dari Awal Kemerdekaan Sampai Reformasi (in இந்தோனேஷியன்). Jakarta: Djambatan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-428-499-8.
- Maarif, Syamsul (2011). Militer Dalam Parlemen 1960–2004. London: Prenada Meda Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789793464657.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்