இந்தோனேசிய மேலவை
இந்தோனேசிய மேலவை அல்லது இந்தோனேசிய மாவட்ட பிரதிநிதிகள் சபை (ஆங்கிலம்: Regional Representative Council; அல்லது House of Regional Representatives; அல்லது Senate of Indonesia (DPD) இந்தோனேசியம்: Dewan Perwakilan Daerah Republik Indonesia) (DPD RI) என்பது இந்தோனேசிய கலந்தாய்வுப் பேரவையின் (People's Consultative Assembly) (MPR) அவைகளில் ஒன்றாகும்.[3] இந்தோனேசிய மேலவையின் உறுப்பினர்கள் பொதுவாக செனட்டர்கள் (Senators) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்தோனேசிய மேலவை Senate of Indonesia Dewan Perwakilan Daerah DPD | |
---|---|
2024–2029 | |
வகை | |
வகை | |
வரலாறு | |
உருவாக்கம் | 1 அக்டோபர் 2004 |
முன்பு | மாவட்டப் பிரதிநிதிகள் (Utusan Daerah) (Regional Representatives) |
புதிய கூட்டத்தொடர் தொடக்கம் | 1 அக்டோபர் 2024 |
தலைமை | |
தலைவர் | சுல்தான் பக்தியார் நஜாமுதீன் (பெங்கூலு) 2 அக்டோபர் 2024 முதல் |
துணைத் தலைவர் | ரத்து எமாஸ், (யோகியாக்கார்த்தா சிறப்பு) 2 அக்டோபர் 2024 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 152 |
அரசியல் குழுக்கள் | (152) |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
Authority |
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | பிப்ரவரி 14, 2024 |
அடுத்த தேர்தல் | 2029 |
கூடும் இடம் | |
நுசாந்தாரா V கட்டிடம் இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம், ஜகார்த்தா, இந்தோனேசியா | |
வலைத்தளம் | |
dpd.go.id |
இந்த அவை, இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவையில் (MPR) மேலவையாகக் கருதப்படுகிறது. அதே வேளையில் இந்தோனேசிய குடியரசின் பிரதிநிதிகள் சபை (DPR) என்பது மக்களவையாகச் செயல்படுகிறது.[2]
இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம், மக்களவை, மேலவை என வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தோனேசிய மக்களவையுடன் (DPR) ஒப்பிடும்போது இந்தோனேசிய மேலவை (DPD) அதிக அளவில் அதிகாரம், சிறப்புரிமை பெறவில்லை.[1]
பொது
தொகுஇந்தோனேசியாவின் அரசியலமைப்பின் கீழ், மேலவையின் அதிகாரம் என்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட பிராந்திய அரசாங்கங்கள் தொடர்பான செயல்பாடுகளுக்கு மட்டுமே இந்தோனேசிய மேலவை அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்; மற்றும் இந்தோனேசிய மக்களவையின் சட்ட முன்வரைவுகளுக்கு, அதன் கருத்துரைகளை மட்டுமே வழங்க முடியும்; மற்றபடி சட்ட முன்வரைவுகளைச் சட்டமாக்கும் அதிகாரம் மேலவைக்கு வழங்க்ப்பட்டவில்லை.[4]
வரலாறு
தொகுஇந்தோனேசிய நாடாளுமன்றத்தில் மாவட்டப் பிரதிநிதிகளுக்கும் உறுப்பினர் பதவி வழங்கலாம் எனும் கருத்திற்கு, 1945 அரசியலமைப்பின் அசல் பதிப்பில் இடமளிக்கப்பட்டது. அதாவது, இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் வரையப்படும் போதே, இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் மாவட்டப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.[5]
1949-இல் இயற்றப்பட்ட இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்களின் (United States of Indonesia) இந்தோனேசிய அரசியலமைப்பில், அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது, இந்தோனேசியக் குடியரசின் மேலவை (Senate of the United States of Indonesia; Senat Republik Indonesia Serikat) எனும் வடிவத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[6]
அரசியலமைப்பின் மூன்றாவது திருத்தம்
தொகு9 நவம்பர் 2001-இல் இயற்றப்பட்ட 1945-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூன்றாவது திருத்தத்தின் மூலம், பழைய மாவட்டப் பிரதிநிதிகளின் அவை (Utusan Daerah) எனப்து நீக்கம் செய்யப்பட்டு புதிய மாவட்டப் பிரதிநிதிகள் அவை (DPD) என மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு மறூருவாக்கம் பெற்ற சட்டவைதான் தற்போதைய இந்தோனேசிய மேலவை ஆகும்.
அக்டோபர் 2004 அன்று முதல் முறையாக இந்தோனேசிய மேலவைக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் 128 பேர் மேலவைக்கான உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [7][8]
உறுப்பியம்
தொகுஅனைத்து மேலவை உறுப்பினர்களும்; மற்ற மக்களவை உறுப்பினர்களைப் போல; ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை, பொதுத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேன்டும் என்று அரசியலமைப்பின் பிரிவு 22C (Article 22C of the Constitution of Indonesia) கூறுகிறது,
மொத்த மேலவை உறுப்பினர்களின் (செனட்டர்களின்) எண்ணிக்கை; மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேசிய சட்டவைத் தேர்தல்
தொகுஇந்தோனேசியாவின் 38 மாநிலங்களில், ஒவ்வொரு மாநிலமும் 4 உறுப்பினர்களை மேலவைக்குத் தேர்ந்தெடுக்கின்றன. 2004 இந்தோனேசியப் பொதுத் தேர்தலில், 32 மாநிலங்களில் 128 மேலவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தோனேசியாவில் பொதுத்தேர்தல் என்பது இந்தோனேசிய சட்டவைத் தேர்தல் (Indonesian Legislative Election) என்று அழைக்கப்படுகிறது.
அதன் பின்னர், புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால், அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களில் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 2009-இல் 132 ஆகவும்; 2014-இல் 136 ஆகவும்; 2024-இல் 152 ஆகவும் இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Asshiddiqie 2009, ப. 11-12.
- ↑ 2.0 2.1 Asshiddiqie 2009, ப. 12.
- ↑ Indrayana 2005, ப. 369.
- ↑ "Senator Indonesia". twitter.com. பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
- ↑ Indrayana 2005, ப. 446.
- ↑ na Thalang, Chanintira (June 2005). "The Legislative Elections in Indonesia, April 2004". Electoral Studies 24 (2): 326–332. doi:10.1016/j.electstud.2004.10.006. https://zenodo.org/record/896485.
- ↑ Harijanti, Susi Dwi; Lindsey, Tim (January 2006). "Indonesia: General elections test the amended Constitution and the new Constitutional Court". International Journal of Constitutional Law 4 (1): 138–150. doi:10.1093/icon/moi055.
- ↑ Asshiddiqie 2009, ப. 11.
- Indrayana, Denny (2005). "Indonesian Constitutional Reform 1999–2002: An Evaluation of Constitution-Making in Transition". Faculty of Law, University of Melbourne.
- Asshiddiqie, Jimly (2009). "Lembaga Perwakilan dan Permusyawaratan Rakyat Tingkat Pusat". jimly.com.
சான்றுகள்
தொகு- Cribb, Robert (2001) Parlemen Indonesia 1945–1959 (Indonesian Parliaments 1945–1959) in Panduan Parlemen Indonesia (Indonesian Parliamentary Guide), Yayasan API, Jakarta, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-96532-1-5
- Daniel Dhaidae & H. Witdarmono (Eds) (2000) Wajah Dewan Perwakilan Rakyat Republik Indonesia Pemilihan Umum 1999 (Faces of the Republic of Indonesia People's Representative Council 1999 General Election) Harian Kompas, Jakarta, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-9251-43-5
- Denny Indrayana (2008) Indonesian Constitutional Reform 1999–2002: An Evaluation of Constitution-Making in Transition, Kompas Book Publishing, Jakarta பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-709-394-5
- Ikrar Nusa Bhakti (2001) Parlemen Dalam Konteks Sejarah 1959–1998 (Parliament in the Historical Context 1959–1998) in Militer dan Parlemen di Indonesia (The Military and Indonesian Parliament in Indonesia) in Panduan Parlelem Indonesia (Indonesian Parliamentary Guide), Yayasan API, Jakarta, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-96532-1-5
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தோனேசிய மேலவை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- DPD homepage