இந்தோனேசிய அரசியல்
இந்தோனேசிய அரசியல் (ஆங்கிலம்: Politics of Indonesia; இந்தோனேசியம்: Politik Indonesia) என்பது இந்தோனேசிய மக்களாட்சிக் கட்டமைப்பில் (Representative Democracy), குடியரசுத் தலைவரின் கீழ் நடைபெறும் அரசு முறைமை (Presidential System)ஆகும்.
இதில் மக்களவைத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் கட்சி அமைப்புகள் இடம் பெறுகின்றன. இதன் நிர்வாக அதிகாரம் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.
அரசாங்கம்; இரு அவைகள் (Bicameral); இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை (People's Consultative Assembly) ஆகிய அமைப்புக்களிடம் சட்டமியற்றும் அதிகாரம் (Legislative Power) உள்ளது. இதில் நீதித்துறையானது தன்னிச்சையாக (Judicial Independence) இயங்குகிறது.[1]
பொது
தொகு1945 அரசியலமைப்பு, நிர்வாகத்துறை; சட்டவாக்க அவைத் துறை மற்றும் நீதித்துறைகளுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கி உள்ளது. அரசாங்க அமைப்பு என்பது "நாடாளுமன்ற பண்புகளுடன் கூடிய அதிபராட்சி" என விவரிக்கப்படுகிறது.[2]
இந்தோனேசியா, அதன் விடுதலைக்குப் பிறகு, சில ஆண்டுகள் மக்களாட்சி அரசாங்கமாக இருந்தது. சுகார்னோ ஆட்சியின் கீழ், 1957-இல் சர்வாதிகாரமானது. பின்னர், மே 1998 இந்தோனேசிய கலவரங்கள்; மற்றும் அதிபர் சுகார்த்தோ பதவி துறப்பு செய்யும் வரையில், இந்தோனேசியா என்பது சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பின்னர், அதாவது அவர்கள் இருவரின் சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர், இந்தோனேசியாவில் மக்களாட்சி மீட்கப்பட்டது.
இந்தோனேசிய அரசியல் கட்சிகள்
தொகுபொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) இந்தோனேசியாவை 2019-இல் ஒரு குறைபாடுள்ள மக்களாட்சி என்று மதிப்பிட்டுள்ளது.[3] இந்தோனேசிய அரசியல் கட்சிகள் அவற்றுக்கு இடையே அதிகாரத்தைப் பரவலாகப் பகிர்ந்து கொண்டு, வாக்காளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கடமைகளைச் செய்யும் கட்சிகளாகச் செயல்படுகின்றன என வகைப்படுத்தப்பட்டுள்ளன.[4][5][6]
ஒருங்கிணைந்த அல்லது அதிகபட்ச மக்களாட்சிகான தேவைகளை நிறைவு செய்வதில், இந்தோனேசியா தவறிவிட்டது என்றும்; நீதிமன்ற அமைப்பில் அடிக்கடி ஊழல் நிகழ்வுகள் நிகழ்கின்றன எனும் குறைபாடுகளும் நிலவி வருகின்றன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ King, Blair. A Inside Indonesia:Constitutional tinkering: The search for consensus is taking time பரணிடப்பட்டது 29 அக்டோபர் 2009 at the வந்தவழி இயந்திரம் access date 23 May 2009
- ↑ Hindley, Donald (1962). "President Sukarno and the Communists: The Politics of Domestication" (in en). American Political Science Review 56 (4): 915–926. doi:10.2307/1952793. பன்னாட்டுத் தர தொடர் எண்:1537-5943. https://www.cambridge.org/core/journals/american-political-science-review/article/abs/president-sukarno-and-the-communists-the-politics-of-domestication/8B358A5EDCCA80E176F73DAA5E3D8DE0.
- ↑ V-Dem Institute (2023). "The V-Dem Dataset". Archived from the original on 8 December 2022. பார்க்கப்பட்ட நாள் 14 October 2023.
- ↑ Slater, Dan (2018). "Party Cartelization, Indonesian-Style: Presidential Powersharing and the Contingency of Democratic Opposition" (in en). Journal of East Asian Studies 18 (1): 23–46. doi:10.1017/jea.2017.26. பன்னாட்டுத் தர தொடர் எண்:1598-2408.
- ↑ Slater, Dan (2024). "Indonesia's High-Stakes Handover". Journal of Democracy 35 (2): 40–51. doi:10.1353/jod.2024.a922832. பன்னாட்டுத் தர தொடர் எண்:1086-3214. https://muse.jhu.edu/pub/1/article/922832. பார்த்த நாள்: 2 April 2024.
- ↑ McCargo, Duncan; Wadipalapa, Rendy (2024). "Southeast Asia's Toxic Alliances". Journal of Democracy 35 (3): 115–130. doi:10.1353/jod.2024.a930431. பன்னாட்டுத் தர தொடர் எண்:1086-3214. http://dx.doi.org/10.1353/jod.2024.a930431.
- ↑ "Indonesia: Freedom in the World 2022 Country Report". Freedom House (in ஆங்கிலம்). Archived from the original on 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.
சான்றுகள்
தொகு- Cribb, Robert (2001). "Parlemen Indonesia 1945–1959 (Indonesian Parliaments 1945–1959)". In Yayasan API (ed.). Panduan Parlemen Indonesia (Indonesian Parliamentary Guide) (in இந்தோனேஷியன்). Yayasan API. pp. 97–113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-96532-1-5.
மேலும் காண்க
தொகுமேலும் படிக்க
தொகு- Ananta, Aris; Arifin, Evi Nurvidya; Suryadinata, Leo (2005). Emerging Democracy in Indonesia. Singapore: Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-230-323-5.
- Bünte, Marco; Ufen, Andreas, eds. (2009). Democratization in post-Suharto Indonesia. London; New York: Routledge.
- Feith, Herbert (2007) [1962]. The Decline of Constitutional Democracy in Indonesia. Jakarta; Kuala Lumpur: Equinox Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-3780-45-0.
- Indrayana, Denny (2008). Indonesian Constitutional Reform 1999-2002: An Evaluation of Constitution-Making in Transition. Jakarta: Kompas Book Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-709-394-5.
- King, Blair A. (2011). "Chapter 4. Government and Politics". In Frederick, William H.; Worden, Robert L. (eds.). Indonesia: A Country Study. Area handbook series, 39. Library of Congress, Federal Research Division (6th ed.). Washington, DC: U.S. Government Printing Office. pp. 225–306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8444-0790-6.