மெர்டேகா அரண்மனை, மத்திய ஜகார்த்தா

மெர்டேகா அரண்மனை (Merdeka Palace) ( இந்தோனேசியம்: Istana Merdeka  ; இந்தோனேசியாவில் இஸ்தானா காம்பீர் என்றும், டச்சு காலனித்துவ காலங்களில் பலீஸ் டெ கொனிங்ஸ்ப்ளீன் என்றும் அழைக்கப்படுகிறது ) இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவில் உள்ள மெர்டேகா சதுக்கத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது இந்தோனேசியா குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அரண்மனையானது காலனித்துவ காலத்தில் டச்சு கிழக்கிந்திய இண்டீஸின் கவர்னர் ஜெனரலுக்கான இல்லமாக இருந்தது. 1949 ஆம் ஆண்டில், இந்த அரண்மனைக்கு மெர்டேகா அரண்மனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது, "(கே) மெர்டேகா என்ற சொல்லுக்கு (ஒரு)" அதாவது "சுதந்திரம்" அல்லது "சுதந்திரம்" என்று பொருளாகும்

மெர்டேகா அரண்மனை 6.8 எக்டேர்கள் (17 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள, ஜகார்த்தா ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ளது இதில் இஸ்தானா நெகாரா (ஜகார்த்தா) எனப்படுகின்ற நெகாரா அரண்மனை, விஸ்மா நெகாரா (மாநில விருந்தினர் மாளிகை), செக்ரேட்டரியட் நெகாரா (மாநில செயலகம்) மற்றும் பினா கிரஹா கட்டிடம் போன்றவை அடங்கும்.[1] இது இந்தோனேசிய நிர்வாக அதிகாரத்தின் மையமாகச் செயல்பட்டு வருகிறது.[2]

வரலாறுதொகு

ஆரம்பம்தொகு

 
1880 களில் பாலிஸ் டெ கொனிங்ஸ்ப்ளினின் லித்தோகிராஃப் (தற்போதைய மெர்டேகா அரண்மனை)
 
1936 இல் அரண்மனையின் வரவேற்பு அறை
 
1936 இல் அரண்மனையின் உள் புறம்

இப்போது மெர்டேகா அரண்மனை என்று அழைக்கப்படும் கட்டிடம் ரிஜ்ஸ்விஜ் அரண்மனையின் (தற்போதைய இஸ்தானா நெகரா) வளாகத்தில் கட்டப்பட்டதாகும். இது 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்பெரிய வரவேற்புகள் மற்றும் மாநாடுகள் நடத்துதல் உள்ளிட்ட பல நிர்வாக நோக்கங்களுக்காக அது போதுமானதாக இல்லை என்று கருதப்பட்டது அதனைத் தொடரந்து 1869 ஆம் ஆண்டில், புதிய அரண்மனையை நிர்மாணிப்பதற்கான வழிமுறைகளை கவர்னர் ஜெனரல் பீட்டர் மிஜெர் வழங்கினார். ஆளுநர் ஜெனரல் ஜேம்ஸ்லௌடன் ஆட்சிக் காலத்தின்போது மார்ச் 23, 1873 ஆம் நாளன்று ரிஜ்ஸ்விஜ் அரண்மனையின் தெற்கு புல்வெளியில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நியோ-பல்லடியன் அரண்மனை ஜேகப்பஸ் பார்த்தலோமியஸ் ட்ரோசர்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதனை பொதுப்பணித் துறை மற்றும் ஒப்பந்த நிறுவனமான ட்ரோசர்ஸ் கம்பெனி நிறுவனத்தாரால் ƒ 360,000 செலவில் கட்டப்பட்டது . புதிய கட்டிடம் ரிஜ்ஸ்விஜ் அரண்மனை மைதானத்தின் தெற்கு பகுதியில் கட்டப்பட்டது, இது தற்போது மெர்டேகா சதுக்கம் என்றழைக்கப்படுகின்ற, கொனிங்ஸ்ப்ளினை நோக்கிய வகையில் அமைந்துள்ளது.

கவர்னர் ஜெனரல் ஜோஹன் வில்ஹெல்ம் வான் லான்ஸ்பெர்கேவின் காலத்தில் 1879 ஆம் ஆண்டில் அரண்மனையின் கட்டுமானப் பணிகள் முடித்து வைக்கப்பட்டன. புதிய அரண்மனை டச்சு கிழந்திய ஆளுநர் ஜெனரல் மற்றும் அவரது குடும்பத்தினரின் உத்தியோகபூர்வ இல்லமான பலீஸ் வான் டி கவர்னூர் ஜெனரல் ("கவர்னர் ஜெனரலின் அரண்மனை") என்று அறிவிக்கப்பட்டு அந்தப் பெயரே சூட்டப்பட்டது.[3]

கவர்னர் ஜெனரல் ஜோஹன் வில்ஹெல்ம் வான் லான்ஸ்பெர்க் (1875-1881) இந்த கட்டிடத்தில் முதன்முதலில் வசித்து வந்தார். [4] இந்த அரண்மனையில் வசித்த கடைசி டச்சு கவர்னர் ஜெனரலாக கவர்னர் ஜெனரல் டிஜார்டா வான் ஸ்டார்கன்போர்க் ஸ்டாச்சவர் (1936-1942) ஆவார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்புதொகு

இந்தோனேசியாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது (1942-1945), ஜப்பானிய காரிஸனின் சாய்கோ ஷிகிகன் (இராணுவத் தளபதி) ரிஜ்ஸ்விஜ் அரண்மனை வளாகத்தில் வசித்து வந்தார். அதே காலகட்டத்தில் மூன்று ஜப்பானிய தளபதிகள் மெர்டேகா அரண்மனையில் தங்கியுள்ளனர்.[3]

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்தொகு

இந்தோனேசிய தேசிய புரட்சி (1945-1949) இந்தோனேசியா குடியரசை நெதர்லாந்து அங்கீகரித்ததன் மூலமாக ஒரு முடிவினைப் பெற்றது. 1949 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களிடமிருந்து இந்தோனேசியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது காம்பீர் அரண்மனையில். விழாவின் போது, டச்சு கொடிக்கு மாற்றாக இந்தோனேசியாவின் கொடி பறக்க ஆரம்பித்தது கொடி ஏற்றப்பட்டபோது பல பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். " மெர்டேகா ! (சுதந்திரம்!)" என்று என்று மகிழ்ச்சியோடு கத்தினர். அந்த தருணத்திலிருந்து, காம்பீர் அரண்மனை மெர்டேகா அரண்மனை என்று அறிவிக்கப்பட்டது. டச்சு கிரீடத்திற்குரிய உயர் பொறுப்பாளரான டோனி லோவிங்க், அந்த அரண்மனையை விட்டு வெளியேறிய, டச்சு சக்தியைக் குறித்து வந்த, கடைசி மனிதர் ஆவார். [4] அரண்மனையின் பெயர் அதிகாரப்பூர்வமாக இஸ்தானா மெர்டேகா ("இன்டிபென்டென்ஸ் பிளேஸ்") என டிசம்பர் 28, 1949 அன்று 17.55 ஆம் நேர அளவில் மாற்றப்பட்டது. [4]

27 டிசம்பர் 1949 ஆம் நாளன்று, விழா முடிந்த பிறகு ஒரு நாள், ஜனாதிபதி சுக்கரனோ மற்றும் அவரது குடும்பத்தினர்யோகியாகர்த்தாவிலிருந்து அங்கு வந்து சேர்ந்தனர். முதல் முறையாக இந்தோனேசியா குடியரசின் ஜனாதிபதி மெர்டேகா அரண்மனையில் குடியேறினார்.

முதல் ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் 1950 ஆம் ஆண்டில் மெர்டேகா அரண்மனையில் நடைபெற்றது.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

பிற அரண்மனைகள்தொகு