சிபனாஸ் அரண்மனை, சிபனாஸ்

சிபனாஸ் அரண்மனை (Cipanas Palace) (Indonesian pronunciation:  இஸ்தானா சிபனாஸ்) இந்தோனேசியாவில் உள்ள ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவின் சிபனாஸ், ஜகார்த்தா மற்றும் பண்டுங்கை புன்காக் வழியாக இணைக்கும் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. ஜகார்த்தாவிலிருந்து சுமார் 103 கிலோமீட்டர்கள் (64 mi) தொலைவிலும், சியான்ஜூர் நகரத்திலிருந்து.சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 mi) தொலைவிலும், சியான்ஜூர் ரீஜென்சியில் சிபனாஸ் என்னும் இடத்தில் உள்ளது. அந்த இடம் கேடே மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1,100 மீட்டர்கள் (3,600 அடி) உயரத்தில் உள்ளது. இந்க்த கட்டிடம் சுமார் 26 எக்டேர்கள் (64 ஏக்கர்கள்) பரப்பளவில் உள்ளது, கட்டிடம் 7,760 சதுர மீட்டர்கள் (83,500 sq ft) சுமார் 7,760 சதுர மீட்டர்கள் (83,500 sq ft) பரப்பில் உள்ளது. .

சிபனாஸ் அரண்மனை
Istana Cipanas
Istana Cipanas from the front
சிபனாஸ் அரண்மனை
Map
மாற்றுப் பெயர்கள்Tjipanas palace
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிடச்சுக்காலனி
இடம்சிபனாஸ், இந்தோனேசியா
நாடுஇந்தோனேசியா
ஆள்கூற்று6°44′01″S 107°02′28″E / 6.733569°S 107.041077°E / -6.733569; 107.041077
உயரம்1,100 m (3,609 அடி)
கட்டுமான ஆரம்பம்1740
கட்டுவித்தவர்இந்தோனேசிய அரசு
உரிமையாளர்இந்தோனேசிய அரசு
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைமரம்
தளப்பரப்பு7,760 m2 (83,500 sq ft)
ஜோசியாஸ் கார்னெலிஸ் ராப்பார்ட்டின் வரைந்த, டச்சு கிழக்கிந்திய கவர்னர் ஜெனரல்களின் இல்லமான சிபனாஸ் அரண்மனையின் வாட்டர்கலர் லித்தோகிராபி ஓவியம், 1880

வரலாறு

தொகு

1740 ஆம் ஆண்டில் ஆளுநர் ஜெனரல் குஸ்டாஃப் வில்லெம் வான் இம்ஹாஃப் ஆட்சிக் காலத்தின் போது வான் ஹியூட்ஸ் என்ற டச்சு நிலக்கிழார் இந்த ஆடம்பரமான அரண்மனையைக் கட்டினார். சுத்தமான, புதிய மற்றும் குளிர்ந்த மலை காற்றுக்காக இப்பகுதி நற்பெயர் பெற்றது. இந்தக்கட்டிடம் டச்சு கவர்னர் ஜெனரல்களுக்கான தங்கும் இடமாக மாற்றப்பட்டது.

இது அரண்மனையாக மாறுவதற்கு முன்பாக சிபனாஸ் இல்லம் என்றழைக்கப்பட்டது. 1750 ஆம் ஆண்டில் இரண்டு மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இங்கு இருந்த வான் இம்ஹாஃப் இக்கட்டத்தில் இயற்கை எய்தினார். அவரது உடல் ஜகார்த்தாவின் தனா அபாங்கில் முழு இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. பியூட்டென்சோர்க் அரண்மனை, சிசருவா மருத்துவமனைகள் மற்றும் சிபனாஸில் உள்ள இல்லங்கள் ஆகியவற்ளைக் கட்டியவர் என்று அறியப்படுவதைவிட வான் இம்ஹாஃப் மேற்கு கலிபேசரில் அகாடமி டி மரைனில் என்னும் அமைப்பை நிறுவிய நிலையில் பெயர் பெற்றவர் ஆவார். அங்கிருந்த அந்த கட்டிடம் பின்னர் ரெட் ஸ்டோர் என்று பெயர் மாற்றம் பெற்றது.[1]

கமிஷனர் ஜெனரல் லியோனார்ட் டு பஸ் டி கிசிக்னீஸும் சல்பர் குளியல் என்ற குளியலை மேற்கொள்ள இந்த அரண்மனைக்கு வருவதை விரும்பினார், மேலும் அவர் வரும்போது தன் செயலாளரான சிரார்டஸ் வில்லெம் கேர்ல் கிராஃப் வான் ஹோஜெண்டார்ப் (1820-1841) என்பவரையும் அழைத்து வந்தார். அவர்களின் நிர்வாகத்தின் போது, ஹெர்மன் வில்லெம் டேன்டெல்ஸ் (1808-1811) மற்றும் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் (1811-1816) ஆகிய இருவரும் ஆப்பிள் பண்ணைகள், மலர் தோட்டங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கவும், அரிசி ஆலைகளில் பணியாற்றுவதற்காகவும், மாடுகள், செம்மறி ஆடுகள், மற்றும் குதிரைகள் ஆகியவற்றைக் கவனிப்பதற்காகவும் நூற்றுக்கணக்கானவர்களை நியமனம் செய்தனர். .

சிபனாஸ் ஜனாதிபதி மாளிகை நெதர்லாந்து கிழக்கு-தீவுகளின் பல கவர்னர்கள்-ஜெனரல் மற்றும் அவர்களது குடும்பங்களின் குடும்ப இல்லமாகவும் செயல்பட்டு வந்தது. அவர்களில் ஆண்ட்ரீஸ் கார்னெலிஸ் டிர்க் டி கிராஃப் மற்றும் குடும்பத்தினர் (1926-1931), போனிஃபேசியஸ் கார்னெலிஸ் டி ஜோங் (1931) ஆகியோர் இருந்தனர். கடைசியாக அங்கு இருந்தவர் அலிடியஸ் டார்டா வான் ஸ்டார்கன்போர்க் ஸ்டாச்சுவர் ஆவார். 1942 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்தியர்களை ஜப்பானியர் பிடிப்பதற்கு ஆக்கிரமிப்பு சற்று முன்பு வரை அவர்கள் இருந்தனர். அங்கிருந்து அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஜப்பானிய கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சீனாவின் ஹ்சியனில் உள்ள மஞ்சூரியன் முகாமுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சுகர்னோ சிபனாஸ் அரண்மனைக்கு அடிக்கடி வருகை தந்தார்.முக்கியமாக அவரது உரைகளுக்கு உத்வேகம் தேடும் இடமாகவும், குறிப்பாக ஆகஸ்ட் 17 ஆம் நாளன்று நாட்டின் சுதந்திரம் தொடர்பான விழிப்புணர்வினை உண்டாக்கவும் அவர் அங்கு இருந்தார். சுகர்னோவின் மனதில் தேங்கியிருந்த அனைத்து எண்ணங்களையும் எழுத்துக்களாக காகிதத்தில் வெளிப்படுத்துவதற்கான ஈர்த்த ஒரு காந்தம் போல அமைதியான சிபனாவின் குளிர்ந்த சூழ்நிலை அவரக்கு தென்பட்டது. 1953 ஆம் ஆண்டில் ஹார்டினியுடன் சுகர்னோ தனது திருமண விழாவை சிபனாஸ் அரண்மனையில்தான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .[1]

கட்டுமானம்

தொகு

இந்த அரண்மனை முதலில் ஒரு உல்லாச விடுதி எனப்படுகின்ற தங்கும் இடமாகவும், டச்சு ஆட்சியின் போது தற்காலிகமாக அவசரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இடமாகவும் அமைந்திருந்தது. அரண்மனையின் பகுதிகள் தோட்ட பகுதி மற்றும் வனப்பகுதி என இரண்டு நிலையில் பிரிக்கப்பட்டு அமைந்திருந்தன. 2001 ஆம் ஆண்டு வரை, அரண்மனையின் வனப்பகுதிகளில் 1,334 மாதிரிகள், 171 இனங்கள், 132 இனங்கள் ஆகியவை காணப்பட்டன (அவற்றில் 14 மட்டுமே இனம் காணப்பட்டன). மேலும் இங்கு 61 வகையான தாவர மற்றும் விலங்கினங்கள் காணப்பட்டன.[2]

ஜனாதிபதி மாளிகையில் ஒரு முதன்மைக் கட்டிடம், ஆறு பெவிலியன்கள், ஒரு சிறப்பு கட்டிடம் மற்றும் இரண்டு கட்டிடங்கள் ஆகியவை உள்ளன. ஒன்று சூடான நீரூற்று நீர்த்தேக்கமாகவும், மற்றொன்று மசூதியாகவும் உள்ளன.

பிற அரண்மனைகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Sejarah Singkat Istana Cipanas" (in இந்தோனேஷியன்). Archived from the original on June 8, 2014. பார்க்கப்பட்ட நாள் Jun 7, 2014.
  2. "Profile Istana Cipanas" (in இந்தோனேஷியன்). Archived from the original on 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபனாஸ்_அரண்மனை,_சிபனாஸ்&oldid=4062688" இலிருந்து மீள்விக்கப்பட்டது