கெதுங் அகுங், யோக்யகர்த்தா
கெதுங் அகுங் (Gedung Agung) (ஆங்கிலம் : தி கிரேட் பில்டிங் ) இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது பெரிய கட்டடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை யோக்யகர்த்தா நகரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகம் சுமார் 4.4 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது விரேடெபர்க் கோட்டைக்கு முன்னால் அமைந்துள்ளது.[1]
கெதுங் அகுங் | |
---|---|
Gedung Agung | |
கெதுங் அகுங், யோக்யகர்த்தா | |
Location in யோக்யகர்த்தா | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்தோனேசிய காலனிய கட்டடக்கலை |
இடம் | ஜலான் அகமத் யாணி, கொண்டோமனம், யோக்யகர்த்தா |
ஆள்கூற்று | 7°48′01″S 110°21′52″E / 7.800227358721231°S 110.3645401729129°E |
கட்டுமான ஆரம்பம் | 1869 |
கட்டுவித்தவர் | யோக்யகர்த்தா ஆளுநரின் இல்லம் |
வரலாறு
தொகுஇந்தக் கட்டடம் முதலில் 1824 ஆம் ஆண்டில் யோககர்த்தாவில் வசிக்கும் 18 வது டச்சு குடியிருப்பாளரான அந்தோனி ஹென்ட்ரிக்ஸ் ஸ்மிசெர்ட் என்பவருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் கட்டப்பட்டது. முதல் கட்டிடம் ஏ. பேயன் என்ற கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். அது வழக்கமான இண்டீய வெப்பமண்டல கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டு அமைந்துள்ளது. இதன் கட்டுமானம் அப்போது நிகழ்ந்த ஜாவானிய இளவரசரான டச்சு காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து வந்த டிபோனெகோரோ தலைமையிலான கிளர்ச்சியின்போது நடைபெற்ற ஜாவா போரினால் தாமதம் ஆனது. இதன் கட்டுமானப் பணி 1832 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது.
ஜூன் 10, 1867 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு பூகம்ப அதிர்வு முதல் அரண்மனையை கவிழ்த்து விட்டது. 1869 ஆம் ஆண்டில் அந்தக் கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டது. 1927 டிசம்பர் 19 ஆம் நாளன்று யோக்யகர்த்தாவின் நிலை குடியிருப்பாளரிடமிருந்து ஒரு மாகாணத்திற்குக் கைமாறியது. இதனால் கட்டிடம் ஆளுநர் அலுவலகமாக அமைய வேண்டும் என்ற நோக்கம் மாறியது.
இந்தோனேசிய நாட்டுச் சுதந்திரப் போராட்டத்தின் போது, தலைநகர் ஜகார்த்தா நேச நாட்டுப் படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசாங்கம் 6 ஜனவரி 1946 ஆம் நாளன்று யோக்யகர்த்தாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அரண்மனை 1946 ஆம் ஆண்டு மற்றும் 1949 ஆம் ஆண்டுக்கு இடையில் ஜனாதிபதி சுகர்ணோ இல்லமாக மாற்றம் பெற்றது. 1949 டிசம்பர் 28 ஆம் நாளன்று அரசாங்கம் ஜகார்த்தாவுக்கு மாற்றப்படும் வரை இந்நிலையில் இருந்தது.[2]
இந்தோனேசியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக சுகார்த்தோ பதவிக்கு வந்த பின், இந்தோனேசியாவின் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆகஸ்ட் 17 ஆம் நாளன்று அரண்மனை பிற்பகல் அணிவகுப்பு நடத்தப்படுகின்ற இடமாக மாற்றம் பெற்றது. பின்னர் 1991 ஆம் ஆண்டில் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட முதல் அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற வகையில் ஒவ்வொரு நொடியையும் கொண்டாட இந்த கட்டிடம் பயன்படுத்தப்படுகிறது.[3]
வசதிகள்
தொகுகட்டிடத்தின் முற்றத்தில் இரண்டு மீட்டர் உயரம் உள்ள "துவாரபாலா" எனப்படுகின்ற இரு பாதுகாவலர் சிலைகளும், 3.5 மீட்டர் உயரம் உள்ள "துகு தாகோபா" என்ற ஆண்டிசைட்டால் செய்யப்பட்ட நினைவுச்சின்னமும் உள்ளன. பரந்து அமைந்துள்ள அரண்மனை வளாகத்தில் மொத்தம் 26 கட்டிடங்கள் காணப்படுகின்றன. அந்தக் கட்டடங்களில் மிகவும் முக்கியமானது வருகின்ற விருந்தினர்களை உபசரிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற "கெடுங் இந்துக்" (தாய் கட்டிடம்) எனப்படுகின்ற முதன்மை பார்வையாளர் அரங்கம் ஆகும்.[2]
பார்வையாளர் அனுமதி இல்லை
தொகுஇது யோக்யகர்த்தாவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் மாளிகை ஆகும். இந்த ஜனாதிபதியின் மாளிகைக்குள் அனைவரும் செல்ல அனுமதி இல்லை. இந்த அரண்மனைக்கும்ம் க்ரேட்டான் என்னுமிடத்தில் அமைந்துள்ள ராயல் அரண்மனைக்கும் வேறுபாடு உண்டு. க்ரேட்டான் ராயல் அரண்மனை எனப்படும் சுல்தான் அரண்மனையில் பார்வையாளர்கள் (மதியம் இந்த அரண்மனை மூடப்பட்டிருக்கும்) சென்று பார்வையிடலாம்.[4]
பிற அரண்மனைகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Benteng Museum marks RI fight for independence", Jakarta Post, Financial Times Ltd, pp. JAPO12586293, 2000-08-29, பன்னாட்டுத் தர தொடர் எண் 0215-3432
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ 2.0 2.1 [1] பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், setneg.go.id
- ↑ Gedung Agung பரணிடப்பட்டது 2018-03-16 at the வந்தவழி இயந்திரம், Gedung Agung
- ↑ Presidential Palace