இஸ்தானா நெகாரா (ஜகார்த்தா)
இஸ்தானா நெகாரா (Istana Negara) (ஆங்கிலம் : மாநில அரண்மனை, டச்சு: Paleis te Rijswijk) இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது மத்திய ஜகார்த்தாவில் வெட்டரன் தெரு என்ற முகவரியில் அமைந்துள்ளது, மெர்டேகா அரண்மனை இதன் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது மொத்தம் 68,000 மீ² பரப்பளவைக் கொண்ட ஜனாதிபதி அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மேலும் மூன்று கட்டிடங்களுடன் முன்னர் ஜனாதிபதி அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவை முன்னர் ஜனாதிபதி அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட பினா கிரஹா, மாநில விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தப்பட்ட விஸ்மா நெகாரா மற்றும் இந்தோனேசியாவின் மாநில செயலக அமைச்சகத்திற்காக அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட அலுவலகம் ஆகியவை உள்ளன.இஸ்தானா நெகாரா மேற்கூறிய தெருவை நோக்கி வடக்கு நோக்கிய திசையில் அமைந்துள்ளது. மெர்டேகா அரண்மனை மெர்டேகா சதுக்கம் மற்றும் தேசிய நினைவுச்சின்னம் (மோனாஸ்) ஆகியவற்றை நோக்கிய வகையில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
தொகுதுவக்கம்
தொகுகட்டிடத்தின் கட்டுமானம் 1796 ஆம் ஆண்டில் தொடங்கியது. இது 1810 ஆம் ஆண்டு மற்றும் 1819 ஆம் ஆண்டுக்கு இடையில் அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த டச்சுக்காரரான ஜேக்கப் ஆண்ட்ரீஸ் வான் பிராம் என்பவரால் கட்டப்பட்டதாகும். இவர் இதனை தன்னுடைய சொந்த இல்லமாகப் பாவித்து வந்தார். இது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரபலமானக் காணப்பட்ட கட்டிடக்கலை பாணியான இண்டீஸ் எம்பயர் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு அழகான இரண்டு மாடி கட்டிடமாகும். இந்தக் கட்டிடம் ரீஸ்விக்-மூலென்விலெட்டுக்கு (தற்போதைய ஹார்மோனி) அருகில் கட்டப்பட்டதாகும். அந்தக் காலகட்டத்தில் பத்தேவியாவின் போவன்ஸ்டாட்களில் ( "அப்டவுன்"). சிறந்த கட்டடமாக அது கருதப்பட்டது.கவர்னர் ஜெனரல் பீட்டர் ஜெரார்டஸ் வான் ஓவர்ஸ்ட்ரேட்டனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது, அதற்கு முன்பாக அவர் மற்றொரு ஆடம்பரமான குடியிருப்பான, பின்னர் ஹோட்டல் டெர் நெடெர்லாண்டனாக மாறிய கட்டடத்தைக் கட்டியிருந்தார்.[2] கட்டுமானத்தை நிறைவு செய்ய பல ஆண்டுகள் ஆனது. கடைசியாக 1804 ஆம் ஆண்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.[3]
ஆங்கிலேயர் காலம்
தொகுகட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், ஆங்கிலேயர் ஆட்சியில் கீழ் பிரித்தானிய கமிஷனராக இருந்த ஹக் ஹோப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. [4] வான் பிராம் கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் இருந்த ஒரு சிறிய கட்டடத்தில் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தார்.[2]
கவர்னர் ஜெனரலின் குடியிருப்பு
தொகுஜே.ஏ. வான் பிராமின் மரணத்திற்குப் பிறகு, இந்த வீடு 1816 ஆம் ஆண்டு டச்சு அரசாங்கத்தால் வாங்கப்பட்டது. இந்த கட்டிடத்தை அனைத்து நிர்வாகங்களின் மையமாகவும், படேவியாவில் தங்கியிருந்த கவர்னர் ஜெனரலின் உத்தியோகபூர்வ இல்லமாகவும் அரசாங்கம் பயன்படுத்தி வந்தது. வாட்டர்லூப்லினில் உள்ள டச்சு தீவுகளின் ஆளுநர் ஜெனரலின் உத்தியோகபூர்வ இல்லமாக டேன்டெல்ஸ் கட்ட விரும்பிய மிகப் பெரிய கட்டிடத்தின் பணி தாமதமானது, அதன் காரணமாக இதனை 1828 ஆம் ஆண்டில் கட்டடப் பணி நிறைவுற்ற பின்னரும்கூட ஆளுநர் ஜெனரலுக்கான இல்லமாக ஒருபோதும் பயன்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.[5] கவர்னர் ஜெனரலின் அலுவலகபூர்வ இல்லமாக, வான் பிராமின் இல்லத்திற்கு ஹோட்டல் வான் டென் கவர்னர்-ஜெனரல் (கவர்னர் ஜெனரலின் ஹோட்டல்) என்று பெயர் சூட்டப்பட்டது.
அரண்மனையில் ஒவ்வொரு புதன்கிழமையும் விழாக்கள் அல்லது இண்டீஸ் கவுன்சில் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் பெற்றன. கோடர்ட் வான் டெர் கபெலன் 1820 ஆம் ஆண்டில் அரண்மனையில் அதிகாரப்பூர்வமாக வசித்த முதல் கவர்னர் ஜெனரலாக ஆனார். இருந்த போதிலும் பொகோரில் இருந்த பொகோர் அரண்மனை முக்கியமான தங்குமிடமாக மாறியது. போகோர் மலைப் பகுதியில் காணப்பட்ட மிதவெப்ப சூழல் காரணமாக அது முக்கியமான வசிப்பிடம் ஆனது.
1848 ஆம் ஆண்டில், கட்டிடத்தின் முதல் தளம் அகற்றப்பட்டது [6] மற்றும் கோனிங்ஸ்பிளெயின் எனப்படும் மெர்டகா சதுக்கத்தை நோக்கிய நிலையில் அமைந்திருந்த அறை மறுபடியும் உருமாற்றம் பெற்றது. அதன் காரணமாக வெளிப்புறத்திற்கு அதிகமான இடம் கிடைத்தது. [7]
இஸ்தானா மெர்டேகா விரிவாக்கம்
தொகுபின்னர் அரண்மனை அதிகரித்த நிர்வாகத் தேவை காரணமாக அந்த இடம் சிக்கலாக, பணியாற்ற சிரமமான இடமாக அமைந்தது. இதனால் 1869 ஆம் ஆண்டில் ஒரு புதிய அரண்மனையைக் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டது. புதிய அரண்மனை 1873 ஆம் ஆண்டில் கோனிங்ஸ்பிளெயின் எனப்படும் மெர்டகா சதுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கட்டி முடிக்கப்பட்டது. இது கோனிங்ஸ்பிளெயின் அரண்மனை என்று அழைக்கப்பட்டது. அரண்மனையுடன் இணைந்து .ரிஜ்ஸ்விஜ்கில் உள்ள கவர்னர் ஜெனரலின் அரண்மனை வளாகமாக உருப்பெற்றது.
1875 ஆம் ஆண்டில், இந்த வளாகத்தில் புதிய இரும்பு வேலி பொருத்தப்பட்டது. அரண்மனையின் அலுவலர்கள் தங்குவதற்கு கூடுதலாக வீடுகள் கட்டப்பட்டன. [4]
ஜப்பானிய ஆக்கிரமிப்பு
தொகு1942 ஆம் ஆண்டில் ஜப்பானியர்கள் டச்சு கிழந்தியர்கள்மீது படையெடுத்து, கைப்பற்றினர். கவர்னர் ஜெனரல் டிஜார்டா வான் ஸ்டார்கன்போர்க் 1942 மார்ச் 8 ஆம் நாளன்று அரண்மனையில் ஜப்பானிய இராணுவத்திடம் சரணடைவது தொடர்பாகக் கையெழுத்திட்டார். ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்குப் பின்னர், சைக்கோ ஷிகிகனின் (இராணுவத் தளபதி) வசிப்பிடமாக இவ்விடம் மாறியது. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானியர்கள் சரணடையும் வரை அந்த நிலை நீடித்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, கட்டிடத்தின் முன் முகப்பில் இருந்த நெதர்லாந்தின் சிங்க சின்னம் அகற்றப்பட்டது.
அந்தக் கட்டடம் கட்டப்பட்ட முதல் அங்கு பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் சில ஆளுநர் ஜெனரல் கிராஃப் வான் டென் போஷால் கலாச்சார ஸ்டெல்செல் முறையை அறிவித்தல், மார்ச் 25, 1947 ஆம் நாளன்று லிங்கட்ஜாதி ஒப்பந்தத்தின் ஒப்புதல் விழா மற்றும் 27 டிசம்பர் 1949 ஆம் நாளன்று இந்தோனேசியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் அடங்கும்.[3]
பிற அரண்மனைகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Istana Negara பரணிடப்பட்டது 2019-12-02 at the வந்தவழி இயந்திரம். Accessed 8 October 2018.
- ↑ 2.0 2.1 Dinas Museum dan Sejarah 1986, ப. 5.
- ↑ 3.0 3.1 ISTANA-ISTANA KEPRESIDENAN REPUBLIK INDONESIA பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், setneg.go.id
- ↑ 4.0 4.1 Djawatan Penerangan Kotapradja Djakarta Raya 1957, ப. 150.
- ↑ Palace of Daendels பரணிடப்பட்டது 2016-07-07 at the வந்தவழி இயந்திரம், jakarta.go.id
- ↑ Djawatan Penerangan Kotapradja Djakarta Raya 1957.
- ↑ Dinas Museum dan Sejarah 1986.
வெளி இணைப்புகள்
தொகு- இஸ்தானா நெகாரா சுயவிவரம் பரணிடப்பட்டது 2010-06-26 at the வந்தவழி இயந்திரம் (in Indonesian)
- இஸ்தானா நெகாரா வரலாறு பரணிடப்பட்டது 2010-06-07 at the வந்தவழி இயந்திரம் (in Indonesian)