இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு
இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு (ஆங்கிலம்: Proclamation of Indonesian Independence; இந்தோனேசியம்: Proklamasi Kemerdekaan Indonesia) என்பது நெதர்லாந்து நாட்டில் இருந்து இந்தோனேசியா விடுதலை பெறுவதாக அறிவிக்கப்பட்ட நாளைக் குறிப்பிடுவதாகும்.
சுகார்னோ இந்தோனேசியாவின் விடுதலையை அறிவிக்கிறார். அருகில் முகமது அட்டா | |
நாள் | 17 ஆகத்து 1945 |
---|---|
நேரம் | காலை 10:00 இந்தோனேசிய நேரம் (ஒ.ச.நே + 09:00) |
இடம் | 56-பெகாங்சான் தைமூர் சாலை; சுகார்னோவின் இல்லம் |
அமைவிடம் | ஜகார்த்தா |
பங்கேற்றோர் | கையொப்பமிட்டவர்கள்: சுகார்னோ முகமது அட்டா |
இந்தோனேசிய விடுதலை நாள் |
17 ஆகத்து 1945, வெள்ளிக்கிழமை, தோக்கியோ நேரப்படி காலை 10:00 மணிக்கு, ஜகார்த்தா, 56-பெகாங்சான் தைமூர் சாலை (Jalan Pegangsaan Timur), சுகார்னோவின் வீட்டில் இருந்து; சுகார்னோவினால் இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிக்கப்பட்டது.[1][2] இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு ஆவணத்தில் சுகார்னோ மற்றும் முகமது அட்டா (Mohammad Hatta) ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். அவர்கள் முறையே அதிபர் மற்றும் துணை அதிபராக அடுத்த நாள் நியமிக்கப்பட்டனர். 18 சூன் 1946 அன்று, வெளியிடப்பட்ட அரசாங்க தீர்ப்பாணையின் மூலம் இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிக்கப்பட்ட தேதி பொது விடுமுறை நாளாக மாற்றப்பட்டது.[3]
இந்தோனேசியாவில் பல புரட்சிகள் ஏற்படுவதற்கும்; டச்சுக்காரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் நடைபெறுவதற்கும்; மேலும் பல ஆர்ப்பாட்டத் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும்; இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு ஒரு மூலகாரணமாக அமைந்தது.
பொது
தொகுஅந்த அறிவிப்பிற்குப் பின்னர், இந்தோனேசிய தேசியப் புரட்சி (Indonesian National Revolution) உருவானது; மற்றும் டச்சுக்காரர்களுக்கு எதிராக இந்தோனேசியர்களின் ஆயுதமேந்திய எதிர்ப்புகளும் தொடங்கின. 1949-இல் இந்தோனேசியாவின் விடுதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரையில், நெதர்லாந்து நாட்டிற்கு எதிரான போராட்டங்கள்; மற்றும் டச்சு சார்பு இந்தோனேசிய மக்களுக்கு (Pro-Dutch civilians) எதிரான போராட்டங்களும் தொடர்ந்தன.[1]
1942-ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது இந்தோனேசியாவை ஜப்பானியர்கள் கைப்பற்றிய போது, டச்சுக்காரர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறினர். அதன் பின்னர் ஜப்பானியர்கள் இந்தோனேசியாவை மூன்று ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். ஜப்பானியர்கள் இந்தோனேசியாவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் போது, இந்தோனேசியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
ஜப்பானியர் முடிவு
தொகுஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவை மீண்டும் ஆட்சி செய்யத் தொடங்கினால், அவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தோனேசியாவிற்கு விடுதலை வழங்க ஜப்பானியர் முடிவு செய்தனர். ஆகத்து 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன.[4][5]
அதன் பின்னர், இந்தோனேசியா ஜப்பான் நாட்டுத் தரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலமாக இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gouda 2002, ப. 36.
- ↑ Gouda 2002, ப. 119.
- ↑ Raliby 1953, ப. 621–622.
- ↑ Ricklefs 2008, ப. 339–340.
- ↑ Anderson 1972, ப. 62–63.
- ↑ Ricklefs 2008, ப. 340–341.
- ↑ Anderson 1972, ப. 66–69.
சான்றுகள்
தொகு- Anderson, Benedict (1961). Some Aspects of Indonesian Politics under the Japanese occupation, 1944–1945. Cornell University. Dept. of Far Eastern Studies. Modern Indonesia Project. Interim reports series. Ithaca, N.Y.: Cornell University.
- Anderson, Benedict (1972). Java in a Time of Revolution: Occupation and Resistance, 1944–1946. Ithaca, N.Y.: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0687-0.
- Gouda, Frances (2002). American visions of the Netherlands East Indies/Indonesia: US foreign policy and Indonesian nationalism, 1920–1949. Amsterdam: Amsterdam University Press.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Post, Peter; Frederick, William H.; Heidebrink, Iris; Sato, Shigeru, eds. (2010). The Encyclopedia of Indonesia in the Pacific War. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-16866 4.
- Prastiwi, Devira (2019). "Nani Wartabone dan Proklamasi Kemerdekaan 23 Januari 1942". Liputan6.com. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
- Raliby, Osman (1953). Documenta Historica: Sedjarah Dokumenter Dari Pertumbuhan dan Perdjuangan Negara Republik Indonesia (in இந்தோனேஷியன்). Jakarta: Bulain-Bintag.
- Reid, Anthony (1974). The Indonesian National Revolution 1945–1950. Melbourne: Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-71046-4.
- Ricklefs, M.C. (2008) [1981]. A History of Modern Indonesia Since c. 1300 (4th ed.). London: MacMillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-54685-1.
- Vickers, Adrian (2013). A history of modern Indonesia. New York: Cambridge University Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1139447614.