இந்தோனேசிய துணை அதிபர்

இந்தோனேசிய அரசாங்கத்தின் இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரி

இந்தோனேசிய துணை அதிபர் அல்லது இந்தோனேசிய குடியரசின் துணைத் தலைவர் (ஆங்கிலம்: Vice President of Indonesia; இந்தோனேசியம்: Wakil Presiden Republik Indonesia) என்பவர் இந்தோனேசிய அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவில் இந்தோனேசிய அதிபருக்குப் பிறகு இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரி ஆவார். இவர் இந்தோனேசிய அதிபருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

இந்தோனேசிய துணை அதிபர்
Vice President of Indonesia
Wakil Presiden Republik Indonesia
துணை அதிபர் சின்னம்
தற்போது
ஜிப்ரான் ரகபுமிங் ரகா

20 அக்டோபர் 2024 முதல்
இந்தோனேசிய அரசாங்கம்
பதவிஇரண்டாவது மிக உயர்ந்த செயலர்
வாழுமிடம்இந்தோனேசிய துணை அதிபர் அரண்மனை
அலுவலகம்ஜகார்த்தா
நியமிப்பவர்இந்தோனேசிய பொதுத் தேர்தல்கள்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
அரசமைப்புக் கருவிஇந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்
முதலாவதாக பதவியேற்றவர்முகமது அட்டா
உருவாக்கம்18 ஆகத்து 1945
ஊதியம்ரூபியா 42,160,000 (மாதம்)[1]
இணையதளம்Official website

தற்போது ஜிப்ரான் ரகபுமிங் ரகா என்பவர் இந்தோனேசியாவின் துணை அதிபராக உள்ளார் இவர் 14-ஆவது துணை அதிபர்; மற்றும் இந்தோனேசியாவின் மிக இளைய துணை அதிபரும் ; இவர் 20 அக்டோபர் 2024 அன்று பதவியேற்றார்.

பொது

தொகு

இந்தோனேசிய துணை அதிபர் பதவி 1945-ஆம் ஆண்டில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது நிறுவப்பட்டது. இந்தப் பதவி முதன்முதலில் 18 ஆகத்து 1945 அன்று முகமது அட்டாவிற்கு வழங்கப்பட்டது.[2]

இந்தோனேசிய துணை அதிபருக்கான வேட்பாளர் பிறப்பிலிருந்து இந்தோனேசிய குடிமகனாக இருக்க வேண்டும்; மற்றும் ஓர் அரசியல் கட்சி அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று 1945-ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் கூறப்பட்டு உள்ளது.[3][4]

தகுதிகள்

தொகு

இந்தோனேசிய துணை அதிபருக்கான தகுதிகள்:[5][6]

  • ஒரே கடவுளை நம்பிக்கை;
  • பிறப்பிலிருந்து இந்தோனேசிய குடிமகனாக இருக்க வேண்டும்;
  • தேசத்திற்கு துரோகம் செய்திருக்கக் கூடாது; எந்த ஊழலோ அல்லது பிற குற்றங்களிலோ ஈடுபட்டு இருக்கக் கூடாது;
  • கடமைகளைச் செய்ய உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்;
  • இந்தோனேசியா குடியரசில் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்;
  • லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் தம்முடைய தனிப்பட்ட சொத்துகள் குறித்து தெரிவித்து இருக்க வேண்டும்;
  • அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய தனிப்பட்ட அல்லது கூட்டுக் கடன்கள் இல்லாமல் இருக்க வெண்டும்;
  • நீதிமன்ற தீர்ப்பின் மூலம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு இருக்கக் கூடாது;
  • எந்த இழிவான செயலிலும் ஈடுபட்டு இருக்கக் கூடாது;
  • வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்;
  • வரி செலுத்துபவராக பதிவு செய்து, குறைந்தபட்சம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வரி செலுத்தி இருக்க வேண்டும்;
  • இதற்கு முன்பு இரண்டு முறை துணைத் தலைவராக இருந்து இருக்கக் கூடாது;
  • பஞ்சசீலா, 1945 அரசியலமைப்பு மற்றும் இந்தோனேசிய விடுதலை அறிவிப்பின் பார்வைக்யில் விசுவாசமாக இருக்க வேண்டும்;
  • ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கக் கூடாது.
  • 35 வயதுக்கும் குறைவாக இருக்கக்கூடாது;
  • குறைந்த பட்சம் மூத்த உயர்நிலைப் பள்ளி அல்லது அதே மட்டத்தில் உள்ள மற்ற பள்ளியில் படித்திருக்க வேண்டும்;
  • இந்தோனேசியாவின் பொதுவுடைமை கட்சியிலோ அல்லது அந்தக் கட்சியின் பொது அமைப்பிலோ ஒருபோதும் உறுப்பினராக இருந்து இருக்கக் கூடாது.
  • துணை அதிபரின் பதவியை நிறைவேற்றுவதற்கான தொலைநோக்கு, நோக்கம் மற்றும் திட்டங்கள் இருக்க வேண்டும்;.

மேற்கோள்கள்

தொகு
  1. Ihsanuddin (28 May 2018). "Megawati Digaji Rp 112 Juta, Lebih Besar dari Gaji Presiden" (in id). Kompas.com. https://nasional.kompas.com/read/2018/05/28/11292861/megawati-digaji-rp-112-juta-lebih-besar-dari-gaji-presiden. 
  2. "[R@ntau-Net] Dr. Muhammad Hatta". www.mail-archive.com.
  3. "[R@ntau-Net] Mengenang Mundurnya Bung Hatta". www.mail-archive.com.
  4. Hughes, John (2002) [1967]. The End of Sukarno: A Coup That Misfired: A Purge That Ran Wild (3rd ed.). Singapore: Archipelago Press. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4068-65-9.
  5. "MPR Dan Pemilihan Presiden Langsung - 2001-11-06". Archived from the original on 25 August 2006.
  6. "Fighting in the Malukus heightens tensions across Indonesia and within the Wahid cabinet". World Socialist Web Site. 10 January 2000.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசிய_துணை_அதிபர்&oldid=4183335" இலிருந்து மீள்விக்கப்பட்டது