இன்சைட் (InSight) என்பது அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பினால் செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலமாகும். இந்த தானியங்கி விண்கலம் 27.11.2018 அன்று திங்கட்கிழமை காலை 01.30 மணியளவில் செவ்வாயில் தரையிறங்கியது.[11] இவ்விண்கலம் செவ்வாய்க் கோளின் மத்திய ரேகைக்கு அருகில் உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கியது.[12] இந்த தானியங்கி விண்கலமானது லாக்கீட் மார்ட்டின் விண்வெளி அமைப்புகள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்த தானியங்கி விண்கலம் நாசாவின் தாரை செலுத்த ஆய்வகத்தால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. இதன் இயக்கமானது 2018 மே 5 ஆம் நாள் தொடங்கியது. அட்லஸ் 5 - 401 என்ற இராக்கெட் மூலம் இந்த தானியங்கி விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது. 2018 நவம்பர் 26 அன்று ஒசநே 19:52:59 அளவில் செவ்வாயில் தரை இறங்கியது.[13][14] இன்சைட் தனது பயணத்தில் 483 மில்லியன் கிலோமீட்டர் (300 மில்லியன் மைல்கள்) தூரத்தைக் கடந்துள்ளது.[15]

இன்சைட்
InSight

திட்ட வகைசெவ்வாய் தரையிறங்கி
இயக்குபவர்நாசா / ஜேபிஎல்
காஸ்பார் குறியீடு2018-042A
சாட்காட் இல.43457
இணையதளம்Mars.NASA.gov/InSight
திட்டக் காலம்திட்டம்: 709 சொல்கள் (2 ஆண்டுகள்)[1][2]
தற்போது: தரையிறங்கிய நாளில் இருந்து 2130 சொல்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புலாக்கீது மார்ட்டின்
ஏவல் திணிவு694 kg (1,530 lb)[3]
Landing mass358 kg (789 lb)[3]
பரிமாணங்கள்அனுப்பும் போது: 6.0 × 1.56 × 1.0 m (19.7 × 5.1 × 3.3 அடி)[4]-
திறன்600 W, சூரிய / Li-அயனி மின்கலம்[3]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்5 மே 2018, 11:05 ஒசநே[5][6]
ஏவுகலன்அட்லஸ் 5 401[7]
ஏவலிடம்வான்டன்பர்க் SLC-3E[7]
செவ்வாய் தரையிறங்கி
தரையிறங்கிய நாள்26 நவம்பர் 2018, 19:52:59 ஒசநே[2]
தரையிறங்கிய பகுதிஎலிசியம் பிளானித்தியா[8][9]
4°30′N 135°00′E / 4.5°N 135.0°E / 4.5; 135.0 (InSight landing site)
செவ்வாய்-ஐ அணுகல்
விண்கலப் பகுதிசெவ்வாய் கியூப் ஒன்று (MarCO)
மிகக்கிட்டவான அணுகல்26 நவம்பர் 2018, 19:52:59 ஒசநே[2]
தூரம்3,500 km (2,200 mi)[10]

டிசுக்கவரி திட்டம்
← கிரெயில் லூசி

செவ்வாயின் மேற்பரப்பில் SEIS என்றழைக்கப்படும் நிலநடுக்கமானி ஒன்றை வைத்தல், செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தின் துல்லியமான முப்பரிமாண மாதிரிகள் வழங்குவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்துதல், கோளின் உட்புறத்தில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றத்தை எச்பி3 எனப்படும் ஒரு வெப்பத்தை ஊடுருவி ஆராயும் முறையின் மூலம் அளந்து அதனை வைத்து செவ்வாயின் தொடக்க கால நிலவியல் பரிணாமத்தைப் பற்றி படிப்பது ஆகியவை இன்சைட் தானியங்கி விண்கலம் ஏவப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களாகும்.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. "InSight Mission Overview". NASA. 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018.
  2. 2.0 2.1 2.2 "Key Facts About NASA's InSight". NASA. 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018.
  3. 3.0 3.1 3.2 "Mars InSight Launch Press Kit" (PDF). NASA/JPL. May 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "InSight Lithograph" (PDF). NASA. July 2015. LG-2015-07-072-HQ. Archived from the original (PDF) on 2017-02-09. பார்க்கப்பட்ட நாள் 2018-11-30.
  5. Chang, Kenneth (5 May 2018). "NASA's InSight Launches for Six-Month Journey to Mars". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/05/05/science/nasa-mars-insight-launch.html. 
  6. Clark, Stephen (9 March 2016). "InSight Mars lander escapes cancellation, aims for 2018 launch". Spaceflight Now. https://spaceflightnow.com/2016/03/09/insight-mars-lander-escapes-cancellation-aims-for-2018-launch/. 
  7. 7.0 7.1 Clark, Stephen (19 December 2013). "Mars lander to launch from California on Atlas 5 in 2016". Spaceflight Now. http://www.spaceflightnow.com/news/n1312/19insight/. 
  8. "NASA Evaluates Four Candidate Sites for 2016 Mars Mission". NASA. 4 September 2013. பார்க்கப்பட்ட நாள் 4 September 2013.
  9. "Single Site on Mars Advanced for 2016 NASA Lander". NASA. 4 March 2015 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222122623/http://insight.jpl.nasa.gov/newsdisplay.cfm?Subsite_News_ID=37592. பார்த்த நாள்: 16 December 2015. 
  10. MarCO: Planetary CubeSats Become Real. Van Kane, The Planetary Society. 8 July 2015.
  11. http://www.dinamani.com/world/2018/nov/27/nasa-insight-mission-has-landed-on-mars-3046907.html
  12. https://www.bbc.com/tamil/science-46353907
  13. https://www.nytimes.com/2018/11/26/science/nasa-insight-mars-landing.html
  14. https://www.theguardian.com/science/live/2018/nov/26/mars-insight-lander-nasa-probe-live-updates
  15. https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7114
  16. "What are InSight's Science Tools?". NASA. Archived from the original on 3 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இன்சைட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • InSight NASA
  • InSight NASA − Mars Exploration Program
  • InSight NASA (video/03:31; 18 November 2018; Details)
  • InSight NASA (video/01:38; 26 November 2018; Landing)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சைட்&oldid=3659705" இலிருந்து மீள்விக்கப்பட்டது