இப்சிதா பிசுவாசு
இப்சிதா பிசுவாசு (Ipsita Biswas) ஓர் இந்தியத் துருவ எறியியல் அறிவியலாளர் ஆவார். 2019ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆயுதப் படைகள், துணை இராணுவப் படைகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, பெண்களுக்கான இந்தியாவின் உயரிய விருதான நாரி சக்தி விருதினைப் பெற்றார்.
இப்சிதா பிசுவாசு | |
---|---|
நாரிசக்தி விருது பெற்ற போது | |
தேசியம் | இந்தியன் |
பணி | துருவ எறியியல் அறிவியலாளர் |
பணியகம் | துருவ எறியியல் ஆராய்ச்சி ஆய்வகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, இந்திய அரசு |
அறியப்படுவது | இந்தியாவின் ஆயுதப் படைகள், துணை இராணுவப் படைகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றுக்கான பங்களிப்புகள். |
வாழ்க்கை
தொகுபிசுவாசு கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்.[1] 1988-இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டுக் கணிதத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[1] முதுநிலை பட்டம் பெற்ற உடனேயே, இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார். இதனைத் தொடர்ந்து 1988ஆம் ஆண்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1998-இல் இந்நிறுவன ஆய்வகமான துருவ எறியியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சேர்ந்தார், இப்போது இந்த ஆய்வகத்தில் மூன்று பிரிவுகளுக்குத் தலைமை தாங்குகிறார்.[1]
உயிர் காக்கும் சாதனங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உடையக்கூடிய தோட்டாக்களை மதிப்பீடு செய்வது இவரது பணியில் அடங்கும். 2016ஆம் ஆண்டில், சம்மு காசுமீரில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தியத் துணை இராணுவப் படைகளால் பயன்படுத்தப்பட்ட குறைந்த அளவிலான நெகிழித் தோட்டாக்களை உருவாக்கிய குழுவிற்கு இவர் தலைமை தாங்கினார். இந்த நெகிழி தோட்டாக்களை தற்போது பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் ஆயுதங்களில் பயன்படுத்தலாம்.
மார்ச் 2019-இல், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டில் குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் இந்தியாவின் பிற பாதுகாப்பு அமைப்புகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால், பெண்களுக்கான இந்தியாவின் உயரிய விருதான நாரி சக்தி விருது "2018" இவருக்கு வழங்கப்பட்டது.[2][3] இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.[4] மேலும், 'தன்னம்பிக்கையில் சிறந்து விளங்குவதற்கான அக்னி விருது' மற்றும் 'இந்திய உயர் சக்தி பொருட்கள் கழக குழு விருது' ஆகிய விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர் கண்டுபிடித்த தோட்டாக்களை ஏகே-47 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படலாம். இவை "இறப்புகளைக் குறைக்கின்றன".[1]
பிசுவாசு மற்றும் இவரது குழுவினர், சுடுகலச் சன்னத்தினை விட கடினமான மேற்பரப்பைத் தாக்கினால் நொறுங்கும் வகையிலான சன்னத்தினை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். வானூர்தி கணிசமான சேதத்தை சந்திக்காது என்ற உறுதியுடன் வானூர்தி கடத்தல்காரர்களை சுட அல்லது சுட அச்சுறுத்தும் வகையில் வானூர்திக் காப்பாளர் இந்த தோட்டாக்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். ஏர் இந்தியா 1999 முதல் இந்த சன்னங்களைப் பயன்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Sharma, Aakriti (2019-05-23). "Meet Ipsita Biswas, scientist who developed non-lethal plastic bullets" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.
- ↑ "TBRL scientist awarded for contribution to research" (in ஆங்கிலம்). 9 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "TBRL scientist bags award from President | Chandigarh News" (in ஆங்கிலம்). 9 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.
- ↑ "Nari Shakti Puraskar - Gallery". பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.