இயெவ்கேனி கசுபெர்சுக்கி

இவ்ஜெனி வலென்டினோவிச் கஸ்பெர்ஸ்கி (Yevgeny Valentinovich Kaspersky, உருசியம்: Евгений Валентинович Касперский; பிறப்பு 4 அக்டோபர் 1965) உருசிய மின்வெளிப் பாதுகாப்பு வல்லுநரும் 4000 ஊழியர்களைக் கொண்டத் தகவல் தொடர்பியல் பாதுகாப்பு நிறுவனமான கஸ்பெர்ஸ்கியின் முதன்மைச் செயல் அலுவலரும் ஆவார். இவர் 1997இல் கஸ்பெர்ஸ்கி ஆய்வக நிறுவனத்தை கூட்டாக நிறுவினார். இந்த ஆய்வகம் அரசு உதவியுடன் நடைபெறும் இணையப் போர் நிகழ்வுகளை அடையாளப்படுத்த உதவியது. மின்வெளிப் போரை தடுக்க பன்னாட்டு உடன்பாடு காணவேண்டியத் தேவையை வலியுறுத்தி வந்தார்.

இயெவ்கேனி கஸ்பெர்ஸ்கி
Евгений Касперский
A headshot of Eugene Kaspersky
பிறப்புஇவ்ஜெனி வலென்டினோவிச் கஸ்பெர்ஸ்கி
4 அக்டோபர் 1965 (1965-10-04) (அகவை 59)
நெவெரெசியிஸ்க், கிராஸ்னதார் பிரதேசம், சோவியத் ஒன்றியம்
இருப்பிடம்மாஸ்கோ
தேசியம்உருசியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மறையீட்டியல், தொலைத்தொடர்பு, கணினி அறிவியல் கழகம்
பணிகசுபெர்சுக்கி ஆய்வக நிறுவனத் தலைவரும் முதன்மை செயல் அலுவலரும்
அறியப்படுவதுகசுபெர்சுக்கி நிறுவனர்
சொத்து மதிப்பு$1.3 பில்லியன் (மே 2017)[1]
வாழ்க்கைத்
துணை
 •  ந்தால்யா கஸ்பெர்ஸ்கி (1986—1998)
பிள்ளைகள்மாக்சிம் (பி. 1989)
இவான் கஸ்பெர்ஸ்கி (பி. 1991)
விருதுகள்
  • உருசிய கூட்டாட்சியின் அரசுப் பரிசு

கசுபெர்சுக்கி 1987இல் இரகசியக் காவல் மற்றும் உளவுத் துறையின் (KGB) தொழில்நுட்பப் பிரிவு நடத்திய உயர்நிலைப் பள்ளியில் கணிதப் பொறியியல், கணினித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். 1989இல் இவருடைய கணினியில் காசுகேடு நச்சுநிரல் தாக்கியதும் இவருக்கு தகவல் தொடர்பியல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்பட்டது; இந்த நச்சுநிரலை நீக்க ஓர் நிரலை எழுதினார். தான் நிறுவிய கசுபெர்சுக்கி ஆய்வகத்தை பாதுகாப்பு ஆய்வின் மூலமும் விற்பனைத் திறன் மூலமும் வளர்த்தார். 2007இல் இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆனார்; இன்றுவரை (2018) இப்பதவியில் நீடித்து வருகிறார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

இளமை வாழ்க்கை

தொகு

கசுபெர்சுக்கி அக்டோபர் 4, 1965இல்[2][3] உருசியாவின்நெவெரெசிஸ்க்கில் பிறந்தார்.[4][5] தமது ஒன்பதாவது அகவையில் மாஸ்கோவின் அண்மைய நகரியத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு வாழலானார்.[3][6] இவரது தந்தை பொறியியலாளர், தாயார் வரலாற்று ஆவணக் காப்பாளர்.[5][6] சிறுவராக இருக்கையிலேயே கணிதத்திலும்[7][8] தொழில்நுட்பத்திலும் [9] ஆர்வம் கொண்டவராக இருந்தார். கணித நூல்களைப் படிப்பதை தமது பொழுபோக்காக வைத்திருந்தார். தமது 14ஆம் அகவையில்[5] கணிதப் போட்டியொன்றில் இரண்டாம் பரிசு பெற்றார்.[3] அதே அகவையில் மாசுக்கோ பல்கலைக்கழகத்தால் கணிதத்தில் சிறப்புக் கல்வி வழங்க நடத்தப்படும் ஏ.என். கோல்மோகொரோவ் தங்குப்பள்ளியில் சேர்ந்தார்.[7][9][10] சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞரணி உறுப்பினராகவும் இருந்தார்.[6][a]

தனது 16ஆம் அகவையில் இரகசியக் காவல் மற்றும் உளவுத் துறையின் (KGB) தொழில்நுட்பப் பிரிவு நடத்திய உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாண்டு கல்வித்திட்டத்தில் இணைந்தார்.[15] இந்தக் கல்வித் திட்டம் உருசியப் படைத்துறை மற்றும் உளவுத் துறைக்கு உளவு அலுவலர்களை தயார்செய்ய முன்னெடுக்கப்பட்டது.[7][8] இந்தக் கல்வித்திட்டத்தின் மூலமாக கணிதப் பொறியியல் மற்றும் கணினிப் பொறியியலில் 1987இல் பட்டம் பெற்றார்.[4][8][15] பட்டப்படிப்பிற்குப் பின்னர் சோவியத் படைத்துறை உளவுப் புலனாய்வுச் சேவையில்[6] மென்பொருள் பொறியியலாளராகப் பணிபுரிந்தார்.[2][10] தமது முதல் மனைவி நதாலியாவை 1987இல் உளவுத்துறை விடுமுறை பொழுதுபோக்கு இடமாகிய செவெர்சுகோயில் சந்தித்தார்.[2]

தனி வாழ்க்கை

தொகு

கசுபெர்சுக்கி தன் மனைவியுடனும் ஐந்து குழந்தைகளுடனும் மாஸ்கோவில் வாழ்ந்து வருகிறார்.[1][16] தனது முதல் மனைவியுடன் 1998இல் மணமுறிவு பெற்றார்.[15] ஏப்ரல் 21, 2011இல் இவரது இருபது வயது மகன் இவான், $4.4 மில்லியன் பிணைப்பணம் கேட்டுக் கடத்தப்பட்டார்.[b] கசுபெர்சுக்கி தனது நட்பு வட்டாரம் மூலமும் உருசியக் காவல்துறை உதவியுடனும் பிணைப்பணம் கேட்ட தொலைபேசி அழைப்பு எண்ணைக் கண்டறிந்தார். பிணையாளர்களுக்கு வலை விரித்து அவரது மகனைக் காப்பாற்றியதுடன் காவல்துறை கடத்தல்காரக் குழுவில் பலரையும் கைது செய்தது.[6][8][17][18] இந்த நிகழ்வு கசுபெர்சுக்கியின் தனிநபர் பாதுகாப்பு குறித்த புரிதலில் தாக்கமேற்படுத்தியது. தற்போது தனக்கான மெய்ப்பாதுகாவலருடனும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் பயணிக்கிறார்.[19]

கசுபெர்சுக்கி உருசியாவின் மிகச்செல்வமிக்க நபர்களில் ஒருவராவார்.[15] இவரது நிகரச் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $1 பில்லியனாகும்.[7] தானுந்து விரைவுப் போட்டிகளில் ஆர்வமிக்க கசுபெர்சுக்கி விரைவோட்டப் பந்தயக் களங்களில் தனது பந்தயத் தானுந்துகளை ஓட்டுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார்.[20] உருசியாவின் பல எரிமலைகளிலும் நெடுநடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெர்ஜின் குழுமத்தின் வணிகமய விண்வெளிப் பயணத் திட்டத்தில் செல்ல தமதுப் பெயரைப் பதிந்துள்ளார்.[19] அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் கசுபெர்சுக்கி[5][19] இவற்றை தமது வலைப்பதிவில் பதிந்து வருகிறார்.[21] இவரது மற்றுமொரு பொழுதுபோக்காக ஒளிப்படக்கலை உள்ளது.[5]

கசுபெர்சுக்கி முறையாக உடையுடுப்பதில் ஆர்வம் கொள்வதில்லை; பெரும்பாலும் ஜீன்சும் சட்டையும் அணிகிறார்.[22]

குறிப்புகள்

தொகு
  1. பொதுவுடமைக் கட்சியின் இளைஞரணியின் அலுவல்முறையான உறுப்பினராவது மாணவர்களின் விருப்பத்தேர்வு என்றாலும் அனைவருக்கும் "மறைமுகமாக கட்டாயமாகும்.[11][12][13][14]
  2. மூலங்களில் எவ்வளவு பிணைப்பணம் கேட்கப்பட்டது என்பதைக் குறித்த முரண் உள்ளன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Profile: Eugene Kaspersky". Forbes.com. https://www.forbes.com/profile/eugene-kaspersky/?list=billionaires. பார்த்த நாள்: 17 May 2017. 
  2. 2.0 2.1 2.2 Salem Press Bios (PDF), Salem Press, archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2015, பார்க்கப்பட்ட நாள் 13 November 2015 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 "Interview: Eugene Kaspersky". Infosecurity Magazine. 17 March 2010. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  4. 4.0 4.1 Spurgeon, Brad (6 November 2014). "Computing a Winning Formula at the Pinnacle of Racing". The New York Times. https://www.nytimes.com/2014/11/07/sports/autoracing/computing-a-winning-formula-at-the-pinnacle-of-racing.html. பார்த்த நாள்: 11 November 2015. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 MacFarquhar, Neil (June 10, 2016). "A Russian Cybersleuth Battles the 'Dark Ages' of the Internet". The New York Times. பார்க்கப்பட்ட நாள் July 13, 2016.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Meet Eugene Kaspersky: the man on a mission to wage war against - and kill". The Age. 1 June 2013. http://www.theage.com.au/it-pro/security-it/meet-eugene-kaspersky-the-man-on-a-mission-to-wage-war-against--and-kill--the-computer-virus-20130526-2n611.html. பார்த்த நாள்: 13 November 2015. 
  7. 7.0 7.1 7.2 7.3 Springer, P.J. (2015). Cyber Warfare: A Reference Handbook. Contemporary World Issues. ABC-CLIO. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-444-5. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  8. 8.0 8.1 8.2 8.3 Graham, L. (2013). Lonely Ideas: Can Russia Compete?. MIT Press. pp. 93–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-31739-9. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  9. 9.0 9.1 Greenemeier, Larry (6 March 2006). "High Five". InformationWeek. 
  10. 10.0 10.1 Kshetri, N. (2014). Global Entrepreneurship: Environment and Strategy. Taylor & Francis. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-74803-8. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  11. Shipler, D.K. (2012). The Rights of the People: How Our Search for Safety Invades Our Liberties. Vintage Series. Vintage Books. p. 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4000-7928-5. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
  12. Harms, J. American Now Departed: How to Save a Life. Lulu.com. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-300-48885-9. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
  13. Shishkov, Y.; Conley, A. (2012). If Guitars Could Talk. Yuriy Shishkov. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-615-58637-3. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
  14. Sakwa, R. (2012). Soviet Politics: In Perspective (in மால்டிஸ்). Taylor & Francis. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-90996-4. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
  15. 15.0 15.1 15.2 15.3 Shachtman, Noah (19 April 2011). "Russia's Top Cyber Sleuth Foils US Spies, Helps Kremlin Pals". Wired. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  16. "A Life in the Day of Eugene Kaspersky, Russian cybersecurity multimillionaire". The Sunday Times. 16 August 2015. Archived from the original on 11 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. Kramer, Andrew E.; Perlroth, Nicole (3 June 2012). "Expert Issues a Cyberwar Warning". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2012/06/04/technology/cyberweapon-warning-from-kaspersky-a-computer-security-expert.html?pagewanted=all. 
  18. "Russian software tycoon Kaspersky's son 'missing'". BBC News (Interfax). 21 April 2011. http://www.bbc.co.uk/news/world-europe-13159668. பார்த்த நாள்: 22 April 2011. 
  19. 19.0 19.1 19.2 Palmer, Maija (26 September 2012). "A tech tycoon who values privacy: Entrepreneurship". Financial Times. http://www.ft.com/intl/cms/s/0/3db0fb72-06f0-11e2-92b5-00144feabdc0.html#axzz3t6mslhSv. 
  20. Spurgeon, Brad (7 November 2014). "Computing a winning formula". International New York Times. 
  21. Weissman, Cale Guthrie (16 July 2015). "A look inside the insanely successful life of Russian mathematician and shrewd businessman Eugene Kaspersky". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  22. Hoffman, Stefanie (20 February 2009). "He's Got Kasperskonality". CRN. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.

வெளி இணைப்புகள்

தொகு