இரசியா சேக்

இரசியா சேக் (Razia Sheikh) ஓர் இந்திய முன்னாள் தடகள வீரராவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் போட்டியிட்ட வீராங்கணையாவார். 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் 50 மீட்டர் தூரத்தைத் தாண்டிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை ரசியாவுக்கு உண்டு. [2] 1982 ஆம் ஆண்டு தில்லியிலும் மற்றும் 1986 ஆம் ஆண்டு சியோலிலும் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை ரசியா இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று விளையாடினார். [1]

இரசியா சேக்
Razia Sheikh
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு1958/1959 (அகவை 64–66)[1]
குசராத்து, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல் (விளையாட்டு)

தொழில்

தொகு

1986 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த பிளேமேக்கர்சு தடகள சந்திப்பில் 47.70 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த எலிசபெத் டேவன்போர்ட்டின் 21 வயது சாதனையை இரசியா சேக் முறியடித்து சாதனை படைத்தார். [3] 1987 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரசியா சேக் 50.38 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து ஒரு புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார். இந்த போட்டியில் இரசியா தங்கம் வென்றார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pandya, Hitarth (11 February 2010). "Old masters grab record medals at national championship". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  2. Tere, Tushar (3 August 2010). "This former int'l athlete awaits call from CWG organizers" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/vadodara/This-former-intl-athlete-awaits-call-from-CWG-organizers/articleshow/6253514.cms. பார்த்த நாள்: 9 October 2019. 
  3. Krishnan, Ram Murali. "Sriram celebrates 40 years of his historic record in 800m". indiansportsnews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 9 October 2019. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  4. "Indian Dominate But... Bangladesh sprinters corner glory". The Indian Express: p. 16. 24 November 1987. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசியா_சேக்&oldid=3062836" இலிருந்து மீள்விக்கப்பட்டது