இரட்டை ரோஜா (திரைப்படம்)

கோதண்ட இராமையா இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இரட்டை ரோஜா (irattai roja) 1996 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். கேயார் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம்கி, ஊர்வசி, குஷ்பூ ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. சி. சேகர் பாபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஏப்ரல் 5,1996ம் திகதி வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் 1994 இல் தெலுங்கு மொழியில் வெளியான "சுபலக்னம்" திரைப்படத்தின் மீள்உருவாக்கம் ஆகும்.[1][2]

இரட்டை ரோஜா
இயக்கம்கேயார்
தயாரிப்புகே. சி. சேகர் பாபு
கதைஎன். பிரசன்னகுமார் (வசனம்)
திரைக்கதைகேயார்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜே. ஏ. ரொபட்
படத்தொகுப்புஎஸ். ரமேஷ்
கலையகம்தேவி கமல் பிலிம்ஸ்
விநியோகம்தேவி கமல் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 5, 1996 (1996-04-05)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

உமா (ஊர்வசி), பாலு (ராம்கி) எனும் பொறியியலாளரை திருமணம் செய்கிறாள். உமா தனது கணவர் இலஞ்சம் வாங்குபவராகவும் பணக்காரர் எனவும் எண்ணுகிறாள். ஆனால் பாலு ஒரு நேர்மையான நடுத்தர குடும்பத்து பையன் ஆவான். உமாவிற்கு செல்வந்தராக வரவேண்டும் எனும் கனவு இருந்தது. இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் பிறக்கிறது. அதேநேரம் பாலுவின் முதலாளி ராஜசேகரின் (ராஜசேகர்) மகளான பிரியா (குஷ்பு) பாலுவின் மீது காதல் கொள்கிறாள். பிரியா தன் விருப்பத்தைப் பாலுவிடம் தெரிவிக்க பாலுவோ தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரு பிள்ளைகள் இருப்பதாக கூறி பிரியாவின் விருப்பத்தை நிராகரிக்கின்றான். ஆனால் பிரியாவோ உமாவிடம் ஒரு கோடி பணத்திற்கு பாலுவை விட்டுத்தரும்படி பேரம் பேசுகிறாள். பணத்தின் மீது ஆசை கொண்ட உமா இதற்கு சம்மதிப்பதோடு பாலுவைப் பிரியாவைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்துகிறாள். பாலு இதனை மறுக்க தற்கொலை செய்யச் செல்கிறாள். இதனால் பாலு கனத்த மனதோடு பிரியாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறான். பிரியா மீது காதலும் கொள்கின்றான். இதன்பின்னரே தான் செய்தது தவறு என உமா உணர்வதோடு பாலுவோடு திரும்பவும் சேர்வதற்கு விரும்புகிறாள். அதன்பின்னர் பிரியா, உமா, பாலு ஆகியோருக்கு இடையில் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

 • ராம்கி- பாலு
 • ஊர்வசி - உமா
 • குஷ்பு - பிரியா
 • சுஹாசினி மணிரத்னம் - கீதா
 • ஸ்ரீவித்யா - வக்கீல்
 • வெண்ணிற ஆடை மூர்த்தி- உமாவின் தந்தை
 • கவிதா- உமாவின் தாய்
 • ராஜசேகர் - ராஜசேகர் (பிரியாவின் தந்தை)
 • சின்னி ஜெயந்த்
 • பாண்டு
 • தியாகு
 • அனுஜா
 • சகிலா
 • சார்மிலி - கிரிஜா
 • எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி
 • ஒரு விரல் கிருஷ்ணா ராவோ - வைத்தியர்
 • ஜுனியர் பாலையா
 • சுவாமிநாதன்
 • டிஸ்கோ சாந்தி
 • அஜய் - ரத்னம்
 • பேபி ஸ்ரீதேவி - சமதி
 • மாஸ்டர் பிரபு
 • விசு (சிறப்பு தோற்றம்)

தொலைக்காட்சித் தொடரை பார்க்க தொகு

இசை தொகு

இத்திரைப்படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார். இத்திரைப்படத்திற்கான இசை வெளியீடு 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திரைப்படத்தின் பாடல்வரிகளை வாலி எழுதினார்.[3]

மேற்கோள்கள் தொகு

 1. "Filmography of Irattai roja". cinesouth.com. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
 2. "Irattai Roja (1996) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
 3. "Irattai Roja - Illayaraja". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_ரோஜா_(திரைப்படம்)&oldid=3659449" இலிருந்து மீள்விக்கப்பட்டது