இரபீக் கசுனவி

இந்திய நடிகர்

இரபீக் கசுனவி (Rafiq Ghaznavi) (1907 – மார்ச் 2, 1974) இவர் பிரித்தானிய இந்தியாவில் இசைக்கலைஞராகவும், [2] நடிகராகவும் இருந்தார். அப்துல் ரஷீத் கர்தாரின் 'ஹீர் ரஞ்சா' (1932), மெஹபூப் கானின் 'தக்தீர்' ( 1943), 'ஏக் தின் கா சுல்தான்' (1945) போன்றப் படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது. [3] இவர், லாகூரின் இசுலாமியா கல்லூரியில் கல்வி பயின்றார்.

இரபீக் கசுனவி
பிறப்பு1907[1]
இராவல்பிண்டி, பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2 மார்ச் 1974[1]
கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான்
பணிஇசையமைப்பாளர், நடிகர்
வாழ்க்கைத்
துணை
அன்வாரி பேகம்

இவரது மூதாதையர்கள் முதலில் ஆப்கானித்தானின் காசுனியில் இருந்து வந்தவர்கள். 1947 இல் இந்தியப் பிரிப்புக்குப் பின்னர், இவர் பாக்கித்தானின் லாகூருக்கு குடிபெயர்ந்தார். பின்னர், இவர் பாக்கித்தானின் கராச்சிக்கு குடிபெயர்ந்தார். பாக்கித்தானில், இயக்குனர் அஷ்பக் மாலிக் என்பவரின் திரைப்படமான பர்வாஸ் (1954), இயக்குனர் அஜீஸ் அகமதுவின் மண்டி (1956) ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் இவர் பாக்கித்தானின் வானொலியில் சேர்ந்து, இசை இயக்குனராக வானொலி நிகழ்ச்சிகளுக்கு பிரத்யேகமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

இவர் 1974 மார்ச் 2 அன்று தனது 67 வயதில் கராச்சியில் இறந்தார். [1]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரபீக்_கசுனவி&oldid=3053425" இருந்து மீள்விக்கப்பட்டது