இரவீந்திர வர்மா
இரவீந்திர வர்மா (Ravindra Varma) (9 ஏப்ரல் 1925 - 10 அக்டோபர் 2006) ஓர் காந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1977 முதல் 1979 வரை இந்தியாவில் மொரார்ஜி தேசாய் அமைச்சகத்தில் தொழிலாளர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக பணியாற்றினார்.[2]
இரவீந்திர வர்மா | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 18, 1925 |
இறப்பு | அக்டோபர் 9, 2006[1] | (அகவை 81)
தேசியம் | இந்தியா |
பணி | பொது ஊழியர் |
அறியப்படுவது | நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், காந்தியவாதி |
சுயசரிதை
தொகுஇவர் ஏப்ரல் 18, 1925 அன்று மாவேலிக்கரா அரண்மனையில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர். கே. கோதவர்மா ஒரு புகழ்பெற்ற மொழியியலாளரும் சமசுகிருத அறிஞரும் ஆவார்.
அரசியல்
தொகுஇவர் 1942இல் தீவிர அரசியலில் நுழைந்தார். சென்னையிலுள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கும் போது சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். காந்திஜி தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் முழுநேர சுதந்திரப் போராட்ட வீரரானார். சுதந்திர போராட்டத்திற்கு இந்திய மாணவர்களையும், இளைஞர்களையும் வழிநடத்துவதில் இவர் வலுவான தலைமைத்துவத்தை வழங்கினார். 1946 முதல் 1949 வரை அகில இந்திய மாணவர் காங்கிரசின் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் உலக பல்கலைக்கழக சேவையின் சர்வதேச மாணவர் சேவை பிரிவின் நிர்வாகக் குழுவில் உறுப்பினரானார்.[2]
1949 முதல் 1951 வரை அவர் இந்திய இளைஞர் காங்கிரஸின் அகில இந்திய செயலாளராகவும் பின்னர் 1957 இல் அதன் தலைவராகவும் இருந்தார்.
இவர் இளைய இந்தியா பிரிவின் உலக மன்றத்தின் செயலாளராக இருந்தார். பின்னர் அதன் சர்வதேச தலைவராக 1958 முதல் 1962 வரை இருந்தார். இந்த நேரத்தில் இவர் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா முழுவதும் விரிவாக பயணம் செய்தார். உலகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இணைப்பதில் இந்தப் பயணங்கள் முன்னோடியில்லாத பங்கைக் கொண்டுள்ளன.[2]
1961 இல் இவரது தலைமையில் நிறுவப்பட்ட இந்திய இளைஞர் மையங்கள் பின்னர் சர்வதேச இளைஞர் மையங்கள், விஷ்வா இளைஞர் மையம் என மாறியது. 1996 முதல் தான் இறக்கும் வரை இவர் அவர்களின் தலைவராக இருந்தார். மேலும் இளைஞர்களுக்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்தார். 1958 முதல் 1977 வரை காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்னர் பொது செயலாளராகவும் (1971-74) இருந்தார்.[2]
இவர் முதன்முதலில் 1962இல் கேரளாவின் திருவல்லாவிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969இல் காங்கிரசு பிளவுபட்டபோது, இவர் மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா, காமராசர் ஆகியோருடன் இணைந்து நிறுவன காங்கிரசை நிறுவி அதன் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் நெருக்கடி நிலையை (1975-77) எதிர்ப்பதில் அரசியல் ரீதியாக தீவிரமாக இருந்தார். மேலும், மறைந்து வாழ்ந்து போராட்டங்களையும் ஏற்பாடு செய்தார். இவர் 1977இல் பீகாரில் ராஞ்சியிலிருந்து ஜனதா கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1980 முதல் 1985 வரை ஏழாவது மக்களவையில் வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மக்களவை உறுப்பினராக இருந்தபோது, இவர் அடிக்கடி வெளியுறவு அலுவலகம், பாதுகாப்புத் துறை, நிதி அமைச்சகம், சலுகைக் குழு, விதிகள் குழு ஆகியவற்றின் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.[2]
இவர் விஸ்வ யுவ கேந்திராவின் தலைவராகவும், நிர்வாக அறங்காவலராகவும் இருந்தார். காந்தி அமைதி அறக்கட்டளையின் நிறுவனர்-தலைவர் திவாகர் 1989இல் இறந்த பின்னர், இவர் அதன் தலைவராக இருந்தார். வார்தாவில் காந்தி விசார் அமைப்பின் நிறுவனர்-தலைவராகவும் இருந்தார். குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராகவும் இருந்தார். 1992 இல், வாச்பாய் அரசால் உருவாக்கப்பட்ட இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[2]
சொந்த வாழ்க்கை
தொகுவர்மா தென்னிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள மாவேலிக்கராவில் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவர் 2006 இல், தனது 81 வயதில் இறந்தார்.[3] இவருக்கு ஹர்ஷவர்தன் வர்மா, கௌதம் என்ற இரு மகன்கள் இருந்தனர். இவரது மனைவி மங்களா 2015இல் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "രവീന്ദ്ര വർമ്മ ഡെഡ്". ദി ഹിന്ദു. 2006 ഒക്റ്റോബർ 11 இம் மூலத்தில் இருந்து 2007-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001061923/http://www.hindu.com/2006/10/11/stories/2006101100341400.htm. பார்த்த நாள்: 2013 ജൂൺ 1.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "ആർക്കൈവ് പകർപ്പ്" (PDF). Archived from the original (PDF) on 2013-04-22. பார்க்கப்பட்ட நாள் 2013-06-01.
- ↑ Ravindra Varma dead