இராசா (யானை)
இராசா (Raja) ( சிங்களம்: රාජා ඇතා) (மேலும் மாளிகை ராஜா என்றும் அறியப்படுகிறது) (1913 - 16 சூலை 1988) இது கண்டி, தலதா மாளிகையில் இருந்த ஒரு இலங்கை யானை ஆகும். சுமார் 50 ஆண்டுகளாக கண்டியில் நடைபெற்ற வருடாந்திர எசல ஊர்வலத்தில் பங்கேற்ற இந்த யானை, 37 ஆண்டுகளாக இறுதி இரந்தோலி ஊர்வலத்தில் புனித கலசத்தைத் தாங்கிச் சென்றது. இது, தனது வாழ்நாளில் ஆசியாவில் மிகவும் பிரபலமான யானைகளில் ஒன்றாக இருந்தது. மேலும் தனது நடத்தைக்காக உலகப் புகழ் பெற்றது. இலங்கையின் கலாச்சாரத்திற்கான இதன் மதிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 20, 1986 அன்று, இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இராசாவை ஒரு தேசிய புதையலாக அறிவித்தார். [1]
மாளிகை இராசா | |
---|---|
இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா , இலங்கை, கண்டி, தலதா மாளிகையின் தியவதான நிலமே நிசாங்கே ஜெயரத்னா, ஆகியோருடன் இராசா யானை, 1983 | |
இனம் | இலங்கை யானை |
பால் | ஆண் |
பிறப்பு | 1913 ஏறாவூர், இலங்கை |
இறப்பு | 16 சூலை 1988 (வயது 75) [கண்டி]], இலங்கை |
Resting place | இராசா யானை அருங்காட்சியகம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1937 - 1987 |
Notable role | எசல ஊர்வலத்தின் போது புனித கலசத்தைத் தாங்கிச் செல்லுதல் |
Predecessor | தந்தலூதா |
Successor | அயந்துதுவா இராசா |
உரிமையாளர் | தலதா மாளிகை |
ஆரம்ப ஆண்டுகளில்
தொகுஇராசா 1913ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காடுகளில் பிறந்ததென நம்பப்படுகிறது.[1] நவம்பர் 1925 இல் உமரு இலப்பை பணிக்கர் தலைமையிலான ஒரு குழுவினரால் இது பிடிக்கப்பட்டது. நாட்டின் கிழக்குப் பகுதிகளில் யானைகளைப் பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கு வழங்கப்பட்ட பெயர் பணிக்கர் எண்பதாகும். இளம் யானை ராஜாவை கந்தன் என்ற மற்றொரு இளம் யானையுடன், கண்டியில் உள்ள கிரகாமா வாலாவாவைச் சேர்ந்த திக்கிரிபாண்டா மாம்பிட்டியா திசவே என்பவர் 3300 ரூபாய்க்கு வாங்கியிருந்தார். அந்த நேரத்தில் இது ஒரு பெரிய தொகையாகும்.[2]
பிரிட்டிசு அரசாங்கம் வழங்கிய அனுமதியுடன், யானைகள் இரண்டும் தொடர்வண்டியில் கடுகண்ணவா தொடர் வண்டி நிலையத்திற்கும் பின்னர் சிரகாமா வாலவாவுக்கும் 1925 டிசம்பர் 11 அன்று கொண்டு வரப்பட்டன. இரண்டு யானைகளும் சுமார் 24 வயதை அடைந்தபோது, அவை சடங்கு முறையில் தலதா மாளிகைக்கு பரிசாக வழங்கப்பட்டன. [3]
உன்னத யானை
தொகுஇராசா அரிய கச லட்சண பண்புகளைக் கொண்டிருந்தது. அது இலங்கை யானைகளின் பிரபுத்துவ சாதியினரான சதாந்தாவில் சேர்த்தது . யானையின் சிறந்த உடல் சிறப்பியல்புகளையும் அதன் கீழ்ப்படிதலையும் கவனித்தபின், 1950 ல் எசல ஊர்வலத்தில் புனித கலசத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பு இதற்கு வழங்கப்பட்டது. இராசா அதற்குள், முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, அதன் திறன்களைப் நன்கு வலுபடுத்தியது. இது பல ஆண்டுகளாக ஊர்வலத்தின் பிரதான யானையாக தனது இடத்தை உறுதிப்படுத்தியது. இராஜா ஒருபோதும் தனது மாவுத்தன்களிடம் எந்த பிரச்சனையும் செய்ததில்லை. அவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்தது. இது, எப்போதும் பௌத்த பிக்குகளை மதித்தது. மேலும் தலதா மாளிகையில் இருப்பதையே விரும்பியது.
இறப்பு
தொகுசுமார் 50 ஆண்டுகள் பௌத்த ஊர்வலங்களில் பணியாற்றிய பின்னர், இராஜா 1988 ஜூலை மாதம் ஒரு நோய் காரணமாக இறந்தது. இதன் மரணம் இலங்கையில் ஒரு நாள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது . திசம்பர் 12, 1989 அன்று அதன் நினைவாக ஒரு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது, மேலும், மட்டகிளப்பு, உமரு இலப்பை பணிக்கருடன் 1,000 ரூபாயிலும் இடம் பெற்றது.[1] இராஜாவின் எச்சங்கள் தற்போது பல் ஆலயத்தின் மைதானத்திற்குள் ஒரு சிறப்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[4]
புகைப்படங்கள்
தொகு-
தலதா மாளிகை, கண்டி, இலங்கை
-
இராசாவின் அருங்காட்சியகம்
-
பாடம் செய்யப்பட்ட இராசா
-
இராசாவின் பல்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Raja at Kandy Sri Dalada Maligawa Temple of the Tooth". Elephant Database. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
- ↑ Schokman, Derrick (17 July 2002). "Remembering Raja: The famous Maligawa Tusker". Daily News online இம் மூலத்தில் இருந்து 30 December 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041230193610/http://www.dailynews.lk/2002/07/17/fea07.html. பார்த்த நாள்: 15 September 2012.
- ↑ Nizam, Ifham (2009-06-23). "Remembering Raja". Upali Newspapers Limited.. Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2013-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005043917/http://www.island.lk/2009/06/23/features5.html. பார்த்த நாள்: 2 October 2013.
- ↑ "Sri Dalada Maligawa (Temple of the Tooth Relic)". Living Heritage Trust. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.