இலங்கையின் கலாசாரம்
இலங்கையின் கலாசாரம் பல்வேறுபட்ட காரணிகளால் தாக்கம் செல்லுத்தப்பட்ட போதிலும் அது தன்னுடைய புராதன அம்சங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இலங்கை அதன் நீண்ட வரலாறு மற்றும் பௌத்த பரம்பரையினால் கூடுதலாக தாகத்திற்கு உள்ளாகியது. இந்நாடானது மிகுந்த வளமுள்ள கலைத்திறனான பாரம்பரியம் மற்றும் இசை, நடனம், காட்சிக் கலை ஆகிய நுண் கலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையர்களது வாழ்க்கை முறையானது அவர்களுடைய சமையற்கலை ,திருவிழாக்கள் மற்றும் விளையாட்டு முறைகளில் பிரதிபலிக்கின்றது.இலங்கையில் பல்வேறுபட்ட கோணங்களிலும் தென் இந்தியர்களின் வருகை வெளிபடையாக செல்வாக்கு செலுத்துகின்றது.மேலும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானிய ஆகியவர்களின் குடியேற்றமும் சில துறைகளில் செல்வாக்கு செல்லுத்தி வருகின்றது .வெளிநாடுகளில் இலங்கையின் கலாசாரமானது இலங்கையில் காணப்படும் துடுப்பாட்டம் , உணவு , ஆயுர்வேதம், சமய உருவங்களான பௌத்த கொடி மற்றும் கலாசார ஏற்றுமதிகளான தேநீர் , கறுவா, இரத்தினக்கல் ஆகியவற்றின் காரணமாக பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது .ஒவ்வொரு பிராந்தியத்திலும் இலங்கையின் கலாசாரமானது வேறுபட்டு காணப்படுவதன் காரணமாக இலங்கை கலாசாரத்தில் பல்வகைமையினை காணக்கூடியதாக உள்ளது .
புராதன காலத்திலிருந்து இந்திய துணைக்கண்டத்துடன் இலங்கையின் கலாசாரமானது பின்னிப்பிணைந்துள்ளது. சனத்தொகை: சிங்களவர்கள் 74.8%, இசுலாமியர் 9.23 %, இலங்கை மலையகத் தமிழர் 4.16%, இலங்கைத் தமிழர் 11.21%, ஏனையவை 0.6% [1]
வரலாறு
தொகுஇலங்கையின் புராதன வரலாற்றுப் புகழ்பெற்ற ஆதி நூலாகிய மகாவம்சதினை [2] தன்னகத்தே கொண்டுள்ளதன் காரணமாக இலங்கையானது ஆதிகாலம் முதல் கி.மு 500,000 [3] ஆண்டுவரை உள்ள முழு வரலாற்று விபரங்களையும் கடந்த 2000 வருடமாக வைத்துள்ளது. பல்வேறுபட்ட பிற நாடுகளின் தொடர்ச்சியற்ற செல்வாக்குக் காரணமாக பல்வேறு கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப மாறுதலடைந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனினும் புராதன காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியம் மற்றும் விழாக்கள் என்பன இலங்கையில் தொன்று தொட்டு வளர்ந்து வந்த சிங்கள மக்களால் மாத்திரமல்லாமல் சிறுப்பான்மை மக்களாலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் இலங்கையானது ஒரு தனித்துவம் வாய்ந்த நாடகத் திகழ்கின்றது.
காட்சிக் கலை
தொகுகட்டட நிர்மாணக் கலை
தொகுஇலங்கையில் கி.மு 3ஆம் நூற்றாண்டில் கட்டட நிர்மானக் கலையானது அறிமுகபடுத்தப்பட்டதன் காரணமாக, பௌத்தம் இலங்கையின் கட்டட நிர்மானக் கலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை செலுத்தி உள்ளது.[4] எனினும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் அதன் பாணி இலங்கையின் கட்டட நிர்மானக் கலையில் பிரதான பங்குவகிக்கின்றது.
கலைகளும் நுண்கலைகளும்
தொகுநீண்ட காலமாக காணப்படும் பௌத்த கலாசாரமே பெரும்பாலான கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் தூண்டுதலாக காணப்பட்டது. இதனால் எண்ணற்ற பிராந்தியத்தினையும் உள்ளூர் கலாசாரங்களையும் இக்கலைகளும் நுண்கலைகளும் தன்னகத்தே உள்வாங்கி அதற்கேற்ப தங்களை மாற்றி கொண்டுள்ளன. பெரும்பாலான நிகழ்வுகளில் இலங்கையின் கலைகளானது இறை நம்பிகையினையே பிரதிபலிப்பனவாக காணப்படுகின்றது. இவைகள் ஓவியக் கலை, சிற்பவேலை, கட்டிடக்கலை ஆகியவற்றினூடாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. குகைகளிலும் வணக்கத்தலங்களிலும் காணப்படும் வர்ணம் தீட்டுதல்கள் இலங்கையில் உள்ள கலைகளில் பிரதான இடத்தினை வகிக்கின்றது. இதனை சிகிரியாவில் உள்ள சுவர் ஓவியங்கள் [5], தம்புள்ளை வணக்கத்தலங்கள் மற்றும் கண்டியில் உள்ள தலதா மாளிகை வணக்கத்தலத்தில் காணப்படும் வர்ணம் தீட்டுதல்களில் காணக்கூடியதாக உள்ளது. ஏனைய பிரபல்யமான கலைகள் இலங்கயர்களாலும் குடியேற்றவாசிகளாலும் செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டது. உதாரணமாக பாரம்பரிய கைவினை பொருட்கள், மட்பாண்டம் போன்ற கலைகளினை இலங்கையில் உள்ள மத்திய மலை நாடுகளில் காணலாம். இதேபோன்று போர்த்துக்கேயரின் வருகையினால் லேஸ் வேலைப்பாடுகளையும், இந்தோநேஷியர்களினால் பற்றிக் வேலைப்பாடுகளையும் எடுத்துக்கொள்ளலாம். இவைகளில் வெவ்வேறுவிதமான அழகிய வரைபடங்களைக் காணக்கூடியதாக உள்ளது .
நிகழ்த்துக் கலை
தொகுநடனம்
தொகுகண்டிய நடனத்திற்கு இலங்கையானது பிரபல்யம் பெற்றது. இது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நடனக் கலையாகும். முற்காலத்தில் சமய விழாக்களில் மட்டுமே இக்கலை ஆடப்பட்டு வந்தது. தற்போது ஒரு அரங்கக் கலையாக வளர்ச்சி அடைந்துள்ளது. பெரகராக்களிலும் முக்கிய இடம்பெறுகின்றது.
இசை
தொகுஇரு தனித்துவமான காரணிகளான பௌத்தம் மற்றும் போர்த்துக்கேயர்களின் குடியேற்றம் ஆகியவை இலங்கை இசையில் பிரதானமாக செல்வாக்கு செலுத்தயுள்ளன. கி.மு 300 இல் இலங்கையில் புத்தரின் வருகையின் பின்னர் பௌத்தம் பரவத்தொடங்கியது. அதேவேளை போர்த்துக்கேயர்கள் 15ஆம் நூற்றாண்டில் வருகை தந்த வேளையில் அவர்கள் தங்களுடன் உகுலேலே, கித்தார், பள்ளட்ஸ் ஆகியவற்றினை கொண்டுவந்தனர். அத்துடன் அவர்களுடன் ஆபிரிக்க அடிமைகளும் வருகை தந்ததன் காரணமாக இலங்கையின் இசையில் மேலும் பல்வகைமை ஏற்பட்டது. இவ் அடிமைகள் இலங்கை ஆப்பிரிக்கர் என்று அழைக்கப்பட்டதுடன் அவர்களின் நடன இசையானது பைலா என்று அழைக்கப்பட்டது. பாரம்பரிய இலங்கையின் இசையானது மயக்கமூட்டும் கண்டிய மேளத்தினை (கெட்ட பெரய) உள்ளடக்கி உள்ளது. அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை மேளமடித்தலானது பௌத்தம் மற்றும் இந்துக் கோவில்களில் பிரதான நிகழ்வாக காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் மேற்கத்தைய பிரதேச மக்கள், மேற்கத்தைய நடனம் மற்றும் இசையினை பின்பற்றுகின்றனர்.
திரைப்படம்
தொகு1997ஆம் ஆண்டு சித்திர கலாமூவிடோனின் தயாரிப்பாளரான எஸ். எம். நாயகம் அவர்களினால் தயாரிக்கப்பட்ட கடவுனு பொறந்துவ என்ற திரைப்படமே இலங்கையின் திரைப்படத்துறைக்கு வித்திட்டது. ரண்முத்து துவா என்ற திரைபடத்தின் அறிமுகத்தினை தொடர்ந்து இலங்கையில் கறுப்பு வெள்ளைத் திரைப்படம் எடுக்கப்படுவது குறைந்து நிறத் திரைப்படம் எடுப்பது வழமைக்கு வந்தது.
மிக அண்மைக் காலமாக குடும்பப்பாங்கான இசை நாடகங்கள், சமூக மாற்றங்கள், இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு இடையே காணப்பட்ட முரண்பாடுகளினை மையமாக வைத்து திரைப்படங்கள் திரையிடப்படுவதைக் காணலாம். இவைகளின் திரைப்பட பாணியானது பாலிவுட் திரைப்படங்களினை ஒத்ததாக காணப்படுகின்றது. 1997 ஆம் ஆண்டு திரைப்பட வருகையானது எல்லா நேரமும் உயர் எழுச்சியினை கொண்டதாக காணப்பட்ட போதும் படிப்படியாக அப்போதிருந்து சரிவடையத் தொடங்கியது. இலங்கை திரைப்பட வரலாற்றிலே மிகவும் செல்வாக்கு பெற்ற எழுச்சி உடைய திரைப்பட நிர்மாணியாக லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் காணப்படுகின்றார். இவர் உருவாக்கிய பல திரைப்படங்களில் ரேகாவ (1956), கம்பெரலிய (1964), நிதனய (1970) மற்றும் கொலு ஹடவத (1968) ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. இலங்கையின் நகரப்புரங்களிலே பல்வேறுபட்ட திரையரங்குகளைக் காணக்கூடியதாக உள்ளது.
வாழ்க்கை முறை
தொகுசமையற்கலை
தொகுஇந்தியாவானது குறிப்பாக கேரளாவானது இலங்கையின் சமையற்கலையில் செல்வாக்குச் செலுத்துவதுடன் ஏனைய குடியேற்றவாசிகள் மற்றும் வெளிநாட்டு வியாபாரிகளும் இலங்கையின் சமையற்கலையில் செல்வாக்கு செல்லுத்தி வருகின்றனர். இலங்கையர்கள் நாளாந்தம் சோற்றினை பிரதான உணவாக உண்கின்றனர். அதேவேளை விசேசமான வைபவங்களிலும் இவ்வுணவினை காணலாம். காரமான கறி வகைகள் மதிய உணவின் போதும் இரவு உணவின் போதும் விருப்பமான உணவாக காணப்டுகின்றது. மிகப்பிரபல்யமான அல்கஹோல் பானமாக சாராயம் கருதப்படுகின்றது. பாம் மரச்சாரில் இருந்து இவ் அல்கஹோல் தயாரிக்கப்படுகின்றது. சோறு, கறி உணவுவகைகள் பல்வேறு விதமாக தயாரிக்கபடுகின்றது. இலங்கையர்கள் அப்பத்தினையும் உணவாக உட்கொள்ளுகின்றனர். இவ்வுணவினை இலங்கையின் எல்லா இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
பெரும்பாலான உணவு வகைகள் அவித்த சோற்றினையும் காரமான கறிகளையும் உள்ளடக்கியதாக காணப்படும்.அடுத்து எல்லோருக்கும் தெரிந்த சோற்றுணவாக பாற்சோறு காணப்படுகின்றது.இலங்கையில் காணப்படும் கறிகள் இறைச்சி மற்றும் மீன் கறிகளிற்கு மட்டும் வரையறுக்கப்படாது மரக்கறி மற்றும் பழ வகைகளையும் உள்ளடக்கிய கறிகளினையும் காணக்கூடியதாக உள்ளது.இலங்கை உணவினை எடுத்துகொள்ளும் போது அது ஒரு பிரதான கறியினை கொண்டிருக்கும் (மீன்,கோழி இறைச்சி,ஆட்டுக் கறி)அத்தோடு பல்வேறு விதமான பருப்பு வகை,மரக்கறி வகைகையினை உள்ளடக்கிய வேறு கறிகளும் காணப்படும்.இத்துடன் சட்னி,ஊறுகாய்,சம்பல் போன்ற பக்க உணவுகளும் காணப்படும்.இவை சிலவேளைகள் மிகவும் உரைப்பானதாக காணப்படும். இந்தப்பக்க உணவுகளில் தேங்காய் சம்பலானது மிகவும் பிரபல்யமானது.இது தேங்காய் துருவலுடன் மிளகாய் தூள்,மாசி,தேசிப்புளி என்பன சேர்த்து தயாரிக்கப்படுகின்றது.இந்த சம்பலானது பிசைந்து எடுக்கப்பட்டு சோற்றுடன் பரிமாரப்படுகின்றது.இச்சம்பலானது சாப்பாட்டிற்கு சுவை அளிப்பதுடன் சாப்பாட்டில் விருபத்தினையும் ஏற்படுத்துகின்றது.
இலங்கையர்கள் சம்பலினை விட மாலுங் என்ற உணவினையும் உணவாக உட்கொள்ளுகின்றனர்.இது அரியப்பட்ட இலைகளுடன் தேங்காய்துருவல், வெங்காயம் மற்றும் தேங்காய்ப்பால் என்பவற்றுடன் கலந்து தயாரிக்கபடுகின்றது.சாப்பாட்டிற்கு புது சுவை ஊட்டுவதற்காக இது உணவு வகைகளுடன் வைக்கப்படுகின்றது.
இலங்கையின் பல்வேறு நகரப்புரங்களிலே அமெரிக்க துரித உணவகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன . அதேவளை பெரும்பாலனவர்களினால் அதிலும் குறிப்பாக சமூகத்தில் காணப்படும் மூத்தோர்களினால் விலக்கி வைக்கப்பட்ட இந்த புதிய உணவுப்பழக்கவழக்கத்தினை பெரும்பாலான இளைய தலைமுறையினர் தழுவி வருகின்றனர்.
மசாலாப் பொருள்
தொகுஇலங்கையானது நீண்ட காலமாக மசாலாப்_பொருளிற்கு பிரசித்தி பெற்றது . அதிலும் மிகவும் தெரிந்த கறுவா பட்டையானது இலங்கைக்கு உரித்தானதாக காணப்படுகின்றது . 15 ஆம் மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மசாலாப் பொருள் மற்றும் யானைத்தந்த வணிகர்கள் இலங்கைக்கு அவர்களது தேசிய உணவு வகைகளினை கொண்டு வந்தனர் .அதன் விளைவாக இலங்கையில் பல்வகைமையான சமையல் பாணிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரவின . லம்ப்ரைஸ் சோறானது சரக்கு இருப்புடன் விசேடமான கறியுடன் கொதிக்க வைக்கப்பட்டு அதனுடன் மீட்போலினை சேர்த்து வாழையிலையில் அதனை சுற்றி உயர் வெப்பத்தில் வாட்டப்படும் . இவ் இலங்கை கறியில் ஒல்லாந்தரின் செல்வாக்கு காணப்டுகின்றது . மேலும் போர்த்துகேயர் ,ஒல்லாந்தர்களின் சிற்றுண்டிகலும் பிரபல்யமானதாக காணப்டுகின்றது .பொறித்த மாட்டு இறைச்சி மற்றும் பொறித்த கோழி இறைச்சிகளில் ஆங்கிலேயரின் செல்வாக்கினை காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை இந்திய சமையல் முறைகள் மற்றும் உணவு வகைகளின் செல்வாக்கு இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவில் பிரதான பங்குபகிகின்றது .
இலங்கையர்கள் அவர்களது கறிகளில் தாரளமாக கராங்களை பாவிப்பர். அவர்கள் ஒழுங்கான சமையற் குறிப்பினை பின்பற்ற மாட்டார்கள். எனவே அவர்களின் ஒவ்வொரு கறியும் சுவை ரீதியில் சிறு வேறுபாட்டினை கொண்டுள்ளது . மேலும் பாரம்பரியக் காலத்திலிருந்து நாட்டின் ஒவ்வொரு பிராந்த்தியத்திலும் வாழும் மக்கள் ( உதராணமாக மலைநாட்டில் நடை பாதையில் வாழும் மக்கள் மற்றும் பின்தங்கிய இடத்தில் நடை பாதையில் வாழும் மக்கள் ) வெவ்வேறு சமையல் முறைகளினை கொண்டுள்ளனர் .இலங்கையின் உணவானது உலகலாவிய ரீதியில் அதன் காரத்திற்கு பிரசித்தி பெற்றது . இதற்கு கரணம் அவர்கள் பாவிக்கும் வெவ்வேறு விதமான பச்சை மிளகாய்கள் ஆகும் . இது பச்சை மிளகாய் , செத்தல் மிளகாய் ,கறி மிளகாய் எனவும் தமிழில் மிளகாய் எனவும் அழைக்கப்படுகிறது.பொதுவாக உல்லாசப்பயணிகள் தமது மேற்கத்தேய உணவுகளில் காரங்களை குறைக்கும் படி சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும் பொது நிகழ்வுகளிற்காக சமைக்கப்படும் உணவானது நாளாந்த உணவில் காணப்படும் காரத்தினை விட பொதுவாக குறைந்தளவிலான காரத்தினை கொண்டிருக்கும் ..உணவின் காரமானது அந்நிகழ்வுகளில் பங்குபெறுபவர்களின் தன்மைக்கேற்ப சமைக்கப்படும் .
தேநீர் கலாசாரம்
தொகுஇலங்கையானது உலகத்தில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியினை கொண்டுள்ளதன் காரணமாக இலங்கையர்கள் கூடுதலாக தேநீர் பருகுகின்றனர். இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசத்தில் பல தேயிலை உற்பத்தி நிறுவனங்களை காணக்கூடியதாக உள்ளது.பெரும்பாலான இலங்கையர்கள் ஒரு நாளிற்கு குறைந்தது மூன்று தடவையேனும் தேநீர் பருகுகின்றனர்.இலங்கையானது உலகின் சிறந்த தேயிலை உற்பத்தி நாடுகளில் ஒன்றாக திகழ்கின்றது.அமெரிக்க நாட்டின் ராச குடும்பத்தினர் இலங்கையின் சிலோன் தேனீரினை பருகுகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.வீட்டிற்கு விருந்தாளிகள் வருகை தரும் போது தேநீரானது பரிமாறப்படுகின்றது.அத்துடன் விசேஷ விழாக்கள்,ஒன்றுகூடல்கள் அல்லது காலைவேளைகளிலும் பரிமாறப்படுகின்றது.
பண்டிகைகளும் விடுமுறைகளும்
தொகுபுத்தாண்டு
தொகுஇலங்கையின் மிகப்பெரிய கலாசார நிகழ்வாக சிங்கள தமிழ் புதுவருடம் ( சிங்களத்தில் அழுத் அவுருது , தமிழில் புத்தாண்டு என்றும் அழைக்கப்படும் ) கருதப்படுகின்றது . இப் பண்டிகையானது சித்திரை மாதத்தில் சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயரும் போது கொண்டாடப்படுகிறது. வழமையாக பழைய ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு பிறக்கும் நேரமானது பொதுவாக நள்ளிரவுகளில் இடம்பெறாது. இப் புதுவருட பிறப்பானது ஜோதிடர்களால் கணிக்கப்பட்ட விஷேட சுபநேர கால வரையறையில் இடம்பெறும். இப் புது வருட பிறப்பின் போது அனைவரும் தங்களது பிற வேலைகளை விடுத்து இறை வழிபாட்டிலும் பாரம்பரிய விளையாட்டுக்களிலும் ஈடுபடுவர்.இதன் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய உடையினை அணிவர் . இவ் ஆடைகள் மிகவும் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். எனவே இவை கழுவப்பட்டு சுத்தமானதாக இருத்தல் அவசியம் .
விடுமுறை தின பட்டியல்
தொகுதை | செவ்வாய்கிழமை | துருமுத்து பூரணை நாள் (இலங்கைக்கு புத்தரின் முதல் வருகையினை கௌரவிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது ) | *†# |
தை | தமிழ் தை திருநாள் | *†# | |
4 மாசி | திங்கட்கிழமை | தேசிய தினம் | *†# |
மாசி | நவம் பூரணை நாள் (புத்தர் தமது சீடர்களிற்கு முதல் முறையாக நல்லொழுக்கம் பற்றி போதித்த நாள்) | *†# | |
பங்குனி | வியாழட்கிழமை | மகா சிவராத்திரி தினம் | *† |
பங்குனி | வியாழட்கிழமை | மிலாட் - உன்- நபி(முகமது நபிகளின் பிறந்த தினம்) | *† |
பங்குனி | மேடின் பூரணை தினம் (புத்தர் தன்னுடைய தந்தையான சுத்தோதன மற்றும் அவரின் உறவினர்களிற்கு போதனை செய்ய வீடு திரும்பிய நாளினை நினைவு கூறும் முகமாக கொண்டடாப்படுகிறது) | *†# | |
பங்குனி | வெள்ளிக்கிழமை | பெரிய வெள்ளி | *† |
13 சித்திரை | சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள் சூரிய பகவானானது மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயரும் போது இலங்கையர்கள் அவர்களது தேசிய புத்தாண்டினை கொண்டாடுவர் | *†# | |
சித்திரை | சிங்கள தமிழ் புதுவருட தினம் | *†# | |
சித்திரை | மேலதிக வங்கி விடுமுறை | † | |
சித்திரை | பக் பூரணை தினம் (இலங்கைக்கு புத்தரின் இரண்டாம் வருகையினை நினைவு கூறும் முகமாக கொண்டாடப்படுகிறது ) | *†# | |
1 வைகாசி | வியாழட்கிழமை | மே Day | *†# |
வைகாசி | வெசாக் பூரணை தினம் ( பௌத்தர்களின் நாட்காட்டி தொடங்கும் தினம் ) | *†# | |
வைகாசி | வெசாக்கினை தொடர்ந்து வரும் பூரணை தினம் | *†# | |
ஆனி | பொசன் பூரணை தினம் ( இலங்கைக்கு பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூறும் முகமாக கொண்டாடப்படுகிறது ) | *†# | |
ஆடி | எசல பூரணை தினம் | *†# | |
ஆவணி | நிகினி பூரணை தினம் (புத்தரினால் நிகழ்த்தப்பட்ட முதலாவது தாம சங்கயன பட்டமளிப்ப்பு இடம்பெற்ற நாள்) | *†# | |
புரட்டாதி | பிணர பூரணை தினம் (புத்தர் தாயரிற்கும் தேவர்களிற்கும் போதனை செய்வதற்காக தேவலோகம் சென்ற நாள்) | *†# | |
ஐப்பசி | புதன் கிழமை | ஈத் -உல் -பிதர் (ரமழான் பெருநாள்) | *† |
ஐப்பசி | வப் பூரணை தினம் (தேவநம்பிய தீசன் அசோக சக்கரவத்தியின் மகளான அரஹட் சங்கமித்த பிக்குனியை இலங்கையில் பிக்குனி சாசனத்தினை நிறுவுவதற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார்) | *†# | |
ஐப்பசி | திங்கட்கிழமை | தீபாவளி திருநாள் | *† |
கார்த்திகை | இல் பூரணை தினம் (விவரண அடைந்ததினை கொண்டாடும் முகமாக (புத்தராக வருவதினை உறுதி செயும் முகமாக )) | *†# | |
மார்கழி | செவ்வாய்கிழமை | ஈத் -உல் - அதா (ஹஜ்ஜி பெருநாள் ) | *† |
மார்கழி | உன்துவப் பூரணை தினம்(சங்கமித்தை பிக்குணி பிக்குணி சாசனத்தினை நிறுவினார் (பிக்குணிகளிற்குரிய சாசனம்)) | *†# | |
25 மார்கழி | சனிக்கிழமை | கிறிஸ்மஸ் தினம் | *†# |
* பொது விடுமுறை, † வங்கி விடுமுறை , # வர்த்தக விடுமுறை
போயா என அழைக்கப்படும் ஒவ்வொரு பூரணை நாளும் பௌத்தர்களின் விடுமுறை நாளாகும். இப் பூரணை நாள் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு தினங்களில் வருகின்றது.
சமயம்
தொகுஇலங்கை கலாசாரமானது மதங்களை தழுவியதாகவும் காணப்படுகின்றது. பௌத்த மக்கள் சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் மாதத்திற்கு ஒருமுறை போயா தினத்தினை பெறுகின்றனர் . இந்து மற்றும் முஸ்லிம் மக்களும் அவர்களுக்குரிய விடுமுறை நாட்களினை பெறுவார் . இலங்கையின் பல வரலாற்று நிகழ்வுகள் மதங்களினை அடிப்படையாக கொண்டு இருப்பதன் காரணமாக இலங்கை மக்கள் மதப்பற்று உடையவர்களாக காணப்படுகின்றனர். இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த விகாரைகள் வரலாற்று சிறப்பு மிக்கவை . ஒரு பிராந்தியத்தின் சமயமானது அங்கு காணப்படும் சமய சார் அமைப்புக்களின் மூலம் தீர்மானிக்க கூடியதாக உள்ளது . வடக்கு கிழக்குகளில் பெரும்பான்மையாக தமிழர் சமூகம் காணப்படுவதனால் பல இந்து மத கோவில்களை காணக்கூடியதாக உள்ளது.இப் பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகளின் யுத்த நடவடிக்கைகள் காரணமாக ஏனைய சமூகத்தவர்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டது . இலங்கையின் தென் பகுதிகளில்ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியேற்றம் காரணமாக அங்கு பல தேவாலயங்களை காணக்கூடியதாக உள்ளது .இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பௌத்தர்களை காணலாம் அதிலும் விசேஷமாக தெற்கு பகுதி , மலை நாடு, மேற்கு கடற்கரை சார் பகுதிகளில் காணலாம் . இவர்களே இலங்கையில் பெரும்பான்மையாக காணப்படுகின்றனர் .
இலங்கையில் காணப்படும் மொழிகள்
தொகுசிங்களவர்கள் அவர்களின் தாய்மொழியாக சிங்களத்தினையும் தமிழர்கள் அவர்களின் தாய்மொழியாக தமிழினையும் பேசுகின்றனர். மேலும் ஆங்கிலமும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இலங்கையில் 16 மில்லியன் மக்கள் சிங்கள மொழியினை பேசுகின்றனர் . இதில் 13 மில்லியன் மக்கள் சிங்கள மொழியினை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.இது இலங்கை அரசியல் யாப்புக்கமைய அங்கீகரிக்கப்பட்ட மொழியாக கருதப்படுகின்றது. தென் இந்தியாவிலிருந்து தழுவப்பட்ட தமிழ் மொழியும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.
விளையாட்டு
தொகுவிளையாட்டானது இலங்கை கலாசாரத்தில் பிரதான அங்கத்தினை வகிக்கின்றது காரணம் அங்குள்ள சமூகமானது கூடுதலாக படித்த வர்க்கத்தை உள்ளடக்கி உள்ளது.எனவே அங்குள்ள மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் விளையாட்டினை பிராதனமானது கருதுகின்றனர். இலங்கையின் பிரதான விளையாட்டு கிரிகட்.ஆனால் இலங்கையில் கிரிகட்டானது ஆங்கிலேயரது காலத்திற்கு பின்னர் தான் மிகவும் பிரபல்யம் அடையத்தொடங்கியது. இலங்கையில் உள்ள ஒவ்வொரு சிறு பிள்ளைக்கும் கிரிகட் விளையாட தெரியும் என்பது குறிபிடத்தக்க விடயம்.அத்தோடு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கிரிகட் விளையாடுவதற்கு பல்வேறுபட்ட கிரிகட் மைதானங்கள் இலங்கை முழுவதும் காணப்டுகின்றது.இலங்கையின் தேசிய கிரிகட் விளையாட்டு வீரர்களின் கிரிகட் விளையாட்டினை பார்வையிடுவது இலங்கை மக்களின் பிரதான பொழுதுபோக்கா மாறி உள்ளது.தொலைகாட்சிகளில் ஒலிபரபாகும் பிரதான கிரிகட் போட்டிகளை பார்த்து ரசிபதற்காக பொருளாதாரத்தை ஈட்டித்தரும் வணிக துறைகள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்படுவது சாதரணமாகி விட்டது.இது தான் 1996 ஆம் ஆண்டில் இலங்கை உலக கோப்பையினை அவுஸ்த்ரேலியாவிற்கு எதிராக வென்ற போது நாடு முழுவதும் உள்ள வணிகத்துறைகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவும் அமுல்படுத்தப்பட்டது.
துடுப்பாட்டம்
தொகுஇலங்கையில் மிகவும் பிரபல்யமான விளையாட்டாக கிரிகட் கருதப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையினை இலங்கையின் தேசிய கிரிகட் அணி வென்ற பின்னரே கிரிகட்டினை பார்வையிடுவது பிரதான நிகழ்வாக கருதப்படுகின்றது.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்களின் தலையீடு காரணமாக தற்போது கிரிகட் துறையானது கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.statistics.gov.lk/abstract2010/chapters/Chap2/AB2-13.pdf
- ↑ http://mahavamsa.org/
- ↑ http://bookonsrilanka.files.wordpress.com/2013/08/growing-up-white-in-south-asia.pdf
- ↑ "LANKALIBRARY FORUM • View topic – Home and family in ancient and medieval Sri Lanka". Lankalibrary.com. 2008-12-21. Archived from the original on 2012-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
- ↑ http://seelanka.net/sigiriya/sigiriya-frescoes.html
பிற இணைப்புக்கள்
தொகு- Volume 1 பரணிடப்பட்டது 2016-03-30 at the வந்தவழி இயந்திரம், Volume 2 பரணிடப்பட்டது 2016-03-30 at the வந்தவழி இயந்திரம் and Volume 3 of “Village Folk-tales of Ceylon” by Henry Parker (Public Domain)
- Sri Lanka a cultural profile
- Sri Lanka culture பரணிடப்பட்டது 2009-02-07 at the வந்தவழி இயந்திரம்
- Cultural Festivals and Public Holidays in Sri Lanka