மில்லங்கோடா இராசா

இலங்கை யானை

மில்லங்கோடா ராஜா (Millangoda Raja) ( சிங்களம்: මිල්ලන්ගොඩ රාජා ) (மில்லங்கோடா டஸ்கர் என்றும் அழைக்கப்படுகிறது) (1938- 2011 சூலை 30) என்பது ஒரு இலங்கை யானையாகும். இது வாழ்ந்தபோது மிக நீளமான தந்தங்களைக் கொண்ட ஆசிய யானை என்று கருதப்பட்டது. [1] இது, 1945இல் புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவாவில் உள்ள நவகதேகம காடுகளில் பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கேகாலையின் மோலகோடாவைச் சேர்ந்த எம். ஆர். மில்லங்கோடா அப்புஹாமிக்கு சொந்தமானது. [2] இந்த யானை கண்டியில் நடைபெறும் எசல ஊர்வலத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பங்கேற்றது. மேலும் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித கலசத்தையும் எடுத்துச் சென்றது. இது இலங்கையில் ஒரு சில யானைகள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாகும். [3] இந்த யானை 30 சூலை 2011 அன்று இறந்தது. அது இறக்கும் போது சுமார் 73 வயதாக இருந்தது. [4] அதன் மறைவுக்குப் பின்னர், உடல் பாதுகாக்கப்பட்டு ஆனந்த மில்லங்கோடாவால் கேகல்லை, மோலகோடாவில் உள்ள யானை கிராமத்தில் பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

எசல ஊர்வலத்தில் மில்லங்கோடா இராசா

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Charles Haviland (4 August 2011). "'Longest tusked' elephant in Asia dies in Sri Lanka". BBC News. https://www.bbc.co.uk/news/world-south-asia-14404342. பார்த்த நாள்: 22 August 2011. 
  2. Dhaneshi Yatawara (7 August 2011). "Milangoda Raja - The majestic tusker that was". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 13 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110813015557/http://www.sundayobserver.lk/2011/08/07/fea05.asp. பார்த்த நாள்: 16 October 2011. 
  3. "Elephant with the longest tusks in Asia dies". Sunday Observer online. 2011-08-14 இம் மூலத்தில் இருந்து 2011-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110820064939/http://www.sundayobserver.lk/2011/08/14/jun02.asp. பார்த்த நாள்: 2011-09-24. 
  4. "An elegy to Millangoda Raja". Dailynews online. 2011-09-24 இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021105631/http://www.dailynews.lk/2011/08/09/fea28.asp. பார்த்த நாள்: 2011-08-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லங்கோடா_இராசா&oldid=3224867" இலிருந்து மீள்விக்கப்பட்டது