நடுங்கமுவ இராசா

இலங்கையில் வாழ்ந்த இந்திய யானை

நடுங்கமுவ ராஜா (Nadungamuwa Raja) ( சிங்களம் :නැදුන්ගමුව රාජා) என்பது இந்தியாவின் மைசூரில் 1953களில் பிறந்த இந்திய யானையாகும்.இலங்கையின் கண்டியில் நடைபெற்ற ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித கலசத்தைத் தாங்கிச் செல்லும் பணியை தற்போது வரை தொடர்கிறது. இது, ஆசியாவின் மிக நீளமான தந்தங்களைக் கொண்டது.

நடுங்கமுவ இராசா
இனம்இந்திய யானை
வகைஆண்
பிறப்பு1953கள்
மைசூர் அரசு, இந்தியா
இறப்பு2022
செயற்பட்ட ஆண்டுகள்2005-2022
Notable roleஎசல ஊர்வலத்தில் புனித கலசத்தை தாங்கிச் செல்லும் யானை
உரிமையாளர்ஹர்ஷா தர்மவிஜயா
உயரம்10 அடி
நடுங்கமுவா இராசா தனது இரண்டாவது உரிமையாளரிடம் விடைபெறுகிறது. இந்த படம் 1978 ஆம் ஆண்டில் ஹொரானாவிலுள்ள வாவ்லுகலா தோட்டத்திலுள்ள ஹெர்பர்ட் விக்ரமசிங்கவின் இல்லத்தில் எடுக்கப்பட்டது

இது, மைசூர் மகாராஜாவால் வழங்கப்பட்ட இரண்டு யானைக் கன்றுகளில் ஒன்றாகும். அவரது உறவினரின் நீண்டகால நோயைக் குணப்படுத்தியதற்காக மரியாதை செலுத்தும் விதமாக பிலியந்தலை, நிலாமகாரை கோயிலில் வசித்த மூத்த பூர்வீக மருத்துவர் துறவிக்கு மைசூர் மகாராஜா இந்த யானையை பரிசளித்தார். 1978 ஆம் ஆண்டில் இந்த யானை தனது இரண்டாவது உரிமையாளரிடமிருந்து (பாண்டராகமாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) ஹெர்பர்ட் விக்ரமசிங்க என்பவரிடமிருந்து நடுங்கமுவா பகுதியைச் சேர்ந்த அந்தக் காலத்தின் சிறந்த ஆயுர்வேத மருத்துவராக இருந்த (யானையின் தற்போதைய உரிமையாளர் டாக்டர் ஹர்ஷா தர்மவிஜயாவின் தந்தை) தர்மவிஜய வேத ராலகாமியால் கையகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து யானைக்கு அது வசிக்கும் கிராமமான நடுங்கமுவா எனப் பெயரிடப்பட்டது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுங்கமுவ_இராசா&oldid=3480602" இலிருந்து மீள்விக்கப்பட்டது