இராஜா தாகீர்

இராஜா தாகீர் சென் (சிந்தி மொழி: راجا ڏاھر‎; சமக்கிருதம்: राजा दाहिर, கி பி 661 – 712) தற்கால சிந்துவை, கி பி 679 முதல் 712 முடிய ஆண்ட பிராமண அரச குல இறுதி இந்து மன்னராவார்.[1]ராஜா சாச் - ராணி சுகாநதி இணையருக்குப் பிறந்தவர். ராஜா சாச்சின் மறைவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த இவரது சித்தப்பா சந்திரனின் மறைவிற்குப் பிறகு ராஜா தாகீர் சிந்துவின் மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டார். இவர் ஆண்ட புஷ்கர்ணா இராச்சியத்தில், தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் பகுதிகள், ஈரானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும், ஆப்கானித்தானின் பகுதிகளும் அடங்கியிருந்தன.

இராஜா தாகீர்
சிந்துவின் மகாராஜா தாகீர்
சிந்துவின் மூன்றாவது மற்றும் இறுதி மன்னர்
ஆட்சிக்காலம்கி பி 679 – 712
முன்னையவர்சந்திரன்
பின்னையவர்சிந்து இராச்சியம் உமையா கலீபகத்துடன் இணைக்கப்பட்டது
பிறப்புகி பி 661
அலோர், சிந்து
(தற்கால் சிந்துவின் ரோக்கிரி பகுதி, பாகிஸ்தான்)
இறப்புகி பி 712 (வயது 51)
ரோர் பகுதி, சிந்து ஆறு
(தற்கால நவாப்ஷா அருகில், பாகிஸ்தான்)
குழந்தைகளின்
பெயர்கள்
சூரியாதேவி
பிரமிளாதேவி
பெயர்கள்
இராஜா தாகீர் சென்
மரபுபிராமண அரச குலம்
தந்தைஅலோரின் சாச்
தாய்ராணி சுகாநதி
மதம்இந்து சமயம்
கி பி 700-இல் இராஜா தாகீர் சென் காலத்திய சிந்து இராச்சியத்தின் பரப்பளவை காட்டும் வரைபடம்

இந்தியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது உமையா கலீபகத்தின் அரபுப் படைத்தலைவர் முகமது பின் காசிம் என்பவரால் ராஜா தாகீர் சிறை பிடிக்கப்பட்டு,[2] பின்னர் ராஜா தாகீரின் தலை கொய்யப்பட்டு, உமையா கலீபகத்தின் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போரின் முடிவில் பெரும்பாலான அரச குடும்ப பெண்டிர் அரபு போர் வீரர்களிடமிருந்து தங்களின் கற்பை காத்துக் கொள்ள, கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு மாண்டனர்.[2]

சிந்து மீதான அரபியர்கள் படையெடுப்புகள் குறித்து விளக்கும் பாரசீக மொழி நூலான சாச் நாமாவில் பிராமண அரச குலம் ஆண்ட சிந்து பகுதிகளையும், சிந்துவில் நடந்த அரேபியர்களின் ஆக்கிரமிப்புகளை விளக்குகிறது.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜா_தாகீர்&oldid=3683604" இலிருந்து மீள்விக்கப்பட்டது