இராஜீவ் கிருஷ்ணா

இந்திய நடிகர்

இராஜீவ் கிருஷ்ணா (Rajiv Krishna) என்பவர் இந்திய ஒன்றியம், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட நடிகர். ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார்.

இராஜீவ் ஜி மேனன்
பிறப்புஇராஜீவ் கோபாலகிருஷ்ணன்
மற்ற பெயர்கள்இராஜீவ் கிருஷ்ணா, ஆஹா ராஜீவ், 'இராஜீவ் ஜி மேனன்
பணிநடிகர், திரைக்கதை ஆசிரியர், புதின எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996-2015

இராஜீவ் கிருஷ்ணா உட்ஸ்டாக் வில்லா, சவுண்ட்டிராக் ஆகிய இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் தயாரிப்பாளர் சுரேஷ் மேனனின் மருமகன் ஆவார்.[1][2] இவர் 2013 இல் தண்டர்காட் - அசெண்டன்ஸ் ஆப் இந்திரா என்ற புதினத்தை எழுதினார்.[3]

தொழில் தொகு

ராஜீவ் கிருஷ்ணா ஆஹா! (1997) படத்தின் வழியாக தமிழில் அறிமுகமானார். இவரது நடிப்பைப் பற்றி ஒரு விமர்சகர் குறிப்பிடும்போது, "ராஜீவின் தன் பங்காக தனது நடிப்புத் திறனைக் காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார்" என்றார்.[4] ஆஹாவின் வெற்றியைத் தொடர்ந்து, ராஜீவ் கிருஷ்ணா தொடர்ந்து முக்கிய வேடங்களில் தோன்றுவதற்கு பல வாய்ப்புகளைப் பெற்றார். இவர் கை விளக்கு என்ற படத்தில் நாயகனாக சங்கீதாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படம் தயாரிக்கபட்ட போதிலும் வெளியாகவில்லை.[5] இவர் பாலிவுட்டில் பாஸ் யுன் ஹாய் (2003) என்ற படத்தில் ராஜீவ் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் அறிமுகமானார்.[6] படத்தில், நந்திதா தாசுக்கு ஜோடியாக நடித்தார்; இருப்பினும், படமானது இவரை அடையாளம் காட்டத் தவறியது.[7] நியூட்டனின் மூன்றாவது விதி (2009) மற்றும் அசல் (2010) ஆகிய படங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்தார்.[8][9] கிருஷ்ணவேணி பஞ்சாலை (2012) படத்தில் ஒரு ஆலை உரிமையாளராக இவர் நடித்தார்.[10]

திரைப்படவியல் தொகு

நடிகர் தொகு

படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1996 தேவராகம் பார்த்தசாரதி மலையாளம்
1997 ஆஹா! ஸ்ரீராம் தமிழ்
1999 மனம் விரும்புதே உன்னை பிரகாஷ் தமிழ்
2002 ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே பரத் தமிழ்
2003 பாஸ் யுன் ஹாய் ரோஹன் இந்தி
2009 நியூட்டனின் மூன்றாவது விதி ஜெய்பிரகாஷ் நாராயணன் (ஜே.பி.) தமிழ்
2010 அசல் விக்கி ஜீவாநந்தன் தமிழ்
2012 தி கிங் & கமிஷனர் மேஜர் அப்துல் ஜலால் ராணா மலையாளம்
கிருஷ்ணவேணி பஞ்சாலை கிருஷ்ணமூர்த்தி தமிழ்
2015 என் வழி தனி வழி தன்வீர் தமிழ்
தொலைக்காட்சி
ஆண்டு தொடர் பாத்திரம் மொழி குறிப்புகள்
1997 டாக்டர்ஸ்
1994-1995 சின்ன சின்ன ஆசைகள் "பூஜா", "மனசு", "ஆரம்பம்" ஆகிய கதைகளில் நடித்தார்

எழுத்தாளர் தொகு

  • உட்ஸ்டாக் வில்லா (2008)
  • சவுண்டிராக் (2011)
  • கேல்ஸ் (2016; மலையாளம்) (திரைக்கதை ஆலோசகர்)

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜீவ்_கிருஷ்ணா&oldid=3146444" இருந்து மீள்விக்கப்பட்டது