இராஜேசுபாய் சுதாசாமா

இந்திய அரசியல்வாதி

இராஜேசுபாய் நாரன்பாய் சுதாசாமா (Rajeshbhai Naranbhai Chudasama)(பிறப்பு 10 ஏப்ரல் 1982) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் குசராத்து மாநிலம் ஜுனாகத்-கிர் சோம்நாத் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் முன்பு குசராத்து சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2012ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மங்கரோல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் ஜுனாகத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] சுதாசாமா 2019, 2024 இந்தியப் பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் குசராத்து கோலி சமூகத்தினைச் சேர்ந்தவர்.[3]

ராஜேசுபாய் சுதாசாமா
રાજેશભાઈ નારાનભાઈ ચુડાસમા
ராஜேசுபாய் நாரன்பாய் சுதாசாமா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
குடியரசுத் தலைவர்பிரணப் முகர்ஜி ராம் நாத் கோவிந்த் திரௌபதி முர்மு
முன்னையவர்தீனு சோலங்கி
தொகுதிஜூனாகத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராஜேசுபாய் சுதாசாமா

10 ஏப்ரல் 1982 (1982-04-10) (அகவை 42)
ஜூனாகத், குசராத்து
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ரேகாபென் (தி. 18 ஏப்ரல் 2008)
பிள்ளைகள்1
பெற்றோர்நாரான்பாய் ஆர். சுதாசாமா (தந்தை), இலக்கிபென் (தாய்)
வாழிடம்(s)ஜூனாகத் , குசராத்து
வேலைவிவசாயம்
தொழில்அரசியல்வாதி
As of 17 சூலை, 2024
மூலம்: [1]

வகித்தப் பதவிகள்

தொகு
  • 2012-மே 2014, குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
  • மே 2014,16வது மக்களவை உறுப்பினர்
  • 1 செப்டம்பர் 2014-25 மே 2019, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு உறுப்பினர்
  • வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • மே 2019,17வது மக்களவை உறுப்பினர் (2ஆவது பதவிக்காலம்)
  • செப்டம்பர் 13,2019 முதல், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிலைக் குழு உறுப்பினர்
  • இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சூன் 2024,18ஆவது மக்களவை உறுப்பினர் (3ஆவது பதவிக்காலம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "CR Paatil rejigs BJP parliamentary board ahead of polls". The Indian Express (in ஆங்கிலம்). 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  2. "Union Agri Minister Tomar inaugurates Coconut dvpt board office in Junagadh". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  3. "Rajesh Chudasama youngest Lok Sabha candidate in state". 24 March 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேசுபாய்_சுதாசாமா&oldid=4107885" இலிருந்து மீள்விக்கப்பட்டது