இராஜேந்திரநகர் சட்டமன்றத் தொகுதி

இராஜேந்திரநகர் சட்டமன்றத் தொகுதி (Rajendranagar Assembly constituency) என்பதுஇந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இது ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றாகும். இது செவெள்ள மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் 24 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

இராஜேந்திரநகர்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 51
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி மாவட்டம்
மக்களவைத் தொகுதிசேவெள்ள மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்4,40,000
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
டி.பிரகாசு கவுட்
கட்சிபாரத் இராட்டிர சமிதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

டி.பிரகாசு கவுட் தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

கண்ணோட்டம்

தொகு

இது 2009 பொதுத் தேர்தலில் (2002ஆம் ஆண்டின் எல்லை நிர்ணயச் சட்டத்தின்படி) செவெள்ளா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இராஜேந்திரநகர் சட்டமன்றத் தொகுதியில் நான்கு நகராட்சிப் பிரிவுகள் உள்ளன - சிவராம்பள்ளி, மைலார்தேவ்பள்ளி, இராஜேந்திரநகர் மற்றும் அத்தாப்பூர். ஹாசன் நகர் மற்றும் சாசுதிரிபுரம் போன்ற பகுதிகள் பழைய நகரப் பகுதிகளான பகதூர்புரா மற்றும் சந்திரயாங்குட்டாவின் மையப்பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளன. சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது

மண்டல்
ராஜேந்திரநகர்
சம்சாபாத்
காந்திப்பேட்டை

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 டி. பிரகாசு கவுட் தெலுங்கு தேசம் கட்சி
2014
2018 தெலங்காணா இராட்டிர சமிதி
2023 பாரத் இராட்டிர சமிதி

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: இராஜேந்திரநகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.இரா.ச. டி. பிரகாசு கவுட் 1,21,734 37.09 6.33
பா.ஜ.க தொக்கால சிறீனிவாசு ரெட்டி 89,638 27.31  19.49
காங்கிரசு கசுதூரி நரேந்தர் 82,057 25.00 புதிது
நோட்டா நோட்டா 1,832 0.56 0.14
வாக்கு வித்தியாசம் 32,096 9.78 13.48
பதிவான வாக்குகள் 3,28,193
பா.இரா.ச. கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு