இராஜ்கோட் இராச்சியம்

ராஜ்கோட் இராச்சியம் (Rajkot State) பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த சுதேச சமஸ்தானம் ஆகும்.[2] இதன் தலைநகர் ராஜ்கோட் ஆகும். இந்த இராச்சியம் சௌராட்டிரா தீபகற்பத்தில் அஜி ஆற்றின் கரையில் இருந்தது. 1931-ஆம் ஆண்டில் இராஜ்கோட் இராச்சியத்தின் பரப்பளவு 730 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 75,540 ஆகும்.

இராஜ்கோட் இராச்சியம்
રાજકોટ રજવાડું[1]
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1620–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ராஜ்கோட்
Location of ராஜ்கோட்
சௌராட்டிரா தீபகற்பத்தில் இராஜ்கோட் இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம் ராஜ்கோட்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1620
 •  இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1931 730 km2 (282 sq mi)
Population
 •  1931 75,540 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
ராஜ்கோட் இராச்சியத்தின் மன்னர் தாக்கூர் இரண்டாம் பவஜி ராய் சிங்

வரலாறு

தொகு

ராஜ்கோட் இராச்சியத்தை 1620-ஆம் ஆண்டில் நிறுவியவர் இராஜபுத்திர குலத்தின் ஜடேஜா வம்சத்தை சேர்ந்த விபோஜி அஜோஜி ஜடேஜா ஆவார். இவர் நவநகர் இராச்சிய மன்னர் ஜாம் சத்திரசால் சாதாஜி விபாஜி ஜடேஜாவின் பேரன் ஆவார்.

ஆட்சியாளர்கள்

தொகு

இராஜ்கோட் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் தாக்கூர் சாகிப் எனும் பட்டத்தை இட்டுக்கொள்வார்கள்:[3]

தாக்கூர் சாகிப்புகள்

தொகு
  • 1694 – 1720 இரண்டாம் பாமனியாஜி (இறப்பு. 1720)
  • 1720 – 1732 மசூம் கான் சுக்கட் (முகலாய ஆளுநர்) (இ. 1732)
  • 1732 – 1746 முதலாம் ரன்மால்ஜி (இ. 1746)
  • 1746 – 17.. லக்காஜி முதலாம் ரன்மால்ஜி (முதல் முறை) (இ. 1796)
  • 17.. – 1794 மெக்ரமாம்ஜி மூன்றாம் லக்காஜி (இ. 1794)
  • 1794 – 1795 லக்காஜி முதலாம் ரன்மால்ஜி (இரண்டாம் முறாஇ)
  • 1795 – 1825 ரன்மால்ஜி இரண்டாம் மெக்ரமாம்ஜி (இ. 1825)
  • 1825 – 1844 சூரஜ் ஜி ரன்மால் ஜி (இ. 1844)
  • 1844 – 8 நவம்பர் 1862 மெக்ரமாம் ஜி நான்காம் சூரஜ் ஜி (இ. 1862)
  • 8 நவம்பர் 1862 – 16 ஏப்ரல் 1890 பவாஜிராஜ் மெகர்மான்சிங் (பிறப்பு:. 1856 – இறப்பு. 1890)
  • 1862 – 1867 தாக்குரானிஜி பாய் நானிபா (இ: 1893) குன்வெர்பா (தந்தை) - அரசப்பிரதிநிதி
    • 1867 – 17 சனவரி 1876 ஜெ. எச். லாயிட் - பிரித்தானிய அரசப்பிரதிநிதி
  • 16 ஏப்ரல் 1890 – 2 பிப்ரவரி 1930 லக்காஜி மூன்றாம் ப்வாஜிராஜ் (பி. 1885 – இ. 1930 ) (3 சூன் 1918 முதல் சர் லக்காஜி மூன்றாம் பாவாஜிராஜ்)
    • 16 ஏப்ரல் 1890 – 21 அக்டோபர் 1907 .... - அரசப்பிரதிநிதி
  • 2 பிப்ரவரி 1930 – 11 சூன் 1940 தர்மேந்திர சிங் லக்காஜி (பி. 1910 – இ. 1940)
  • 11 சூன் 1940 – 15 ஆகஸ்டு 1947 பிரத்தியும்மன் சிங் (பி. 1913 – இ. 1973)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BhagwatGoMandal
  2. "Rajkot Princely State (9 gun salute)". Archived from the original on 2018-10-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  3. "Indian states before 1947 K-W". rulers.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்கோட்_இராச்சியம்&oldid=3544210" இலிருந்து மீள்விக்கப்பட்டது