இராதா (சுந்தரா டிராவல்ஸ் நடிகை)

தென்னிந்திய நடிகை

இராதா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரையுலகில் நடித்தார். சுந்தரா டிராவல்ஸ் (2002) படத்தில் நடித்ததற்காக இவர் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார், பின்னர் வேறு சில தமிழ், மலையாள மொழிப் படங்களிலும் நடித்தார். [1]

தொழில்தொகு

இவர் ஆந்திராவில் இருந்து நடிகையாக வேண்டுமென்று இடம் பெயர்ந்து சென்னை வந்தார். சுந்தரா டிராவல்ஸ் (2002) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் சராசரி விமர்சனங்களைப் பெற்று, வணிக ரீதியாக வெற்றிப் படமாக ஆனது. இவரது சக நடிகர்களான முரளி, வடிவேலு ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டது. [2] படம் வெளியான பிறகு, படத்தின் தயாரிப்பாளர் எஸ். வி. தங்கராஜ் தன்னுடன் படுத்தால் தனது அடுத்த படத்தில் உனக்கு ஒரு பாத்திரத்தை வழங்குவேன் என்றதாக ராதா குற்றம் சாட்டினார், இது ஊடக கவனத்தை உருவாக்கியது. [3] ராதா கார்த்திக்குடன் இணைந்து நடித்த கேம் (2005) படமானது நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு வெளியானது, பின்னர் சத்யராஜ் நடித்த அடாவடி (2007) மற்றும் காத்தவராயன் (2008) ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர் இவர் பைரவி (2012) போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றினார்.

2013 நவம்பரில், தொழிலதிபர் பைசுல் மீது ராதா புகார் அளித்தார். புகாரில் ஆறு வருடகால உறவுக்குப் பிறகு தன்னை அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், தங்களின் தனிப்பட்ட காணொளிகளை வெளியிடுவதாக அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். இயக்குனர் ஈரோடு சவுந்தர் பைசூலின் தவறுகளுக்கு துணையாக உள்ளார் என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார். [4] [5] மூன்று வாரங்களுக்குள், பைசுல் மீதான புகாரை இவர் திரும்பப் பெற்றார். [6]

2016 ஆகத்தில், புழல் மத்திய சிறைச்சாலையைச் சேர்ந்த வைரம் என்ற குண்டர், திரைப்படத் தயாரிப்பாளர் முனிவேலுடனான தனது உறவு குறித்து தன்னை அழைத்து அச்சுறுத்தியதாக ராதா கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து இவர் காவல் துறையில் புகார் அளித்தார். அவரது செய்திக்குறிப்பைத் தொடர்ந்து, முனிவேலின் மனைவி வெளியே வந்து நடிகை தனது கணவருடனான உறவை பாழ்படுத்திவிட்டதாக விமர்சித்தார். [7] [8]

திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மணமுறிவு பெற்று தனது குழந்தையுடனும் ,தாயுடனும், தனித்து சென்னையில் வாழ்ந்துவந்தார் இராதா. பின்னர் 2021 ஏப்ரலில், எண்ணூர் காவல் ஆய்வாளர் வசந்தராஜா தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும். தன்னை தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் தன்னை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டதால் வசந்தராஜா மீதான புகாரை இவர் திரும்பப் பெற்றார்.[9]

திரைப்படவியல்தொகு

படங்கள்
ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2002 சுந்தரா டிராவல்ஸ் வசந்தி தமிழ்
2002 கேம் ஜெயா தமிழ்
2007 அடாவடி சாந்தினி தமிழ்
2008 காததவராயன் சரோசா தமிழ்
தொலைக்காட்சி

குறிப்புகள்தொகு

 

  1. "Ammuvagiya Naan Bharathi still busy". The Times of India.
  2. "Sundara Travels". The Hindu. 2002-09-06. 2003-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-15 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. "A casting couch controversy". 2015-10-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-15 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Actor says lover blackmailed her with sleazy clips". The Times of India.
  5. "Actress Radha files complaint against Faizul". 2015-10-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-15 அன்று பார்க்கப்பட்டது.
  6. admin (20 December 2013). "Radha does a volte-face, withdraws complaint against Faisool". KOLLY TALK. 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 ஜூன் 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. http://www.deccanchronicle.com/nation/in-other-news/220816/actress-gets-threat-call-from-puzhal-jail.html
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-06-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-15 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  9. ஐயோ அடிக்கிறாரு - இது நேத்து - மன்னிப்புக்கு கேட்டாரு விட்டுருங்க - இது இன்று - சுந்தரா டிராவல்ஸ் ராதா, செய்தி, ஒன் இந்தியா, 2021 ஏப்ரல் 16 [தொடர்பிழந்த இணைப்பு]