இராதிகா ஜா (Radhika Jha)(பிறப்பு 1970) ஓர் இந்திய நாவலாசிரியர் ஆவார். இவர் 2002-இல் தனது முதல் நாவலான வாசனைக்காகப் (சுமெல்) பிரெஞ்சு பிரிக்ஸ் கெர்லைன் விருதை வென்றார்.[1][2][3]

இராதிகா ஜா
பிறப்பு1970
தில்லி
தொழில்எழுத்தாளர், ஒடிசி நடனக் கலைஞர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரி, சிக்காகோ பல்கலைக்கழகம்

இளமை

தொகு

ஜா 1970-இல் புது தில்லியில் பிறந்தார் மற்றும் மும்பையில் வளர்ந்தார். இவர் தோக்கியோவில் 6 ஆண்டுகள் வாழ்ந்தார். சப்பானிய கலாச்சாரத்தின் அனைத்து அம்சங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார், ஜா பின்னர் இவர் பெய்சிங்கிற்கு குடிபெயர்ந்தார். இப்போது ஏதென்ஸில் தனது தூதர் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறார்.[1]

கல்வியும் பணியும்

தொகு

ஜா, மாசச்சூசெட்சில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் மானுடவியல் கல்வியினைப் பயின்றார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் . பரிமாற்ற மாணவராக பாரிசில் வாழ்ந்தார்.[1] ஜா ஒரு பயிற்சி பெற்ற ஒடிசி நடனக் கலைஞரும் ஆவார்.[3]

ஜா ஒரு பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் பற்றிய இந்துசுதான் டைம்சு மற்றும் பிசினஸ் வேர்ல்ட் ஆகியவற்றில் பணியாற்றினார். இவர் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்காகவும் பணியாற்றினார். இங்கு இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கான திட்டத்தைத் தொடங்கினார்.[1]

1999-இல் வெளியிடப்பட்ட இவரது முதல் நாவல் வாசனை (சுமெல்) ஆகும்.[4]

புத்தகங்கள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "My Beautiful Shadow". thesusijnagency.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  2. "Radhika Jha". news.gaeatimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  3. 3.0 3.1 "Author Profile". www.goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  4. "The Hindu Interview". பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_ஜா&oldid=3887656" இலிருந்து மீள்விக்கப்பட்டது