ராஜீவ் காந்தி அறக்கட்டளை

ராஜீவ் காந்தி அறக்கட்டளை (Rajiv Gandhi Foundation) என்பது 1991 சூன் 21 அன்று நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை கல்வியறிவு, சுகாதாரம், இயலாமை, வறியவர்களின் அதிகாரமளித்தல், வாழ்வாதாரங்கள் மற்றும் இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிர்ச்சனிகளை கையாள்கிறது. இதன் தற்போதைய கவனம் செலுத்தும் பகுதிகளாக கல்வி, மாற்றுத்திறன் மற்றும் இயற்கை வள மேலாண்மை ஆகியவை உள்ளன. அறக்கட்டளைக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஜி பிரிவின் கீழ் 50 சதவீதத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. [1]

ராஜீவ் காந்தி அறக்கட்டளையால் குசராத்து மிகவும் பொருளாதார சுதந்திரத்துடன் மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரான சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். [2]

அறக்கட்டளையின் பதிவு நீக்கம் தொகு

இராஜீங் காந்தி அறக்கட்டளை, 2010 வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தை மீறி 2005-2007 ஆண்டு காலகட்டத்தில் சீன அரசின் இந்திய தூதரகத்திடம் ரூபாய் 1.35 கோடி மற்றும் இசுலாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பிடமிடருந்து ரூபாய் 50 இலட்சம் பெறப்பட்டதால் இந்த அறக்கட்டளையின் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாக 13 டிசம்பர் 2022 அன்று இந்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். [3][4][5]

வரலாறு தொகு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ராஜீவ் காந்தி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ஜவகர் பவன் அறக்கட்டளை 1991 சூலையில் கூடி, அறக்கட்டளையை அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அறக்கட்டளை 8 நிறுவன அறங்காவலர்கள் குழுவை அமைத்தது. அவர்கள் முனைவர் சங்கர் தயால் சர்மா, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அமிதாப் பச்சன், சுமன் துபே, என்.கே.சேஷன் மற்றும் சுனில் நேரு ஆகியோர் அடங்குவர். 1992 ஆம் ஆண்டில், பி.வி.நரசிம்ம ராவ், சங்கர்ராவ் சவான், பி.சிதம்பரம், வி.கிருட்டிணமூர்த்தி, சாம் பிட்ரோடா, டாக்டர் சேகர் ரகா, மணி சங்கர் அய்யர், மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் ஆர்.பி. கோயங்கா ஆகியோரும் அறங்காவலர்களாக சேர்க்கப்பட்டனர். [6]

ராஜீவ் காந்தி தற்கால ஆய்வுகளுக்கான நிறுவனம் தொகு

 
ராஜீவ் காந்தி நினைவு சொற்பொழிவில் நெல்சன் மண்டேலா பேசுகிறார்

1991 ஆகத்தில், சமகால சிக்கல்களில் ஆராய்ச்சி அடிப்படையிலான கருத்துக்கள், பகுப்பாய்வு, கொள்கை மற்றும் நடைமுறை திட்டங்களை வழங்க அடித்டளத்தை ராஜீவ் காந்தி தற்கால ஆய்வுகளுக்கான நிறுவனம் அமைத்தது. இதன் திட்டங்கள் பொருளாதார சீர்திருத்தம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக பிரச்சினைகள், பொது விவகாரங்கள் மற்றும் சர்வதேச உறவுகளை உள்ளடக்கியது. இந்த நிறுவனம் மாநாடுகள், விரிவுரைகள், பட்டறைகள், குறுகிய ஆய்வுகள் மற்றும் திட்டங்களை ஏற்பாடு செய்கிறது. மேலும், சமகால பிரச்சினைகள் குறித்த அவர்களின் பார்வையை வழங்க நிபுணர்களை அழைக்கிறது. கொள்கை வகுத்தல் மற்றும் முடிவெடுப்பதில் உள்ளீடுகளை வழங்கக்கூடிய திட்டங்களை மேற்கொள்ள ஆராய்ச்சி அறிஞர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளை இது ஊக்குவிக்கிறது. [7] பேச்சாளர்களில் சிலர் ராபர்ட் மெக்னமாரா, [8] நெல்சன் மண்டேலா, [9] இலாரி கிளிண்டன், [10] ஜான் கென்னத் கல்பிரைத், மார்கரெட் தாட்சர் [11] மற்றும் எட்வர்ட் செய்த் ஆகியோர் அடங்குவர் . [12]

எடுக்கப்பட்ட முயற்சிகள் தொகு

கல்வி தொகு

  • ஐதராபாத்தின் இயாகுட்புரா சேரி பகுதியில் 3000க்கும் மேற்பட்ட சிறுமிகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர் அல்லது தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஒருவாக்கப்பட்டனர். [13]
  • 2007-08 ஆம் ஆண்டில், அறக்கட்டளை சிவசுப்பிரமணிய நாடார் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையுடன் இணைந்து வித்யாக்யன் உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 6 முதல் 10 வகுப்புகளில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மீது கவனம் செலுத்தியது. இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம் சுமார் 2000 பெண் குழந்தைகள் பயன் பெற்றனர். [14]
  • இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான் அகாதமி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனத்தில் இரண்டு பெண் முன்னணி பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. [15]
  • பல்வேறு பிரிட்டிசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயண உதவித்தொகையுடன் இளங்கலை அல்லது பட்டப் படிப்புகளின் ஒரு பகுதியாக விடுமுறை நாட்களில் இந்தியாவுக்கு வருவதற்கு வழங்கப்பட்டது. [16]
  • அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள தைட்டாபோர் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவான பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் அதிகாரமளித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. இது மிசோரம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் நாகாலாந்து பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. [17]
  • கல்வி நிர்வாகத்தின் பரவலாக்கம் 2010 இல் தொடங்கப்பட்டது. முதன்மை பங்குதாரர்களுக்கு முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்க அதிகாரம் அளிப்பதற்கும், முழு கல்வி முறையினுள் திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கும் இது ஒரு வழியாகும். [18]
  • தெருவில் உள்ள குழந்தைகளுக்கான மறுவாழ்வு, கல்வி மற்றும் உதவி வழங்கும் திட்டம் அறக்கட்டளையால் 1995 இல் தொடங்கப்பட்டது. இது மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இரண்டு மையங்களை ஏற்பாடு செய்தது, பல்வேறு தெரு குழந்தைகளுக்கு தங்குமிடம், கல்வி, பயிற்சி மற்றும் சுகாதார பாதுகாப்பு வழங்குவதில் கவனம் செலுத்தியது. குழந்தைகள் வழக்கமான பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர் அல்லது தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்க தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர். [19]

சுகாதாரம் தொகு

  • 1993 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை இந்தியாவில் எச்.ஐ.வி / எய்ட்சு தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு உலக எய்ட்சு தினத்தன்று, அறக்கட்டளையின் தலைவரான சோனியா காந்தி சிவப்பு நாடா விரைவு வண்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக, அறக்கட்டளை பல நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பொது மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான எய்ட்சு நோயை எவ்வாறு தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பட்டறைகளை நடத்தி வருகிறது. [20]
  • 2012 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ஏஜிஎஸ் தொண்டு நிறுவனம் மற்றும் காங்கிரசு தலைவர்களின் உதவியுடன் 800 இதய அறுவை சிகிச்சைகளை நடத்தியுள்ளது.

நடந்துகொண்டிருக்கும் முயற்சிகள் தொகு

வாய்ப்புகளுக்கான அணுகல் தொகு

மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்குவதன் மூலம் சிறந்த வாய்ப்புகளை அணுக அறக்கட்டளை உதவுகிறது. இது 1992 இல் பெருநிறுவன அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதரவோடு தொடங்கப்பட்டது. மேலும் 2400 க்கும் மேற்பட்ட நபர்கள் உயர் கல்வியை பெறவும் அவர்கள் நிதி சுதந்திரத்தை அடையவும் உதவியது. 2015 ஆகத்து 22 அன்று ராகுல் காந்தி 20 மாநிலங்களைச் சேர்ந்த 100 நபர்களுக்கு வாகனங்களை வழங்கினார். [21]

தொடர்பு தொகு

தொடர்பு உதவித்தொகைத் திட்டம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிறது. 2005 க்குப் பிறகு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மேலும் 160 குழந்தைகளும் இதில் அடங்குவர். 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆந்திரா, மணிப்பூர், சத்தீஸ்கர், அசாம், நாகாலாந்து, ஜம்மு-காஷ்மீர், குஜராத், புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் முழுவதும் 2086 குழந்தைகளுக்கு அறக்கட்டளை துணைபுரிகிறது. புலமைப்பரிசில்களுக்கு மேலதிகமாக, நடந்துகொண்டிருக்கும் மனோ-சமூக ஆதரவு, நோக்குநிலை மற்றும் வெளிப்பாடு, பல்வேறு தொழில்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆதரவு ஆகியவை வழங்கப்படுகின்றன. [22]

இயற்கை வள மேலாண்மை தொகு

ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2001 முதல் வாழ்வாதாரங்கள் மற்றும் இயற்கை வள மேலாண்மை பிரச்சினைகள் குறித்து செயல்பட்டு வருகிறது. கடுமையான சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்கொண்ட ராஜஸ்தானின் ஜெய்பூர், பாலி மற்றும் கரோலி மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மூன்றாம் தரப்பு மதிப்பீடு இலக்கு குடும்பங்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெளிப்படுத்தியது. [23] இந்த உருமாறும் வேலையை அளவிடுவதற்காக, ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2011திசம்பர் 19 அன்று கிராம கௌரவர் என்ற ஒருவரை நியமித்தது. கிராம கௌரவர் தற்போது கரௌலி மற்றும் தோல்பூர் மாவட்டங்களின் தாங் பகுதியில் அமைந்துள்ள 74 கிராமங்களில் நீர்வளங்களை அதிகரிக்கவும், மண்ணைப் பாதுகாக்கவும், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும் பணியாற்றுகிறார். [24] [25] [26]

ராஜீவ் காந்தி கேம்பிரிச்சு உதவித்தொகை தொகு

ராஜீவ் அறக்கட்டளை, கேம்பிரிச்சு காமன்வெல்த் அறக்கட்டளையுடன் இணைந்து கேம்பிரிச்சு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற இந்திய மாணவர்களுக்கு இரண்டு உதவித்தொகைகளை வழங்குகிறது. இதற்கான தேர்வு செயல்முறை அனுபவம், கல்வி மற்றும் தலைமை திறன் உள்ளிட்ட நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. [27] [28] [29]

நூலகங்கள் தொகு

1993 முதல், இந்த அறக்கட்டளை இந்தியாவில் 22 மாநிலங்களில் கிராமங்கள் மற்றும் சேரிகளில் 1648 நூலகங்களை அமைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனம் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்து உத்தரபிரதேசத்தின் பராபங்கி மற்றும் ராய் பரேலி மாவட்டங்களில் உள்ள பொது நூலகங்களுடன் பணியாற்றியது. [30] [31]

உருமாறும் கற்றல் தொகு

குழந்தைகளுக்கான திறன் அடிப்படையிலான கற்றல் அணுகுமுறையை அறிமுகப்படுத்த இந்த அறக்கட்டளை நாடு முழுவதும் பத்து கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சி மதிப்பீட்டு கட்டமைப்புகள் மற்றும் கற்றல் அணுகுமுறையை மறுவரையறை செய்வதிலும் தொடர்ச்சியான விரிவான மதிப்பீட்டில் கவனம் செலுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு நெருக்கமான குழு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது (ஒரு குழுவில் 15-20 பள்ளிகளை உள்ளடக்கியது) மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதில் செயல்படுகிறது. [32]

குறிப்புகள் தொகு

  1. "Tax deductible under section 80g". Archived from the original on 2016-02-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  2. http://www.hvk.org/articles/0505/59.html பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம்]
  3. {https://www.indiatoday.in/india/story/rajiv-gandhi-foundation-took-grants-from-china-zakir-nair-amit-shah-2308630-2022-12-13 Rajiv Gandhi Foundation took grants from China, Zakir Naik: Amit Shah]
  4. {https://www.thehindu.com/news/national/fcra-registration-of-rajiv-gandhi-foundation-cancelled-after-it-received-funds-from-chinese-embassy-amit-shah/article66257966.ece FCRA registration of Rajiv Gandhi Foundation cancelled after it received funds from Chinese embassy: Amit Shah]
  5. {https://indianexpress.com/article/india/home-ministry-cancels-fcra-licence-of-rajiv-gandhi-foundation-8225840/ Home ministry cancels FCRA licence of Rajiv Gandhi Foundation, Rajiv Gandhi Charitable Trust]
  6. "Profile of RP Goenka". Archived from the original on 2016-04-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  7. "Rajiv Gandhi Institute of Contemporary Studies Archives".
  8. "Robert McNamara's lecture at Rajiv Gandhi Foundation" (PDF).
  9. "Nelson Mandela's lecture at Rajiv Gandhi Foundation". Archived from the original on 2015-12-23. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  10. "Hillary Clinton's lecture at The Rajiv Gandhi Foundation" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Margaret Thatcher Lecture at RGF Golden Jubilee Memorial Lecture Bangalore".
  12. "Edward Said's lecture at The Rajiv Gandhi Foundation".
  13. "RGF Annual Report, 2006-07 Literacy" (PDF). Archived from the original (PDF) on 2020-07-13. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  14. "Beti Foundation Collaborates with RGF for Vidyagyan Scholarship in UP" (PDF). Archived from the original (PDF) on 2015-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  15. "Scholarships available in IGRUA".
  16. "Oxford University Traveling Scholarship by Rajiv Gandhi Foundation" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  17. "NUEPA RGF Chair on Teacher Training". Archived from the original on 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  18. "RGF Work". Archived from the original on 2018-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  19. "Childrens Home; The Miracle Foundation by Rajiv Gandhi Foundation".
  20. "Red Ribbon Express". Archived from the original on 2017-11-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  21. "Rahul Gandhi Distributes Specially Designed Vehicles at RGF".
  22. "Young Scholars Leadership Initiative". Archived from the original on 2015-09-04. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  23. "Water & Sanitation & Beyond for 17 Villages funded by Rajiv Gandhi Foundation".[தொடர்பிழந்த இணைப்பு]
  24. "Gram Gaurav Sansthan". Archived from the original on 2016-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  25. "DNA report on RGF". http://www.dnaindia.com/india/report-rgf-in-pursuit-of-rajiv-gandhis-vision-and-ideals-1184480. 
  26. "An Insight into the Rajiv Gandhi Foundation".[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]
  27. "cambridge trust RGF Partnership".
  28. "Rajiv Gandhi UK Foundation Cambridge Partnership".
  29. "Rajiv Gandhi Foundation Annual Report 2006-07".
  30. "Beyond the Primer by Arvind gupta" (PDF).
  31. "Jagriti Gramin Library". Archived from the original on 2012-03-02. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  32. "RGF work". Archived from the original on 2018-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.