இரானோஜி சிந்தியா

இரானோஜி சிந்தியா (Ranoji Shinde)[1] (இறப்பு:1745 சூலை 3, சுஜால்பூர், மத்தியப் பிரதேசம் ) மேலும் இரானோஜி ராவ் சிந்தியா என்றழைக்கப்படும் இவர் 1720 முதல் 1745 வரை பாஜிராவ் பேஷ்வாவின் கீழ் முதலாம் சாகுஜியின் சேவையில் சர்தாராக பணிபுரிந்தார். மராத்தியர்களின் சிந்தியா வம்சத்தால் ஆளப்பட்ட அரச குவாலியர் மாநிலத்தின் நிறுவனர் ஆவார்.

இரானோஜி சிந்தியா
சர்தார்
புனேவில் சனிவார் வாடாவுக்கு வெளியே ஒரு சிற்பம்
ஆட்சிக்காலம்1731 - 1745
பின்னையவர்ஜெயப்பாஜி ராவ் சிந்தியா
இறப்பு3 சூலை 1745
சுஜால்பூர், மால்வா, மத்தியப் பிரதேசம்
துணைவர்மைனா பாய்
சீமா பாய்
குழந்தைகளின்
பெயர்கள்
ஜெயப்பாஜி ராவ் சிந்தியா
தாதாஜி ராவ் சிந்தியா
ஜோதிபா ராவ் சிந்தியா
துக்கோஜி ராவ் சிந்தியா
மகாதாஜி சிந்தியா
மரபுசிந்தியா
தந்தைமுதலாம் சாங்கோஜி சிந்தியா
மதம்இந்து சமயம்

இவர் மகாராட்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய இடமான கண்ணெர்கேராவைச் சேர்ந்த தேஷ்முக் ஆவார்.

பேஷ்வா பாஜிராவ் தலைமையில் சர்தாராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மால்வாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஏனெனில் மராட்டியர்கள் அதை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினர். தனது பிராந்தியத்தில், குவாலியரைச் சுற்றி, இவர் மராட்டிய பேரரசின் திறமையான சக்திக்கு வெளியே இருந்தார்.

1723 இல் மால்வாவின் படையெடுப்பினால் ஏற்பட்ட வெற்றியின் போது, பேஷ்வா பாஜிராவின் கீழ் இருந்த மூன்று மூத்த தளபதிகளில் ஒருவராக இவர் பணியாற்றினார். இவர் 1731 இல் மால்வா குடியேற்றத்தின் ஒரு பகுதியாக கணிசமான நிலப்பரப்பையும் உடைமைகளையும் வாங்கினார். மேலும் 1736 இல் அந்த மாகாணத்தின் சுபேதார் ஆனார்.

இவர் 1731 இல் உஜ்ஜைனில் தனது இடத்தை நிறுவினார். இது 1810 வரை சிந்தியாக்களின் தலைநகராக இருந்தது.

இவர் 1745 சூலை 3 ஆம் தேதி மால்வாவின் சுஜால்பூரில் இறந்தார். இவருக்கு ஜெயப்பாஜி ராவ் சிந்தியா, தத்தாஜி ராவ் சிந்தியா, ஜோதிபா ராவ் சிந்தியா, துகோஜி ராவ் சிந்தியா, மகாதாஜி சிந்தியா என்ற மகன்கள் இருந்தனர். மராட்டியப் பேரரசின் அடுத்தடுத்த வரலாற்றில் இவரது மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Ranojirao Shinde, Shinde.

மேலும் காண்க தொகு

  • [[குறிப்பு சிந்தியா அல்லது ஷிண்டே அல்லது சிந்தே அல்லது சிண்டே ஆகிய அனைத்து பெயர்களும் ஒன்றுதான். ஆனால் மகாராட்டிரா, ஆந்திரா, தெலங்காணா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வெவேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரானோஜி_சிந்தியா&oldid=3040879" இலிருந்து மீள்விக்கப்பட்டது