மகாதாஜி சிந்தியா

மகாதாஜி சிந்தியா (Mahadaji Shinde) (3 திசம்பர் 1730-12 பிப்ரவரி 1794) மகாத்ஜி சிந்தியா அல்லது மஹாதாஜ் சிந்தியா என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் மராட்டிய அரசியல்வாதியும், மத்திய இந்தியாவில் உஜ்ஜைனின் ஆட்சியாளராக இருந்தார். இவர் சிந்தியா வம்சத்தின் நிறுவனர் இரனோஜி ராவ் சிந்தியாவின் ஐந்தாவது மற்றும் இளைய மகன் ஆவார்.

மகாத்ஜி சிந்தியா
மெஹர்பன் ஸ்ரீமந்த் சர்தார் சிந்தியா பகதூர்(சிந்தியாவின் உயர் மற்றும் துணிச்சலான தலைவர்),
வாகில்-உல்-முட்லக் (பேரரசின் அரசப் பிரதிநிதி). அமீர்-உல்-உமாரா (அமீர்களின் தலைவர்)[1]
உதய்பூர் திவான் சாஹேப் (உதய்பூர் மாநிலத்தின் அரசப் பிரதிநிதி [2]
ஜேம்ஸ் வேல்ஸ் வரைந்த மகாதாஜி சிந்தியாவின் ஓவியம்
குவாலியரின் 6வது மராட்டிய பேரரசர்]]
ஆட்சிக்காலம்18 சனவரி 1768 — 12 பெப்ரவரி 1794
முடிசூட்டுதல்18 சனவரி 1768
முன்னையவர்மனோஜ் ராவ் சிந்தியா
பின்னையவர்தௌலத் ராவ் சிந்தியா
பிறப்பு3 திசம்பர் 1730
இறப்பு12 பெப்ரவரி 1794 (வயது 64)
வனவாடி, புனே, மராட்டியப் பேரரசு (தற்போதைய மகாராட்டிரம், இந்தியா)
துணைவர்9 மனைவிகள்
குழந்தைகளின்
பெயர்கள்
தௌலத் ராவ் சிந்தியா (தத்தெடுக்கப்பட்ட மகன்)
பாலா பாய்
சிம்னா பாய்
பெயர்கள்
ஸ்ரீமந்த் மாதோ (மாதோஜி) ராவ் சிந்தியா
மரபுசிந்தியா
தந்தைஇரனோஜி ராவ் சிந்தியா
தாய்சிமா பாய்
மதம்இந்து சமயம்

வட இந்தியாவில் மராட்டியம் உயிர்த்தெழுதல்

தொகு

1761 ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போருக்குப் பிறகு வட இந்தியாவில் மராட்டிய சக்தியை மீண்டும் உயிர்ப்பிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் மராட்டியப் பேரரசின் தலைவரான பேஷ்வாவின் நம்பகமான தளபதியாக உயர்ந்தார். முதலாம் மாதவராவுடனும், நானா பட்நாவிசுடனும் சேர்ந்து, மராட்டியத்தை உயிர்த்தெழுதச் செய்த மூன்று தூண்களில் இவரும் ஒருவர். குவாலியர் இவரது ஆட்சியின் போது, மராட்டிய பேரரசின் முன்னணி மாநிலமாகவும், இந்தியாவின் முன்னணி இராணுவ சக்திகளில் ஒன்றாகவும் ஆனது. 1771 ஆம் ஆண்டில் இரண்டாம் ஷா ஆலத்துடன் தில்லிக்குச் சென்றபின், தில்லியில் முகலாயர்களை மீட்டெடுத்து, பேரரசின் அரசப் பிரதிநிதியானார். இவர் சென்விசுகளை தனது முதன்மை ஆலோசகரளாக நியமித்துக் கொண்டார்.

இவர் மதுராவில் ஜாட்களின் சக்தியை நிர்மூலமாக்கினார். 1772-73 காலப்பகுதியில் இவர் ரோகில்கண்ட்டில் பஷ்தூன் ரோகில்லாக்களின் சக்தியை அழித்து நஜிபாபாத்தை கைப்பற்றினார். முதல் ஆங்கிலேய-மராத்தியப் போரின் போது இவரது பங்கு மராட்டிய தரப்பிலிருந்து மிகப் பெரியது. ஏனெனில் இவர் வாட்கான் போரில் ஆங்கிலேயர்களைத் தோற்கடித்தார். இதன் விளைவாக வாட்கான் உடன்படிக்கை ஏற்பட்டது. மீண்டும் மத்திய இந்தியாவில், தனி ஒருவராகபேஷ்வாவிற்கும், ஆங்கிலேயர்களிடையே சமரசம் செய்து வைத்தார். இதன் விளைவாக 1782 இல் சல்பாய் உடன்படிக்கை ஏற்பட்டது. 1782–83 ஆம் ஆண்டில், இவர், மகமூத் ஷா அப்தாலியை தோற்கடித்து சோம்நாத் கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று வெள்ளி வாயில்களை வெற்றிகரமாக லாகூரிலிருந்து மீண்டும் சோம்நாத்துக்கு கொண்டு வந்தார். குசராத்தின் பூசாரிகளும், அப்போதைய ஆட்சியாளர் கெய்க்வாட்டும் இக்கதவுகளை சோம்நாத் கோவிலில் அனுமதிக்க மறுத்த பின்னர், இந்த வெள்ளி வாயில்கள் உஜ்ஜைன் கோவில்களில் வைக்கப்பட்டன. இன்று அவை இந்தியாவின் மகாகாலேசுவர் ஜோதிர்லிங்கம், உஜ்ஜைனின் கோபால் மந்திர் ஆகிய இரண்டு கோவில்களில் காணப்படுகின்றன.

1787 ஆம் ஆண்டில் இவர் இராஜபுதனத்தை ஆக்கிரமிக்க முயன்றார். ஆனால் இவரை லால்சாட்டில் ராஜபுத்திர படைகள் விரட்டியடித்தன. 1790 ஆம் ஆண்டில் பதான், மெர்டா ஆகிய போர்களில் சோத்பூரிலும், செய்ப்பூரிலும் இராஜபுத்திரர்களை தோற்கடித்தார்.

சல்பாய் ஒப்பந்தம்

தொகு

பிரித்தானிய தோல்வியின் பின்னர், வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு புதிய ஒப்பந்தத்தை முன்மொழிந்தார். இது பேஷ்வாவிற்கும் பிரிட்டிசாருக்கும் இடையே சவாய் மாதவராவ் பேஷ்வாவாக அங்கீகரிக்கப்பட்டு இரகுநாத்ராவிற்கு ஓய்வூதியம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் யமுனாவிற்கு மேற்கே சிந்தியாவின் அனைத்து பிரதேசங்களுக்கும் திரும்பக் கிடைத்தது. இதன் மூலம் படைகள் உஜ்ஜைனுக்கு திரும்பப் பெறப்பட்டது. செயின்ட் ஜெர்மைன்ஸின் [3] என்பவரும் (ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் நடத்தியவர்) திரு. டேவிட் ஆண்டர்சன் (1750-1825) என்பவரும் இவரது அரசவையில் நியமிக்கப்பட்டனர்.

முகாத் பிரதேசமாக இருந்த பஞ்சாபையும் இவர் ஆட்சி செய்தார். மேலும் சிஸ்-சட்லெஜ் பிராந்தியத்தின் சீக்கிய சர்தார்களும் பிற அரசர்களும் இவருக்கு கப்பம் செலுத்தினர். [4]

பின் வரும் வருடங்கள்

தொகு

இவர் நயப் வாகில்-உல்-முத்லக் (முகலாய விவகாரங்களின் துணை அரசப் பிரதிநிதி) ஆனார். மேலும் முகலாயர்கள் இவருக்கு 1784 இல் அமீர்-உல்-உமாரா ( அமீர்களின் தலைவர்) என்ற பட்டத்தையும் வழங்கினர். [5]

இவரது மற்றொரு சாதனை ஐதராபாத் நிசாம் இராணுவத்தின்மீது ஒரு போரில் இவர் பெற்ற வெற்றியாகும். இந்த போருக்குப் பிறகு வட இந்திய அரசியலில் நிசாம் அரசு ஒரு காரணியாக நின்றுவிட்டது. பின்னர் அது பொதுவாக தக்காணத்தில் தன்னை சுருக்கிக் கொண்டது. 1792 இல் மைசூரின் திப்பு சுல்தானுடன் ஏற்பட்ட சமாதானத்திற்குப் பிறகு, திப்புக்கு எதிராக இயக்கப்பட்ட பிரிட்டிசார், ஐதராபாத்தின் நிசாம், பேஷ்வா ஆகியோருக்கிடையேயான ஒரு ஒப்பந்தத்தை நிறைவு செய்வதைத் தடுக்க இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தினார்.

மரணமும் மரபும்

தொகு
 
சிந்தியா சத்ரி, வனாவடி, புனே: மகாத்ஜி சிந்தியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னம்

லகேரிப் போருக்குப் பிறகு, தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும்போது இவர் 1794 பிப்ரவரி 12 அன்று புனேவுக்கு அருகிலுள்ள வனாவாடியில் உள்ள தனது முகாமில் இறந்தார். இவருக்கு வாரிசுகள் எவருமில்லை. இவருக்குப் பின் இவரது தத்து மகன் தௌலத் ராவ் சிந்தியா ஆட்சிக்கு வந்தார்.

இவரது ஆங்கில வாழ்க்கை வரலாற்றாசிரியரான கீனி, இவரை 18 ஆம் நூற்றாண்டில் தெற்காசியாவின் மிகப் பெரிய மனிதர் என்று வர்ணித்துள்ளார். [6] வட இந்தியா மீது மராட்டிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட இவரது பணி முக்கிய பங்கு வகித்தது.

புனேவில் உள்ள வனாவாடியில் அமைந்துள்ள "சிந்தியா சத்ரி", இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இது பிப்ரவரி 12, 1794 அன்று இவர் தகனம் செய்த இடத்தைக் குறிக்கும் ஒரு மண்டபமாகும். ராஜ்புத் கட்டடக்கலை பாணியில் மூன்று மாடி நினைவுச்சின்னம் நகரத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகா திகழ்கிறது.

பிரபலமான கலாச்சாரத்தில்

தொகு
  • 1994 ஆம் ஆண்டில், தி கிரேட் மராத்தா என்ற தொலைக்காட்சித் தொடர் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு டிடி நேஷனலில் ஒளிபரப்பப்பட்டது. இவரது கதாபாத்திரத்தை ஷாபாஸ் கான் என்ற நடிகர் சித்தரித்தார். [7]

மேற்கோள்கள்

தொகு
  1. Page 334, A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century, By Salma Ahmed Farooqui, Publisher: Pearson Education India, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8131732029
  2. Rajasthan Through the Ages By R.K. Gupta, S.R. Bakshi pg 255
  3. Burkes Landed Gentry: Anderson of Northfield
  4. History Of The Marathas - R.S. Chaurasia - Google Books. Books.google.co.in. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126903948. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  5. A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid ... - Farooqui Salma Ahmed, Salma Ahmed Farooqui - Google Books. Books.google.co.in. 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131732021. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
  6. Page 156, The Great Maratha Mahadaji Scindia, By N. G. Rathod, Publisher: Sarup & Sons, 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185431523, 9788185431529
  7. "Metro Plus Chennai / Telewatch : The return of the Sultan". The Hindu. 2006-05-17. Archived from the original on 2011-01-05. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.

மேலும் படிக்க

தொகு
  • Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India, Volume 12. 1908–1931; Clarendon Press, Oxford.
  • Keene, H. G. The Fall of the Moghul Empire of Hindustan e-text
  • Markovits, Claude (ed.) (2004). A History of Modern India: 1480–1950. Anthem Press, London.
  • [श्रीनाथ माधवजी  : महायोद्धा महादजी की शौर्यगाथा / प्रथम संस्करण / प्रकाशन वर्ष - २०१३ / लेखक :- पण्डित नीलेश ईश्वरचन्द्र करकरे] / (Research book) Shreenath Madhavji: Mahayoddha Mahadji Ki Shourya Gatha/ First Edition / Published 2013/ Author :- Pandit Neelesh Ishwarchandra Karkare
  • Amitabh Mishra (1 January 2007). Heritage Tourism in Central India: Resource Interpretation and Sustainable Development Planning. Kanishka Publishers, Distributors. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7391-918-3.
  • "Mosque and Tomb of the Emperor Sultan Mahmood of Ghuznee". British Library. Retrieved 1 November 2014.
  • 101 pilgrimages. Outlook India Pub. 2006. p. 79

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mahadaji Scindia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதாஜி_சிந்தியா&oldid=3565966" இலிருந்து மீள்விக்கப்பட்டது