இராபர்த்து ப. வில்சன்
இராபர்த்து பட்லர் "பாபு" வில்சன், இளையவர் (Robert Butler "Bob" Wilson, Jr. பிறப்பு: மே 16, 1937) ஓர் அமெரிக்க பொருளாதார வல்லநரும் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பிரிவில் புகழ்பெற்ற பேராசிரியரும் ஆவார். ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகளைப்பற்றியும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காகவும் இவருடன் பணிபுரியும் பேராசிரியரான பால் மில்கிரோமுடன் [1] இணைந்து 2020 ஆம் ஆண்டில் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு பெற்றார்.[2]
இராபர்ட்டு ப. உவில்சன் Robert B. Wilson | |
---|---|
பிறப்பு | 16 மே 1937 செனீவா, நெப்ராசுக்கா, ஐக்கிய அமெரிக்கா |
துறை | பொருளியலாளர் மேலாண்மை அறிவியல் |
பணியிடங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆர்வர்டு சட்டப் பள்ளிக்கூடம் |
கல்வி | ஆர்வர்டு பல்கலைக்கழகம் (இ.க, மு.க.மே, முனைவர்) |
ஆய்வேடு | A simplicial algorithm for concave programming (1963) |
ஆய்வு நெறியாளர் | அவார்டு இரைபிபா |
முனைவர் பட்ட மாணவர்கள் | பென் ஒம்சுடொரோம் பால் மில்கிரோம் ஆல்வின் ரோத் |
அறியப்படுவது | ஆட்டக் கோட்பாடு |
விருதுகள் | கோல்டன் கூசு விருது (2014) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2020) |
மேலாண்மை அறிவியல் மற்றும் வணிக பொருளாதாரத்தில் இவரது பங்களிப்பிற்காக பரவலாக இவர் அறியப்பட்டவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு தொடர்ச்சியான இருபடி நிரலாக்கத்தை அறிமுகப்படுத்தியது, இது நேரியல் அல்லாத நிரலாக்கத்திற்கான ஒரு முன்னணி செயல்பாட்டு முறையாக மாறியது. இசுட்டான்போர்டு தொழிற் பள்ளியில் உள்ள மற்ற கணித பொருளாதார வல்லுனர்களுடன், கூட்டுறவு அல்லாத விளையாட்டுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தொழில்துறை அமைப்பையும், அமைப்புக் கோட்பாட்டின் பொருளாதாரத்தையும் மறுசீரமைக்க உதவினார். நேரியல் சாரா விலைமதிப்பீடு குறித்த அவரது ஆராய்ச்சி பெரிய நிறுவனங்களுக்கான கொள்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எரிசக்தி துறையில் குறிப்பாக மின்சாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விருதுகள்
தொகுவில்சன் ஆர்வர்டு கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பள்ளியில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை முடித்ததிலிருந்து, தொழில்முறை பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களில் சுமார் 100 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், இதற்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். [3]
அக்டோபர் 2020 இல், ராயல் சுவீடிய அறிவியல் உயர்கழகம் (அகாதமி ஆஃப் சயின்சஸ்), மில்கிரோம் மற்றும் இராபர்த்து வில்சன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் நினைவு பரிசை வழங்கியதாகக் கூறியது, ஏனெனில் அவர்கள் "பாரம்பரிய வழிகளில் அதாவது, வானொலி அதிவெண்கள் மூலமாக விற்கக் கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க தங்கள் நுண்ணறிவினை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ளது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன.[4]
சான்றுகள்
தொகு- ↑ Business, Charles Riley, CNN. "Nobel Prize in economics awarded to Paul Milgrom and Robert Wilson". CNN. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
{{cite web}}
:|last=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Royal Swedish Academy of Sciences(October 12, 2020). "The Prize in Economic Sciences 2020". செய்திக் குறிப்பு.
- ↑ "Robert Wilson". Graduate School of Stanford Business. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
- ↑ Royal Swedish Academy of Sciences(October 12, 2020). "The Prize in Economic Sciences 2020". செய்திக் குறிப்பு.
வெளியிணைப்புகள்
தொகு- "Curriculum Vitae of Robert B. Wilson" (PDF). Stanford University. Archived from the original (PDF) on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- "Robert B. Wison". ISI HighlyCitied.com. Archived from the original on 2007-05-19. பார்க்கப்பட்ட நாள் 2008-01-24.
- "Articles published by Wilson". Stanford University. Archived from the original on 2008-02-08. பார்க்கப்பட்ட நாள் 2008-01-24.
- "Selected Working Papers and Publications". Stanford University. Archived from the original on 2020-08-07. பார்க்கப்பட்ட நாள் 2008-01-24.
- தனிப்பட்ட வலைப்பக்கம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- David M. Kreps; John Roberts; Robert B. Wilson (July 1986), Contributions to the New Palgrave (PDF), Research paper, vol. 892, Palo Alto, CA: Graduate School of Business, Stanford University, (Draft of articles for the first edition of New Palgrave Dictionary of Economics), பார்க்கப்பட்ட நாள் 7 February 2011