இராமச்சந்திர புருசோத்தம் மராத்தே

பண்டிட் இராம் மராத்தே என்றும் அழைக்கப்படும் இராமசந்திர புருசோத்தம் மராத்தே (Ramchandra Purushottam Marathe) (23 அக்டோபர் 1924 - 4 அக்டோபர் 1989) ஒரு மராத்தி இசை இயக்குனரும், பாடகரும், [1] மேடையிலும், திரைப்படங்களிலும் நடிகராக இருந்தார். [2] [3] குழந்தை நடிகராக, பிரபாத் திரைப்பட நிறுவனத்தின் 1938 திரைப்படமான கோபால் கிருட்டிணா என்பதில் கிருட்டிணனாக நடித்தார். [4] இந்துஸ்தானி இசையின் ஆக்ரா கரானாவின் (பாரம்பரியம்) மேதை விலாயத் உசைன் கான், [5] கிருட்டிணராவ் புலாம்ப்ரிகர் போன்ற பலரிடம் சீடராக இருந்தர். கிருட்டிணாராவ் மூலம், ஜெய்ப்பூர், குவாலியர் மற்றும் ஆக்ரா போன்ற பல்வேறு கரானங்களின் கூறுகளைக் கொண்ட தனது கயல் பாணியை உருவாக்கினார். [6]

இராமச்சந்திர புருசோத்தம் மராத்தே
பிறப்பு23 அக்டோபர் 1924 (புனே)
இறப்பு4 அக்டோபர் 1989 (தானே, மும்பை)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்இராம் மராத்தே, பண்டிட் இராம் மராத்தே
அறியப்படுவதுமராத்தி இசை, இந்துஸ்தானி இசை, சங்கீத நாடகம்
உறவினர்கள்பாரம்பரிய இசைப்பாடகர், மேடை நடிகர்

சொந்த வாழ்க்கைதொகு

இவர், 1924 அக்டோபர் 23 அன்று புனேவில் பிறந்தார். அங்கு பாவே பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1933இல் சாகர் திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் "மன்மோகன்", "ஜாகிர்தார்", "வதன்" போன்ற மெகபூப்பின் படங்களில் நடித்தார். பின்னர் இவர் 1935இல் பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்தார். புகழ்பெற்ற இயக்குனரான வி. சாந்தாராமின் வழிகாட்டுதலில் "கோபால் கிருட்டிணன்" என்ற படத்தில் நடித்தார். இவர் 1940 வரை பிரபாத் நிறுவனத்துடன் இருந்தார். "அட்மி" (இந்தி) "மனுஸ்" (மராத்தி) போன்ற படங்களில் நடித்தார்.

குறிப்புகள்தொகு

  1. Dr. Afshana Shafi. THE LEGACY OF GANGUBAI HANGAL. Horizon Books ( A Division of Ignited Minds Edutech P Ltd). பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-86369-56-7. 
  2. Parrikar, Ranjan. "Musical Traditions of India".
  3. S. M. M. Ausaja (2009). Bollywood in Posters. Om Books International. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87108-55-9. 
  4. Mujahar, Isak. MAHARASHTRA BIRTHPLACE OF INDIAN FILM INDUSTRY. GOVERNMENT OF MAHARASHTRA. பக். 73. 
  5. Tapasi Ghosh (2008). Pran Piya Ustad Vilayat Hussain Khan: His Life and Contribution to the World of Music. Atlantic Publishers & Dist. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0855-4. 
  6. Shah, V. and Kashalkar, U., 2011. A Conversation with Ulhas Kashalkar. India International Centre Quarterly, 38(1), pp.134-141.