இராம் மூர்த்தி

இந்திய அரசியல்வாதி

இராம் மூர்த்தி (Ram Murti) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதீய லோக்தளம் கட்சியின் உறுப்பினராக இவர் பரேலி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட அனைத்து இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று பல்வேறு முறை சிறை சென்றுள்ளார். 1946 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், 1974 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை ஏமாவதி நந்தன் பகுகுணா மற்றும் என்.டி திவாரி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். [1] [2] [3]

இராம் மூர்த்தி
Ram Murti
இராம் மூர்த்தி
பதவியில்
1971-1977
முன்னையவர்சத்தீசு சந்திரா (அரசியல்வாதி)
பின்னவர்பேகம் அபிதா அகமது
தொகுதிபரேலி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1910-07-10)10 சூலை 1910
பரேலி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2 அக்டோபர் 1988
அரசியல் கட்சிசனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய லோக் தளம்
நிறுவன காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராம் ராக்கி தேவ்
கல்விஎம்.ஏ., எல்.எல்,பி.,
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் இலக்னோ பல்கலைக்கழகம்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "6th Lok Sabha Members Bioprofile". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2532.htm. பார்த்த நாள்: 4 September 2020. 
  2. "Bareilly Parliamentary Constituencies". http://www.elections.in/uttar-pradesh/parliamentary-constituencies/bareilly.html. பார்த்த நாள்: 4 September 2020. 
  3. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_மூர்த்தி&oldid=3883614" இலிருந்து மீள்விக்கப்பட்டது