இரா. பிரபு
இரா. பிரபு (R. Prabhu, பிறப்பு: மே 31, 1947) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் வேளாண்துறை அமைச்சரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். 1980 ஆம் ஆண்டு இருந்து நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து, மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் ஐந்து முறை தேர்ந்தேடுக்கப்பட்டார்.[1]. இவர் அந்தத் தொகுதியிலிருந்து அதிக முறை தேர்வு செய்யப்பட்ட, பிரதிநிதி ஆவார்.[2][3]
இரா. பிரபு | |
---|---|
வேளாண் துறை அமைச்சர் வேதியியல் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் | |
பதவியில் 16 ஏப்ரல் 1987 – 23 மார்ச் 1989 | |
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
பதவியில் 1980–1996 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 மே 1947 மதராசு, பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அனிதா |
பிள்ளைகள் | 1 மகன் |
வாழிடம்(s) | கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை |
As of 22 செப்டம்பர், 2006 |
இளமைக் காலம்
தொகுஇவர் 31 மே, 1947 ஆம் ஆண்டு கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான பி. ஆர். இராமகிருஷ்ணன் மற்றும் ஆர். ராஜேஸ்வரி ஆகியோருக்கு பிறந்தார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வென்றார். பின்னர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில், முதுகலைப் பட்டம் பெற்றார்.
போட்டியிட்ட தேர்தல்கள்
தொகுஆண்டு | கட்சியின் பெயர் | தொகுதியின் பெயர் | சட்டமன்றம்/ நாடாளுமன்றம் | பெற்ற வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|---|
1980 | இந்திய தேசிய காங்கிரசு | நீலகிரி | மக்களவை | வெற்றி | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | நீலகிரி | மக்களவை | வெற்றி | |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | நீலகிரி | மக்களவை | வெற்றி | |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | நீலகிரி | மக்களவை | வெற்றி | |
2004 | இந்திய தேசிய காங்கிரசு | நீலகிரி | மக்களவை | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fourteenth Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 15 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 April 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Third Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 29 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
- ↑ "Second Lok Sabha Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]