இரிடியம்(IV) ஆக்சைடு

இரசாயன கலவை

இரிடியம்(IV) ஆக்சைடு (Iridium(IV) oxide) என்பது IrO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதுவே இரிடியத்தின் நன்கு அறியப்பட்டதும் வரையருக்கப்பட்டதுமான ஆக்சைடு சேர்மமாகும். இதனுடைய படிகவடிவம் ஆறு ஆயங்கள் இரிடியமும் மூன்று ஆயங்கள் ஆக்சிசனையும் கொண்டு, தைட்டானியம் ஈராக்சைடின் உரூத்தைல் படிகவமைப்பைக் கொண்டுள்ளது[1].

இரிடியம்(IV) ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12030-49-8 Y
ChemSpider 10605808 Y
InChI
  • InChI=1S/Ir.2O/q+4;2*-2 Y
    Key: NSTASKGZCMXIET-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ir.2O/q+4;2*-2
    Key: NSTASKGZCMXIET-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82821
  • [Ir+4].[O-2].[O-2]
பண்புகள்
IrO2
வாய்ப்பாட்டு எடை 224.22 கி/மோல்
தோற்றம் கருப்புநிறத் திண்மம்
அடர்த்தி 11.66 கி/செ.மீ3
உருகுநிலை 1,100 °C (2,010 °F; 1,370 K) சிதைவடையும்
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு உரூத்தைல் (நான்முகம்)
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முக (Ir); முக்கோணம் (O)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரிடியம்(IV) புளோரைடு, இரிடியம் இருசல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம் ஈராக்சைடு, ஆசுமியம் ஈராக்சைடு, பிளாட்டினம் ஈராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மற்ற அரிய ஆக்சைடுகளுடன் இரிடியம்(IV) ஆக்சைடைச் சேர்த்து தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் மின்னாற்பகுத்தல் வினைகளில் நேர்மின் முனை வாய்களில் பூசுவதற்குப் பயன்படுகிறது. மின் உடலியங்கியல் ஆய்வுகளுக்குப் பயனாகும் நுண்மின்முனைவாய்களிலும் இரிடியம்(IV) ஆக்சைடு பயன்படுகிறது[2].

இரிடியம் உலோகத்தின் இறுதிநிலை வடிவமாகப் பிரித்தெடுக்கப்பட்ட இரிடியத் துகளை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாக இரிடியம்(IV) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Cogan, Stuart F. (August 2008). "Neural Stimulation and Recording Electrodes". Annual Review of Biomedical Engineering 10 (1): 275–309. doi:10.1146/annurev.bioeng.10.061807.160518. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(IV)_ஆக்சைடு&oldid=2052540" இலிருந்து மீள்விக்கப்பட்டது