இருகுளோரோ அயோடோமெத்தேன்

வேதிச் சேர்மம்

இருகுளோரோ அயோடோமெத்தேன் (Dichloroiodomethane) என்பது CHCl2I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூன்று ஆலோமெத்தேன் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. குளோரோஃபார்ம் போன்ற வாசனையைக் கொண்டுள்ளது.[1] தீப்பிடித்து எரியாது. வெளிப்படையான வெளிர் மஞ்சள் திரவமாகக் காணப்படுகிறது. அசிட்டோன், டை எத்தில் ஈதர், எத்தனால் மற்றும் பென்சீன் போன்ற கரிம கரைப்பான்களில் இருகுளோரோ அயோடோமெத்தேன் கரையும்.[2] காற்று மற்றும் ஒளியுடன் தொடர்பு கொள்ளும்போது சிதைவடைகிறது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட குழாய் நீரில் கண்டறியப்படுகிறது.[3] எனவே இது ஒரு மாசுபடுத்தும் பொருளாகக் கருதப்படுகிறது. தண்ணீரில் 275 ஆண்டுகள் அரை ஆயுள் காலம் கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.[4]

இருகுளோரோ அயோடோமெத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோ(அயோடோ)மெத்தேன்
வேறு பெயர்கள்
டைகுளோரோ அயோடோமீத்தேன், குளோரோ அயோடோஃபார்ம்,[1] அயோடோடைகுளோரோமெத்தேன்.
இனங்காட்டிகள்
594-04-7
ChemSpider 11165
InChI
  • InChI=1S/CHCl2I/c2-1(3)4/h1H
    Key: HNLZCOJXSLDGKD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11655
  • ClC(I)Cl
UNII 59FJY8K9MX
பண்புகள்
CHCl2I
வாய்ப்பாட்டு எடை 210.82 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள் நீர்மம்
கொதிநிலை 131°செல்சியசு[2]
சிறிதளவு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அயோடோஃபார்ம் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1824 ஆம் ஆண்டில் இயார்ச்சசு-சைமன் செருல்லாசு என்பவரால் இருகுளோரோ அயோடோமெத்தேன் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

தயாரிப்பு

தொகு

இருகுளோரோ அயோடோமெத்தேன் தயாரிப்பதற்கான பல தயாரிப்பு வழிகள் அறியப்படுகின்றன. சோடியம் அயோடைடு [5] அல்லது அயோடோயீத்தேனுடன்[6] குளோரோஃபார்மைச் சேர்த்து வினை புரியச் செய்தால் இருகுளோரோ அயோடோமெத்தேன் உருவாகிறது. பாசுபரசு பெண்டாகுளோரைடு அல்லது பாதரசக் குளோரைடுடன் அயோடோஃபார்ம் சேர்த்து தயாரித்தல் பழைய தயாரிப்பு முறையாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Leopold Gmelin, Henry Watts, Chloriodoform in Hand-book of Chemistry (1848), pages 337–339
  2. 2.0 2.1 D213 Dichloroiodomethane, The Dictionary of substances and their effects, p. 324
  3. Emma Goslan, Kenneth Clive Thompson, Simon Gillespie, Disinfection By-products in Drinking Water (2015), Royal Society of Chemistry
  4. Liu, David H. F; Liptak, Bela G, Groundwater and surface water pollution, page 57
  5. Determination of Dichloroiodomethane in Water (1996)
  6. Nariyoshi Kawabata, Masami Tanimoto, Shigehiro Fujiwara. Synthesis of monohalocyclopropane derivatives from olefins by the reaction with trihalomethanes and copper, Tetrahedron, 1979