எத்தில் அயோடைடு
எத்தில் அயோடைடு (Ethyl iodide) என்பது C2H5I என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நிறமற்ற வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அயோடோ மீத்தேன் என்றும் அழைக்கப்படுகிறது. எத்தனாலுடன் அயோடின் மற்றும் பாசுபரசு[2] சேர்த்து சூடுபடுத்தும் போது எத்தில் அயோடைடு உருவாகிறது. காற்றில் படும்போது குறிப்பாக ஒளியால் பாதிக்கப்பட்டு கரைந்துள்ள அயோடின் காரணமாக மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறுகிறது. ஐதரயோடிக் அமிலம் மற்றும் எத்தனால் வினைபுரியும் போதும் காய்ச்சி வடித்து எத்தில் அயோடைடு தயாரிக்கலாம். செப்புத் துகளில் சேமித்து வைத்தால் மட்டுமே விரைவாகச் சிதைவடைவதில் இருந்து எத்தில் அயோடைடை பாதுகாக்க முடியும். இவ்வாறான முறையும் கூட ஓராண்டு வரைதான் பலன்தரும் என்பது கவனிக்கத் தக்கதாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அயோடோ ஈத்தேன்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
75-03-6 | |||
Beilstein Reference
|
505934 | ||
ChEBI | CHEBI:42487 | ||
ChEMBL | ChEMBL1232588 | ||
ChemSpider | 6100 | ||
EC number | 200-833-1 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6340 | ||
வே.ந.வி.ப எண் | KI4750000 | ||
| |||
பண்புகள் | |||
C2H5I | |||
வாய்ப்பாட்டு எடை | 155.97 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.940 கி மி.லி−1 | ||
உருகுநிலை | −111.10 °C; −167.98 °F; 162.05 K | ||
கொதிநிலை | 71.5 முதல் 73.3 °C; 160.6 முதல் 163.8 °F; 344.6 முதல் 346.4 K | ||
4 கி லி−1 ( 20 °செ) இல் | |||
எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கும் | ||
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் | ||
மட. P | 2.119 | ||
ஆவியமுக்கம் | 17.7 kPa | ||
என்றியின் விதி
மாறிலி (kH) |
1.8 μmol Pa−1 kg−1 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.513–1.514 | ||
பிசுக்குமை | 5.925 mPa s (at 20 °C) | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−39.9–−38.3 kJ mol−1 | ||
Std enthalpy of combustion ΔcH |
−1.4629–−1.4621 MJ mol−1 | ||
வெப்பக் கொண்மை, C | 109.7 J K−1 mol−1 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | DANGER | ||
H302, H315, H317, H319, H334, H335 | |||
P261, P280, P305+351+338, P342+311 | |||
ஈயூ வகைப்பாடு | Xn | ||
R-சொற்றொடர்கள் | R20, R36/37/38, R42/43 | ||
S-சொற்றொடர்கள் | S23, S26, S36/37, S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 72 °C (162 °F; 345 K) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
330 g m−3 (oral, rat) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஏனெனில் அயோடைடு நல்ல விடுபடும் குழுவாகும், மற்றும் எத்தில் அயோடைடு ஒரு வலிமையான எத்திலேற்றும் முகவராகக் செயல்படக் கூடியச் சேர்மமாகும். ஐதரசனை தனி உறுப்பாக வழங்கும வேதிப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
தொகுசிவப்பு பாசுபரசு, எத்தனால், மற்றும் அயோடின் ஆகியன வினைபுரிவதால் எத்தில் அயோடைடு தயாரிக்கப்படுகிறது. தனிநிலை எத்தனாலும் அயோடின் பொடியும் எத்தனாலில் கரைந்து இச்செயல் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. செயல்முறை நிகழும் போது வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைப்புத்தன்மையற்றது என்ற காரணத்தினால் பாசுபரசு முக்குளோரைடு அவ்விடத்திலேயே தயாரித்துக் கொள்ளப்படுகிறது[3]
மாசு கலந்து உருவாகும் இக்கலவை காய்ச்சி வடித்தல் முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "iodoethane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.
- ↑ Merck Index of Chemicals and Drugs, 9th ed., monograph 3753
- ↑ Csámpai,A;Láng,E;Majer,Zs;Orosz,Gy;Rábai,J;Ruff,F;Schlosser,G;Szabó,D;Vass,E: Szerves Kémiai Praktikum page: 274, Eötvös kiadó 2012 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-963-312-129-0