இருள் (மலையாளத் திரைப்படம்)
இருள் (Irul) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மர்ம குற்றவியல் பரப்பப்பூட்டும் திரைப்படமாகும், நசீப் யூசுப் இசுதீன் இயக்கியுள்ள இந்த படத்தை அன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் பிளான் ஜே ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிதுள்ளன. இதில் பகத் பாசில், சௌபின் சாகிர், தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப் படம் 2 ஏப்ரல் 2021 அன்று நெட்ஃபிக்சில் வெளியானது.[1][2]
இருள் | |
---|---|
Promotional poster | |
இயக்கம் | நசீப் யூசுப் இசுதீன் |
தயாரிப்பு | அன்டோ ஜோசப் ஜோமன் டி. ஜான் ஷமீர் முஹம்மது |
கதை | சுனில் யாதவ் |
இசை | Sreerag Saji |
நடிப்பு | பகத் பாசில் சௌபின் சாகிர் தர்சனா ராஜேந்திரன் |
ஒளிப்பதிவு | ஜோமன் டி. ஜான் |
படத்தொகுப்பு | சமீர் முஹம்மது |
கலையகம் | அன்டோ ஜோசப் திரைப்பட நிறுவனம் பிளான் ஜே ஸ்டுடியோஸ் |
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
வெளியீடு | ஏப்ரல் 2, 2021(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
கதை
தொகுஎழுத்தாளரும் தொழிலதிபருமான அலெக்ஸ் பரயிலும், அவரது காதலி அர்ச்சனா பிள்ளையும் செல்பேசிகள் இல்லாமல் வார இறுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிடுகின்றனர். திட்டமிட்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் வழியில், அவர்களின் மகிழுந்து பழுதடைகிறது. ஜோடிகள் அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகின்றனர். வீட்டு உரிமையாளர் அவர்களை வரவேற்கிறார் புயல் காரணமாக தொலைபேசி இணைப்பு செயல்படவில்லை என்று கூறி, இரவு தங்க அனுமதிக்கிறார். ஒரு தொடர் கொலையாளியை மையமாகக் கொண்ட அலெக்ஸின் புத்தகமான '' இருள் '' குறித்து மூவரும் உரையாடுகின்றனர்.
இதற்கிடையில் வீட்டில் மின் இணைப்பு அறுபடுகிறது. அந்த இருள் மாளிகையின் நிலவறையில் ஒரு பெண் கொலையுண்டு கிடப்பது தெரியவருகிறது. அங்கிருக்கும் ஒருவர்தான் கொலையை நிகழ்த்தியவர் என்பதும், கொலையாளி தொடர் கொலைகளை செய்பவன் என்றும் என்பதும் தெரிய வருகிறது. இதன் பிறகு அங்கு நிகழும் நிகழ்வுகளில் தொடர் கொலையாளி யார் என்பதில் கண்டடைவதில் ஏற்படும் மோதலும். அதில் உள்ள புதிர் முடிச்சுகளின் அவிழ்ப்பும் அடுத்தடுத்த காட்சிகளில் வேகமெடுக்கின்றன.
நடிகர்கள்
தொகு- பகத் பாசில் - உன்னி
- சௌபின் சாகிர் - அலெக்ஸ் பரயில்
- தர்சனா ராஜேந்திரன் - அர்ச்சனா பிள்ளை
- ஜீபா ஜான் - வாணி பாலன்
- மஷர் ஹம்சா - புத்தக கடை ஊழியர்கள்
தயாரிப்பு
தொகுபாலிவுட் படங்களான கை போ சே, ஹேப்பி நியூ இயர், ரெயிஸ், நியூட்டன் போன்றவற்றில் உதவி இயக்குநராக பணியாற்றிய நசீப் யூசுப் இசுதீன்,[3] 2020 செப்டம்பரில் பகத் பாசில், சௌபின் சாகிர், தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க ஈருல் வித் பிளான் ஜே ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தின் வழியாக நசீப் இயக்குநராக அறிமுகமாவதாக அறிவித்தார்.[4] இப்படமானது மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டிருக்கும் "பரபரப்பூட்டும் மர்ம" படம் என்று கூறப்படது.[5] படத்தின் படப்பிடிப்பு 16 செப்டம்பர் 2020 அன்று குட்டிக்கனத்தில் துவங்கியது.[6][7] படத்தின் படப்பிடிப்பானது ஒரே கட்டமாக 30 நாட்கள் நடந்ததாக கூறப்படுகிறது, படத்தின் பெரும்பகுதி உள்ளரங்கில் எடுக்கபட்டது. மேலும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்க படமாக்கப்பட்டது. கரோனா ஊரடங்கின்போது படமாக்கப்பட்ட பாசிலின் இரண்டாவது படம் இது.[8] படக் குழு 20 அக்டோபர் 2020 அன்று படத் தயாரிப்பை முடித்தது.[9]
வெளியீடு
தொகுஇந்த படத்திற்கான முன்னோட்டத்தை நெட்ஃபிக்ஸ் இந்தியா 2021 மார்ச் 18 அன்று வெளியிட்டது.[10] 2021 ஏப்ரல் 2 ஆம் நாள் நெற்ஃபிளிக்சு மூலம் படம் வெளியானது.[11][12][13][14][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fahadh Faasil's 'Irul' to release on Netflix". தி நியூஸ் மினிட்.
- ↑ "Irul trailer Fahadh Faasil, Soubin Shahir, Darshana Rajendran's murder mystery to release on Netflix". இந்தியன் எக்சுபிரசு.
- ↑ "Fahadh Faasil, Soubin Shahir start shooting for Irul – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ "Fahadh Faasil, Darshana Rajendran film Irul begins rolling". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ "Fahadh's Irul is a thriller with only three characters – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Fahadh, Soubin and Darshana start shooting for new film 'Irul'". The News Minute (in ஆங்கிலம்). 2020-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ "Fahadh Faasil wraps up shooting for Irul – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ "Fahadh Faasil wraps up shooting of 'Irul'". The News Minute (in ஆங்கிலம்). 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ "Irul trailer unveiled, Malayalam film to release on Netflix on April 2". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-18. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ https://indianexpress.com/article/entertainment/movie-review/irul-movie-review-fahadh-faasil-darshana-rajendran-film-7255438/
- ↑ https://www.cinestaan.com/reviews/irul-44398
- ↑ https://www.thehindu.com/entertainment/movies/irul-movie-review-a-half-baked-half-hearted-effort/article34221902.ece
- ↑ https://www.imdb.com/title/tt13103212/reviews?ref_=tt_urv