சௌபின் சாகிர்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

சௌபின் சாகிர் (Soubin Shahir) (12 அக்டோபர் 1983) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனருமாவார். 2003ஆம் ஆண்டில் உதவி இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பல இயக்குநர்களின் கீழ் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டில் அன்னையும் ரசூலும் படத்தில் துணை வேடத்தில் நடித்து அறிமுகமானார். பறவா (2017) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டில், சூடானி பிரம் நைஜீரியா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இந்த படமும் ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது.

சௌபின் சாகிர்
பிறப்பு12 அக்டோபர் 1983 (1983-10-12) (அகவை 41)
கொச்சி, கேரளா, இந்தியா[1]
தேசியம்இந்தியர்
பணிநடிகர், எழுத்தாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003– தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இந்தியாவின் கேரளாவில் கோட்டை கொச்சியில் சௌபின் பிறந்து வளர்ந்தார். இவருக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். இவரது தந்தை பாபு சாகிர் உதவி இயக்குநராகவும், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராகவும் இருந்தார். இவர் மணிச்சித்ரதாழ், காட்பாதர், இன் ஹரிஹர் நகர் போன்ற படங்களில் பணியாற்றியவர்.[2]

சௌபின் தனது திரைப்பட வாழ்க்கையை சித்திக்கின் குரோனிக்கல் பேச்சிலர் (2003) மூலம் உதவி இயக்குநராகத் தொடங்கினார். பாசில், சித்திக், இரபி-மெகார்டின், பி. சுகுமார், சந்தோஷ் சிவன், ராஜீவ் ரவி, அமல் நீரத் போன்ற இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக இருந்தார்.[3] உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, பாசிலின் கையேத்தும் தூரத் (2002) படத்தில் நடிகராக அறிமுகமானார். அல்போன்சு புத்திரனின் பிரேமம் (2015) படத்தில் ஒரு உடற்கல்வி ஆசிரியராக இவர் நடித்தார். இது இவரை ஒரு நடிகராக பிரபலமடைய வழிவகுத்தது. இவரது பிரபலமான வேடங்களில் சார்லி (2015), மகேசிண்ட பிரதிகாரம் (2016), கலி (2016), டார்விண்டே பரிணாமம் (2016), கம்மதிபாதம் (2016), காமாட்டிபாடம் (2016), அனுராகா கரிக்கின் வேள்ளம் (2016), மாயநதி (2017), காம்ரெட் இன் அமெரிக்கா (2017), கும்பளங்கி நைட்ஸ் ஆகியவையும் அடங்கும். இவர் சூடானி பிரம் நைஜீரியா படத்தில் நடித்ததற்காக 2018 சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2017 திசம்பர் 16 அன்று, இவர் [5] ஜாமியா ஜாகீரை மணந்தார். ஜாமியா ஒரு சந்தைப்படுத்தல் நிபுணராக,[6] கொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறார். தம்பதியருக்கு 2019 மே மாதம் ஒரு மகன் பிறந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. "Soubin Shahir: Tracing the journey of a man destined to be in cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 October 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/soubin-shahir-tracing-the-journey-of-a-man-destined-to-be-in-cinema/photostory/66259673.cms. 
  2. "പറവ കണ്ടപ്പോള്‍ കരഞ്ഞുപോയി; ഞാനത് സൗബിനോട് ഇതുവരെ പറഞ്ഞിട്ടില്ല" [Watching Parava made me cry;I haven't told Soubin about it yet]. மாத்ருபூமி (இதழ்) (in மலையாளம்). 23 October 2017. Archived from the original on 23 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. MERIN MARIA JAMES (10 January 2016). "Soubin's Chillumkoodu step a hit".
  4. S.R. Praveen (27 February 2019). "Kerala State film awards: ‘Kanthan...’, 'Sudani from Nigeria' win honours". The Hindu. Retrieved 27 February 2019.
  5. "Soubin Shahir is married! – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2019.
  6. "Actor Soubin Shahir and wife blessed with a baby boy". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2019.

M, Athira (3 October 2020). "‘Vikrithi’ is inspired by a true incident: Emcy Joseph". https://www.thehindu.com/entertainment/movies/emcy-josephs-vikrithi-is-based-on-a-true-story/article29584055.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌபின்_சாகிர்&oldid=3794134" இலிருந்து மீள்விக்கப்பட்டது