இருஹானி சர்மா
இந்திய நடிகை
இருஹானி சர்மா (Ruhani Sharma) ஓர் இந்திய நடிகையும் வடிவகியும் ஆவார், இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். சி லா சௌவ் (2018) என்ற காதல் படத்தில் நடித்ததற்காக இவர் பாராட்டுகளைப் பெற்றார்.[1]
இருஹானி சர்மா | |
---|---|
பிறப்பு | சோலன், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது வரை |
தொழில்
தொகுஇமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் பிறந்து வளர்ந்தார்.[2] சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2013இல் முதன்முதலில் பஞ்சாபி இசைத் தொகுப்புக்களான "கிளாஸ்ரூம்", "குடி து படகா" ஆகியவற்றில் தோன்றினார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் "கடைசி பெஞ்ச் கார்த்தி" படத்தில் அறிமுகமானார். 2018இல் ராகுல் ரவீந்திரன் இயக்கிய சி லா சௌ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இவரது நடிப்பு நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.[3] 2019இல் ரஞ்சித் சங்கர் எழுதி இயக்கிய கமலா என்ற மலையாள திகிலூட்டும் படத்தில் அறிமுகமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chi La Sow stars Sushanth, Ruhani Sharma open up about their upcoming new-age romance drama". Firstpost (in ஆங்கிலம்). 2018-08-02. பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
- ↑ Tanmayi, Bhawana. "Ruhani, a bubbly debutant of T'town". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
- ↑ Chowdhary, Y. Sunita. "In 'Chi La Sow', I wasn't just a glamour doll, says Ruhani Sharma" (in en-IN). https://www.thehindu.com/entertainment/movies/chi-la-sow-actress-ruhani-sharma-on-tasting-success/article24614361.ece.