இலங்கை அமைச்சரவை

(இலங்கையின் அமைச்சரவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் பேரவையாகும்.[1] அமைச்சரவைக்கான உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார். அதிகாரபூர்வமாக அரசுத்தலைவரே அமைச்சரவையின் தலைவராக இருப்பார். அரசின் முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கு வாரத்தில் பல முறைகள் அமைச்சரவை கூடுகிறது. அமைச்சரவைக்கு வெளியே பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.

இலங்கையின் தற்போதைய அமைச்சரவையில் (2019 அக்டோபர்) அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 10 மூத்த அமைச்சர்கள், 54 அமைச்சர்கள், மற்றும் 2 திட்ட அமைச்சர்களும், 39 பிரதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இது அரசு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.[2][3] 2010 பெப்ரவரியில் கலைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை என்ற பெயர் கின்னசுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.[4] புதிய அமைச்சரவை 2010 ஏப்ரல் 23 இல் அமைக்கப்பட்டது.

பின்னணி

தொகு

இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை பிரித்தானிய இலங்கையில் பிரித்தானிய குடியேற்ற நிருவாகத்தினால் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இலங்கை சட்டவாக்கப் பேரவையுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட சட்டப் பேரவையாக 1833 மார்ச்சு 13 இல் நிறுவப்பட்டது.

நிறைவேற்றுப் பேரவை அமைக்கப்பட்ட போது ஆளுனர் அதன் தலைவராகவும், ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஐவர் அதன் உறுப்பினர்களாகவும் செயல்பட்டனர். குடியேற்ற செயலர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர், இலங்கையின் கட்டளைத் தளபதி ஆகியோர் இந்த ஐந்து உறுப்பினர்கள ஆவார். இப்பேரவை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாகவும், அத்துடன் ஆளுனரின் ஆலோசகராகவும் செயல்பட்டது. 1921 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் படி மூன்று அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1947 ஆம் ஆண்டில் இலங்கை மேலாட்சிக்கான புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நிறைவேற்றுப் பேரவை தேசிய அமைச்சரவையாக மாற்றப்பட்டது.

அமைப்பு

தொகு

அரசுத்தலைவர் அமைச்சரவையின் உறுப்பினரும் தலைவரும் ஆவார்.[1] அரசுத்தலைவரே நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்.[1] பிரதமரின் ஆலோசனைப்படி, அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்களை அரசுத்தலைவர் நியமிப்பார்.[5] அரசுத்தலைவர் தனது விருப்பப்படியும் அமைச்சர்களை நியமிக்கலாம்.[5] அமைச்சரவை உறுப்பினரல்லாத அமைச்சர்களையும் (பிரதி அமைச்சர்கள், திட்ட அமைச்சர்கள்) அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கலாம்.[6][7] முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைச்சரவை வாரத்தில் பல தடவைகள் கூடும்.

நடப்பு அமைச்சரவை

தொகு

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ச குடியரசு தலைவாராக தேர்ந்தெடுக்கபட்டார்.

நடப்பு அமைச்சு
கட்சி பெயர் பொறுப்பு பொறுப்பேற்ற ஆண்டு
இலங்கை பொதுசன முன்னணி கோட்டாபய ராஜபக்ச குடியரசுத் தலைவர்பாதுகாப்பு அமைச்சு

தேசிய திட்டமிடல் அமைச்சு

21 நவம்பர் 2019
இலங்கை பொதுசன முன்னணி மகிந்த ராசபக்ச பிரதமர்பௌத்த மய அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

21 நவம்பர் 2019
இலங்கை பொதுசன முன்னணி அலி சப்ரி நிதி அமைச்சு 04 ஏப்ரல் 2022
இலங்கை சுதந்திரா கட்சி நிமல் சிறிபால டி சில்வா தொழிலாளர் அமைச்சு 16 ஆகஸ்ட் 2021
இலங்கை பொதுசன முன்னணி சுமனவீர பண்டா திசாநாயக்க தொழிற்சாலை அமைச்சு 18 ஏப்ரல் 2022
இலங்கை சுதந்திரா கட்சி பவித்ராதேவி வன்னியாராச்சி வணிக அமைச்சு 22 நவம்பர் 2019
மகாஜன எக்சத் பெரமுன தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சு 18 ஏப்ரல் 2022
இலங்கை பொதுசன முன்னணி காமினி லக்ஷ்மன் பீரிஸ் வெளிவிவகார துறை அமைச்சு 18 ஏப்ரல் 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி டக்ளஸ் தேவானந்தா கடற்தொழிற் அமைச்சு 22 நவம்பர் 2019
இலங்கை பொதுசன முன்னணி காமினி லோகுகே வலுசக்தி அமைச்சு 18 ஏப்ரல் 2022
இலங்கை சுதந்திரா கட்சி பந்துல குணவர்தனே வர்த்தக அமைச்சு 18 ஏப்ரல் 2022
இலங்கை சுதந்திரா கட்சி சந்திரசிறி பண்டார ரத்நாயக்க வனவிலங்கு , பாதுகாப்பு அமைச்சு 18 ஏப்ரல் 2022
இலங்கை பொதுசன முன்னணி ஜனக பண்டார தென்னக்கோன் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 18 ஏப்ரல் 2022
இலங்கை பொதுசன முன்னணி கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு 18 ஏப்ரல் 2022
இலங்கை பொதுசன முன்னணி சமல் ராஜபக்ஷ நீர் பாசன துறை அமைச்சு 18 ஏப்ரல் 2022


இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 43". LawNet.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Government Ministers
  3. Now, two-thirds of govt. MPs holding portfolios பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்டு, அக்டோபர் 11, 2013
  4. Most cabinet ministers appointed by a government, கின்னசு உலக சாதனை
  5. 5.0 5.1 "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 44". LawNet.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 45". LawNet.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 46". LawNet.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_அமைச்சரவை&oldid=3419501" இலிருந்து மீள்விக்கப்பட்டது