மகாதேசாதிபதி (இலங்கை)

(இலங்கையின் மகா தேசாதிபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கையின் ஆளுநர் அல்லது இலங்கையின் மகாதேசாதிபதி (Governor General of Dominion of Ceylon) என்பது 1948-1972ல் இலங்கையின் நாட்டுத் தலைவரின் பட்டமாகும். இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்த போதிலும்கூட, 1947ம் ஆண்டு பிரித்தானியர்களால் முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பே 1972ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்த அரசியல் யாப்பில் இலங்கையில் பெயரளவு நிர்வாகியாக பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதி என்ற வகையில் மகாதேசாதிபதி பதவி காணப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பிற்கு முன்பு காணப்பட்ட தேசாதிபதிகளை விட இப்பதவி அதிகாரத்தில் குறைந்ததாக இருந்தது.[1][2]

முதலாவது தேசாதிபதி

தொகு

மகாதேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடையும் போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் சேர். ஹென்றி மொங்-மேசன் மூர் என்பவர். இவர் விடுதலைக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 1949 ஜுலை 6 இல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 1949 ஜுலை 6 இல் சோல்பரி அரசியல் யாப்பினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபு என்ற ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம் என்பவரை மகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் 1954, ஜுலை 17 இல் நிறைவடைந்தது. இறுதி மகாதேசாதிபதியாக 1962 முதல் 1972 வரை வில்லியம் கொபல்லாவ இருந்தார்.

நியமனம்

தொகு

இலங்கைப் பிரதம மந்திரியின் சிபாரின்படி பிரித்தானிய முடியினால் இவர் நியமிக்கப்படுவார்.

பதவிக்காலம்

தொகு

பதவிக்காலம் குறித்து யாப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொரு முறை மகதேசாதிபதி மாற்றப்படுவது மரபாகப் பேணப்பட்டது.

அதிகாரங்கள்

தொகு

சட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்

தொகு
  • நியமன அங்கத்தவர்க(ஆறுபேர்)களை மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு நியமித்தல்
  • செனட்டின் வெற்றிடங்களை நிரப்புதல்
  • மக்கள் பிரதிநிதிகள் சபையின் சடங்கு ரீதியான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்
  • மக்கள் பிரதிநிதிகள் சபையைக் கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல்.
  • செனட்சபையைக் கூட்டல், ஒத்திவைத்தல்.

நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள்

தொகு
  • பிரதம மந்திரியைத் தெரிவு செய்தல்
  • அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தல்
  • பாராளுமன்றக் காரியதரிசி, நிரந்தரக் காரியதரிசிகள், அமைச்சரவைக் காரியதரிசிகள் ஆகியோரை நியமித்தல்..
  • கணக்காளர் நாயகத்தை நியமித்தல்.
  • தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.

நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்

தொகு
  • பிரதம நீதியரசரை நியமித்தல்
  • உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல்
  • நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்
  • மன்னிப்பு வழங்குதல்

இலங்கையின் மகா தேசாதிபதிகள்

தொகு
படம் பெயர் பிறப்பு இறப்பு ஆளுநரான நாள் இறுதி நாள் இறையாண்மை
சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் 1887 1964 4 பெப்ரவரி 1948 6 சூலை 1949 ஜோர்ஜ் VI
ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு 6 மே 1887 30 சனவரி 1971 6 சூலை 1949 17 சூலை 1954 ஜோர்ஜ் VI
எலிசபெத் II
சேர் ஒலிவர் குணத்திலக்க 20 அக்டோபர் 1892 17 திசம்பர் 1978 17 சூலை 1954 2 மார்ச் 1962 எலிசபெத் II
வில்லியம் கோபல்லாவ 17 செப்டம்பர் 1897 31 சனவரி 1981 2 மார்ச் 1962 22 மே 1972 எலிசபெத் II

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ceylon Constitution Order in Council 1946". Tamilnation. பார்க்கப்பட்ட நாள் 9 November 2012.
  2. Cooray, L.J.M. (1984). Constitutional Government in Sri Lanka (First ed.). Colombo: Lake House Printers and Publishers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதேசாதிபதி_(இலங்கை)&oldid=4101643" இலிருந்து மீள்விக்கப்பட்டது