இலண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம்

இலண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் (Transport for LondonTfL) இங்கிலாந்தின் இலண்டன் பெருநகர்ப் பகுதியில் பெரும்பாலான தரைவழிப் போக்குவரத்துக்கு பொறுப்பானதாகும். நகரத்திற்கான இலண்டன் மேயரின் போக்குவரத்து செயற்திட்டங்களை செயலாக்குவதும் போக்குவரத்துச் சேவைகளை மேலாண்மை செய்வதும் இதன் நோக்கங்களாகும்.[1] இதன் தலைமை அலுவலகம் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ள வின்ட்சர் மாளிகையில் அமைந்துள்ளது.[2]

இலண்டனுக்கான போக்குவரத்து
சுருக்கம்TfL
உருவாக்கம்சூலை 3, 2000 (இலண்டன் பெருநகர ஆணையச் சட்டம் 1999)
வகைபொது நிறுவனம்
சட்ட நிலைஇலண்டன் பெருநகர ஆணையத்தினுள் செயலாக்க முகமை
நோக்கம்போக்குவரத்து கட்டுப்பாடு
தலைமையகம்வின்ட்சர் மாளிகை, விக்டோரியா சாலை, வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன்
சேவை பகுதி
இலண்டன் பெருநகர்ப் பகுதி
தலைவர்
இலண்டன் மேயர்
போரிசு ஜான்சன்
மைய அமைப்பு
இலண்டன் பாதாளவழி
இலண்டன் பேருந்துகள்
இலண்டன் தொடர்வண்டி
இலண்டன் சாலைகள்
இலண்டன் மேல்வழி
தாய் அமைப்பு
இலண்டன் பெருநகர் ஆணையம் (GLA)
வலைத்தளம்www.tfl.gov.uk

வரலாறு தொகு

 
தலைமை அலுவலகம், வின்ட்சர் மாளிகை

இலண்டன் பெருநகர ஆணையச் சட்டம் 1999இன்படி இலண்டன் பெருநகர ஆணையத்தின் அங்கமாக இலண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[3] இதற்கு முன்னதாக இலண்டன் வட்டார போக்குவரத்து இந்தப் பணிகளில் பெரும்பாலானவற்றை மேற்கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தின் முதல் ஆணையராக பாப் கிலே பொறுப்பேற்றார். அப்போதைய இலண்டன் மேயர் கென் லிவிங்சுடன் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2008இல் நடந்த தேர்தல்களில் போரிசு ஜான்சன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை இவரே தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

இலண்டன் பாதாளவழியின் பொறுப்பு 2003 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. பொது அழைப்புத் தானுந்து (டாக்சி)களின் மேலாண்மை முன்னதாக மாநகர காவல்துறையிடம் இருந்தது. 2005ஆம் ஆண்டு சூலை 7ஆம் நாள் நடந்த பாதாளவழி தொடர்வண்டி மற்றும் பேருந்து குண்டுவெடிப்புகளின்போது இந்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் விரைவாகவும் பொறுப்பாகவும் பணியாற்றி அரசியிடம் சிறப்பு விருதுகள் பெற்றுள்ளனர்.[4][5][6]

மேற்சான்றுகள் தொகு

  1. "Transport for London தகவல் தமிழ்". Transport for London அலுவல்முறை வலைத்தளம். Archived from the original on 2013-04-27. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Company information பரணிடப்பட்டது 2013-01-09 at the வந்தவழி இயந்திரம்." Transport for London. Retrieved: 2011-02-09. "Registered office: Windsor House, 42–50 Victoria Street, London SW1H 0TL."
  3. "Legislative framework". Transport for London. Archived from the original on 2012-01-23. பார்க்கப்பட்ட நாள் 2008-09-06.
  4. Alan Hamilton (16 February 2006). "It was all just part of the job, say honoured 7/7 heroes". தி டைம்ஸ். http://www.timesonline.co.uk/tol/news/uk/article731315.ece. பார்த்த நாள்: 2011-05-22. 
  5. "Queen hails brave 7 July workers". BBC News. 15 February 2006. http://news.bbc.co.uk/1/hi/uk/4712402.stm. பார்த்த நாள்: 2011-05-22. 
  6. "Two TfL July 7 heroes honoured in New Years List". TfL. 2 January 2007. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-05-22.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Transport for London
என்பதில் ஊடகங்கள் உள்ளன.