இலந்தனம் ஈரயோடைடு

வேதிச் சேர்மம்

இலந்தனம் ஈரயோடைடு (Lanthanum diiodide) LaI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. இலந்தனத்தின் அயோடைடு உப்பாகவும் எலக்ட்ரானே எதிர்மின் அயனியாகச் செயற்படும் சேர்மமாகவும் இக்கனிம வேதியியல் சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2]

இலந்தனம் ஈரயோடைடு
இனங்காட்டிகள்
19214-98-3
InChI
  • InChI=1S/La.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: UYZZZMCZZNTWGP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
  • [I-].[I-].[La+2]
பண்புகள்
I2La
வாய்ப்பாட்டு எடை 392.71 g·mol−1
தோற்றம் கருநீல திண்மம்[1]
அடர்த்தி 5.46 கி/செ.மீ−3[1]
உருகுநிலை 830 °செல்சியசு[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம் ஈரயோடைடு
பிரசியோடைமியம் ஈரயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வெற்றிடத்தில் 800 முதல் 900 பாகை செல்சியசு வரையிலான வெப்பநிலையில் இலந்தனம்(III) அயோடைடுடன் இலந்தனத்தைச் சேர்த்து ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தினால் இலந்தனம் ஈரயோடைடு உருவாகிறது.[3]

La + 2 LaI3 → LaI2

இலந்தனத்துடன் பாதரச(II) அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்க முடியும்.

La + HgI2 → LaI2 + Hg

1961 ஆம் ஆண்டு இயான் டி கார்பெட்டு முதன் முதலில் இலந்தனம் ஈரயோடைடைத் தயாரித்தார்.[4]

பண்புகள்

தொகு

இலந்தனம் ஈரயோடைடு உலோகப் பளபளப்புடன் கூடிய நீல-கருப்பு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. அயோடைடு ஆக்சைடாக எளிதில் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது.I4/mmm (எண். 139) என்ற இடக்குழுவுடன் MoSi2-வகை கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Holt Jr., Smith L. (1983). Inorganic syntheses. Volume 22. New York. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13288-3. இணையக் கணினி நூலக மைய எண் 86223480.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. Holleman, Arnold F.; Walter de Gruyter GmbH & Co. KG (2017). Anorganische Chemie Band 2. Nebengruppenelemente, Lanthanoide, Actinoide, Transactinoide (in ஜெர்மன்). Berlin. p. 1789. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-051854-2. இணையக் கணினி நூலக மைய எண் 968134924.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry V1. Burlington: Elsevier Science. p. 1081. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-16127-5. இணையக் கணினி நூலக மைய எண் 843200092.
  4. Jungmann, Angelika; Claessen, R.; Zimmermann, R.; Meng, Ge; Steiner, P.; Hüfner, S.; Tratzky, S.; Stöwe, K. et al. (1995). "Photoemission of LaI2 and CeI2". Zeitschrift für Physik B Condensed Matter (Springer Science and Business Media LLC) 97 (1): 25–34. doi:10.1007/bf01317584. பன்னாட்டுத் தர தொடர் எண்:0722-3277. Bibcode: 1995ZPhyB..97...25J. 
  5. Riedel, Erwin; Janiak, Christoph; Meyer, Hans-Jürgen (2012). Riedel, moderne anorganische Chemie (in ஜெர்மன்). Berlin: De Gruyter. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-024900-2. இணையக் கணினி நூலக மைய எண் 781540844.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்_ஈரயோடைடு&oldid=3946983" இலிருந்து மீள்விக்கப்பட்டது