இலலிதா சாத்திரி
இலலிதா சாத்திரி (பிறப்பு இலால்மணி தேவி ; 11 சனவரி 1910 [1] - 13 ஏப்ரல் 1993) என்பவர் மேனாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி ஆவார்.
இலலிதா சாத்திரி | |
---|---|
பிரதமரின் துணைவியார் | |
பதவியில் 9 சூன் 1964 – 11 சனவரி 1966 | |
பிரதமர் | லால் பகதூர் சாத்திரி |
முன்னையவர் | காலியிடம் |
பின்னவர் | காலியிடம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லால் மணி தேவி 11 சனவரி 1910 மிர்சாபூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 13 ஏப்ரல் 1993 புது தில்லி, தில்லி, இந்தியா | (அகவை 83)
துணைவர்(கள்) | லால் பகதூர் சாத்திரி (தி. 1928; இற. 1966) |
பிள்ளைகள் | 6 பேர் |
தேவி, உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர். இவர் 1928 மே 16 அன்று சாத்திரியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் இலக்னோவிலும் பின்னர் புது தில்லியிலும் வசிப்பதற்கு முன்னர் பிரயாக்ராஜில் (அப்போது அலகாபாத்) பல ஆண்டுகள் வாழ்ந்தனர். சாசுதிரி தனது வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். இந்த காலத்தில், தேவி குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக்கொண்டார். 1952-இல் சாசுதிரி இரயில்வே அமைச்சரானபோது குடும்பம் புது தில்லிக்குக் குடிபெயர்ந்தது. ஆனால், சாத்திரியின் மரணத்திற்குப் பிறகு தில்லியைக் காலி செய்தனர். ஆனால் 1968-இல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தேவிக்கு வேறு ஒரு வீட்டை ஒதுக்கினார். மேலும் இவர் 13 ஏப்ரல் 1993-இல் இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார்.
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நினைவு அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் லால் பதூர் சாஸ்திரி நினைவு இல்லம், 10 ஜன்பத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இது இவரது கணவர் பிரதம மந்திரியாக இருந்த, அதிகாரப்பூர்வ இல்லமான, 1, மோதிலால் நேரு பகுதியில் உள்ளது.
சாஸ்திரி சேவா நிகேதன் என்ற அமைப்பையும் இவர் நிறுவினார். இவரது மகன் சுனில் சாஸ்திரி தற்போது இதன் தலைவராக இருக்கிறார். தேவி 1993-இல் புது தில்லியில் இறந்தார். இவரது மகன்களில் ஒருவரான அனில் சாத்திரி, முன்னாள் மக்களவை உறுப்பினர்.
கிராந்த் எம். எல். வர்மா எழுதிய லலிதா கே ஆன்சூ என்ற இந்தி காவிய கவிதைப் புத்தகம் 1978-இல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் இவரது கணவர் லால் பகதூர் சாஸ்திரியின் முழு கதையும் லலிதா சாத்திரியால் விவரிக்கப்பட்டுள்ளது. லலிதா எழுதிய சில பாடல்கள் ("भोला भोला रटते रदे" போன்றவை) சித்ரகுப்தாவால் இசையமைக்கப்பட்டு லதா மங்கேஷ்கரால் பாடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lalita Shastri". Geni.com. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.