இலலிதா பானு

இலலிதா பானு (N. Lalitha Bhanu) என்பவர் கருநாடக இசைப் பாடகி ஆவார். பின்னணிப் பாடகராக இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் சில பாடல்களைப் பாடியுள்ளார்.[1]

நா. இலலிதா பானு
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்நாராயண பாகவதர் இலலிதா
பிறப்பு(1931-08-19)19 ஆகத்து 1931
திருவனந்தபுரம்
இறப்பு20 ஆகத்து 2020(2020-08-20) (அகவை 89)
சென்னை, தம்ழிநாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை, இந்தியப் பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு கலைஞர்
இசைத்துறையில்1950–1997

இளமை

தொகு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் நாராயணப் பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோரின் மகளாக 19 ஆகத்து 1931 அன்று இலலிதா பிறந்தார்.இவரது தந்தை நாராயணப் பாகவதர் வயலின் கலைஞரும், திருவனந்தபுரம் சகோதரர்களில் ஒருவரும் ஆவார். சகோதரர்கள் திருவனந்தபுரம் அரச அரண்மனையின் அரசவை கலைஞர்கள் ஆவர். இவர் தனது ஆரம்பப் பாடங்களை கே. ஆர். குமாரசாமியிடமிருந்து கற்றுக்கொண்டார். பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் சேர்ந்தார். இந்தக் கல்லூரியின் முதல்வராக செம்மங்குடி சீனிவாச ஐயர் இருந்தார். இவரிடம் இருந்து நேரடியாகப் பயிற்சி பெற்றார். இவரது குடும்பம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தபோது, சீனிவாச ஐயர் இவரை முசிரி சுப்பிரமணிய ஐயரிடம் அறிமுகப்படுத்தினார். முசிரி சுப்பிரமணிய ஐயரிடமிருந்து சுமார் 8 ஆண்டுகள் பல கிருதிகளைக் கற்றுக்கொண்டார். முசிரி, இலலிதாவைத் தனது சொந்தப் பாணியில் அனைத்து வர்ணங்களையும் பாடச் செய்தார். இதன் மூலம் "முசிரி பானி" என்ற பாடலை இவர் உள்வாங்கினார்.பாபநாசம் சிவனிடமிருந்து பல கிருதிகளைக் கற்றுக்கொண்டார்.[2]

இசை வாழ்க்கை

தொகு

இலலிதாவின் முதல் பொது இசை நிகழ்ச்சி மாவேலிக்கரை (கேரளம்) அரங்கில் அரங்கேற்றப்பட்டது. அனைத்திந்திய வானொலி கலைஞராக இருந்த இவர், பாண்டிச்சேரி மற்றும் சென்னை உட்படப் பல்வேறு வானொலி நிலையங்களில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாடினார். தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியிலும் இவர் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார்.

பின்னணிப் பாடகர்

தொகு

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களில் பின்னணிப் பாடகராகப் பாடியவர் இலலிதா. 1953ஆம் ஆண்டில் வெளியான மலையாள மொழி திரைப்படமான பொங்காதிர் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். "அஞ்சனா சிறீதாரா" என்ற பாரம்பரியப் பாடல் வெற்றி பெற்றது.[3] இந்த படம் தமிழில் இருளுக்குப்பின் என்ற தலைப்பில் எடுக்கப்பட்டபோது இவரும் தமிழில் பாடினார். பி. ஆர். லட்சுமணன், வி. தட்சிணமூர்த்தி, ஜி. ராமநாதன், கண்டசாலா, பெந்தியாலா நாகேஸ்வர ராவ் மற்றும் சி. என். பாண்டுரங்கன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடியுள்ளார்.

பட்டங்களும் விருதுகளும்

தொகு

லலிதா பானுவுக்கு "கணபூசணம்" என்ற பட்டமும், செம்மங்குடி சீனிவாச ஐயர் இவருக்குத் தம்புரா (சுவாதி திருநாள் சின்னத்துடன்) பரிசும் வழங்கினார்.[1]

குடும்ப வாழ்க்கை

தொகு

இலலிதா, பெருமாள் பானு பரத்வாஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஆனந்த் பானு பரத்வாஜ் என்ற மகன் உட்பட மூன்று குழந்தைகள் இருந்தனர்.

மரணம்

தொகு

இலலிதா 20 ஆகத்து 2020-இல் சென்னையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Tribute to a veteran singer". தி இந்து. 11 September 2020. Archived from the original on 14 June 2021.
  2. "Of a different era". தி இந்து. 10 April 2009. Archived from the original on 14 June 2021. K. R. Kedarnath and T. M. Thiagarajan as well.
  3. "List of Malayalam Songs sung by Ganabhooshanam N Lalitha". Archived from the original on 14 June 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலிதா_பானு&oldid=4169901" இலிருந்து மீள்விக்கப்பட்டது