இலைத்தவளைக் குடும்பம்
இலைத்தவளைக் குடும்பம் | |
---|---|
பர்மேசிடெர் இலைத் தவளை (பைலோமெடுசா பர்மெசிடெரி) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைலோமெடுசிடே
|
உயிரியற் பல்வகைமை | |
8 பேரினம், 66 சிற்றினம் |
பைலோமெடுசிடே (Phyllomedusidae) என்பது பொதுவாக இலைத் தவளைகள் என்று அழைக்கப்படுபவை. இவை நியோட்ரோபிக்சு எனப்படும் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படும் தவளைகளின் குடும்பமாகும். இவை பெரும்பாலும் மரத் தவளைகளான ஹைலிடே குடும்பத்தின் துணைக்குடும்பமாகக் கருதப்படுகின்றன.
ஆத்திரேலியா மற்றும் நியூ கினியாவிலிருந்து அறியப்பட்ட தவளைகளின் குடும்பமான ஆத்திரேலிய மரத் தவளைகளின் (பெலோடிரையாடிடே) குடும்பம், புவியியல் ரீதியாக இவற்றிலிருந்து மிகவும் பிரிக்கப்பட்டிருந்தாலும் சகோதர குடும்பம் என்று கருதப்படுகிறது. இரு குடும்பங்களின் பொதுவான மூதாதையர் செனோசோயிக் ஆரம்பக் காலத்தில் தென் அமெரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு பைலோமெடுசிடே இன்னும் வாழ்கிறது. இயோசீன் காலத்தில் இரண்டு குடும்பங்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. பெலோடிரையாடிடே மூதாதையர்கள் தென் அமெரிக்காவிலிருந்து அந்தாட்டிக்கா வழியாக ஆஸ்திரலேசியாவில் காலனித்துவப்படுத்தியிருக்கலாம், இதே நேரத்தில் அந்தாட்டிக்காவில் நீர் உறைந்திருக்கவில்லை.[1] இரு குடும்பங்களையும் உள்ளடக்கிய உயிரினக் கிளை ஹைலிடேயின் சகோதர குழுவாகும். பேலியோஜீனில் இவை பிரிந்துள்ளன.[2]
வகைப்பாட்டியல்
தொகுஇக்குடும்பத்தில் பின்வரும் பேரினங்கள் உள்ளன.
- அகலிக்னிசு (14 சிற்றினங்கள்)
- கேலிமெடூசா '('Callimedusa) (ஆறு சிற்றினங்கள்)
- குருசியோகைலா (Cruziohyla) (மூன்று சிற்றினங்கள்)
- கைலோமேண்டிசு (Hylomantis) (இரண்டு சிற்றினங்கள்)
- பாசுமாகைலா (மின்னும் இலைத்தவளை) (Phasmahyla) (எட்டு சிற்றினங்கள்)
- பிரைனோமெடுசா (வண்ண இலைத்தவளை) (Phrynomedusa) (ஐந்து வாழ்ந்து வரும் சிற்றினங்கள், ஒன்று அருகி விட்டது)
- பைலோமெடூசா (Phyllomedusa)(16 சிற்றினங்கள்)
- பித்தேகோபசு (Pithecopus) (11 சிற்றினங்கள்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Duellman, William E.; Marion, Angela B.; Hedges, S. Blair (2016-04-19). "Phylogenetics, classification, and biogeography of the treefrogs (Amphibia: Anura: Arboranae)" (in en). Zootaxa 4104 (1): 1–109. doi:10.11646/zootaxa.4104.1.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:27394762. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.4104.1.1.
- ↑ Feng, Yan-Jie; Blackburn, David C.; Liang, Dan; Hillis, David M.; Wake, David B.; Cannatella, David C.; Zhang, Peng (2017-07-18). "Phylogenomics reveals rapid, simultaneous diversification of three major clades of Gondwanan frogs at the Cretaceous–Paleogene boundary" (in en). Proceedings of the National Academy of Sciences 114 (29): E5864–E5870. doi:10.1073/pnas.1704632114. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:28673970.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கியினங்களில் Phyllomedusinae பற்றிய தரவுகள்
- பொதுவகத்தில் Phyllomedusinae தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Amphibian Species of the World
- http://www.tolweb.org/Phyllomedusinae பரணிடப்பட்டது 2021-10-28 at the வந்தவழி இயந்திரம்
- http://amphibiaweb.org/lists/Hylidae.shtml