இவான் இவானிசெவிக்கு
இவான் இவானிசெவிக்கு (Ivan Ivanišević) செர்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2000 ஆம் ஆண்டில் இவானிசெவிக்கிற்கு கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை பிடே அமைப்பு இவருக்கு வழங்கியது. 2008, 2009,[1] 2011, 2012,[2] 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் செர்பிய நாட்டின் சதுரங்க வெற்றியாளராகத் திகழ்ந்தார். ஏழு முறை சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் பங்கேற்றுள்ளார், யூகோசுலாவியா நாட்டிற்காக 1998, 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளிலும் செர்பியா நாட்டிற்காக 2008, 2010, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலும் இப்போட்டியை இவானிசெவிக்கு பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். குறிப்பாக முதல் பலகையில் மூன்று முறை பங்கேற்றார்.[3]
இவான் இவானிசெவிக்கு Ivan Ivanišević | |
---|---|
2016 ஆம் ஆண்டில் இவான் இவானிசெவிக்கு | |
நாடு | யூகோசுலாவியா → செர்பியா |
பிறப்பு | 23 நவம்பர் 1977 |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2000) |
பிடே தரவுகோள் | 2599 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2665 (சனவரி2016) |
உச்சத் தரவரிசை | No. 57 (சூலை 2008) |
இவானிசெவிக் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பையில் பங்கேற்று இரண்டாவது சுற்றை அடைந்தார், அங்கு அவர் அலெக்சாண்டர் அரேச்சுசெங்கோவால் வெளியேற்றப்பட்டார். 2011 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பையிலும் பங்கேற்றார், அங்கு அவர் அலெக்சாண்டர் ஓனிசுக்கால் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.[4] இதே ஆண்டு, போட்கோரிகாவில் நடந்த 3 ஆவது பால்கன் தனிநபர் சதுரங்க வெற்றியாளர் கோப்பையை வென்றார்.[5] 2014 ஆம் ஆண்டில் இவானிசெவிக்கு செயின்ட் பீட்டர்சுபர்க்கில் உள்ள சிகோரின் நினைவு சதுரங்கப்ப்போட்டியையும் வென்றார். 2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ivan Ivanisevic crushes opposition to defend the last year's title". Chessdom. 15 Apr 2009. Archived from the original on 4 November 2014. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
- ↑ "Chess Championships 1935 - 2014". Chess Association of Serbia. Archived from the original on 7 September 2015. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
- ↑ Wojciech Bartelski. "Ivanišević, Ivan". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
- ↑ Crowther, Mark (2011-09-21). "The Week in Chess: FIDE World Cup Khanty-Mansiysk 2011". London Chess Center. Archived from the original on 20 October 2011. பார்க்கப்பட்ட நாள் 16 November 2011.
- ↑ Polgar, Susan (2011-12-20). "GM Ivan Ivanisevic is Balkan Champion". Chess Daily News. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
புற இணைப்புகள்
தொகு- Interview with GM Ivan Ivanisevic பரணிடப்பட்டது 2014-11-04 at the வந்தவழி இயந்திரம்