இ. ஏ. ராஜேந்திரன்

இ. ஏ. ராஜேந்திரன், ஒரு மலையாள நாடக இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அறுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.[1]

இ. ஏ. ராஜேந்திரன்
2013-ல் மாக்பெத் நாடகத்தின் தொடக்கத்தில், கொல்லத்தில் இ. ஏ. ராஜேந்திரன்
பணிதிரைப்பட நடிகர், நாடக நடிகர்
பெற்றோர்அய்யப்பன், சுமதி
வாழ்க்கைத்
துணை
சந்தியா
பிள்ளைகள்திவ்யதர்சன்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

திருச்சூர் மாவட்டத்தின் திருத்தல்லூரில், அய்யப்பனுக்கும் சுமதிக்கும் பிறந்தார். திருத்தல்லூர் யு.பி பள்ளியில் பயின்றவர். படிக்கும் காலத்தில் நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயின்றார்.[1] புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் டெலிவிஷன் பிரிவில் இணைந்தார்.

ஓ. மாதவனின் மகளும் முகேஷின் சகோதரியுமாகிய சந்தியாவை திருமணம் செய்தார்.

திரைத்துறை

தொகு

மாமனாரின் நாடக நிறுவனத்தில் இணைந்தார். பின்னர், திரைத்துறையில் சேர்ந்தார்.

விருதுகள்

தொகு
  • சிறந்த இயக்குநர் - நாடகம்: ரமணன் [2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "ராஜேந்திரன் ஒரு நடிகர் மட்டுமல்ல". மலையாள மனோரமா. ஜூன் 11, 2012. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 7, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "ரமணன் - சிறந்த நாடகம்; இ. ஏ. ராஜேந்திரன்". மாத்ருபூமி. டிசம்பர் 5, 2010. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 7, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._ஏ._ராஜேந்திரன்&oldid=4169224" இலிருந்து மீள்விக்கப்பட்டது