இ. நல்லாக்கவுண்டம்பாளையம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமம்

இ. நல்லாக்கவுண்டம்பாளையம் (E. Nallagoundamapalyam) நாமக்கல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 47 கி. மீ. தொலைவிலும், துணை மாவட்ட தலைமையகமான பரமத்தி வேலூரிலிருந்து 20 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இ. நல்லகண்டம்பாளையம் கிராமத்திற்கு மேற்கே 3 கி. மீ. தொலைவில் காவேரி நதி பாய்கிறது. இக்கிராமத்திலிருந்து சுமார் 5 கி. மீ. தொலைவில் உள்ள சோழாசிராமணி நகரம் அருகில் உள்ள சிறிய நகரமாகும். இங்கு சுமார் 276 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் அமைந்துள்ளது. கிராமத்தின் மொத்த புவியியல் பகுதி 493.62 ஹெக்டேர் ஆகும்.

இ. நல்லாக்கவுண்டம்பாளையம்
E.Nallagoundamapalyam
கிராமம்
இ.நல்லக்கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள விளைநிலம்
இ.நல்லக்கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள விளைநிலம்
இ. நல்லாக்கவுண்டம்பாளையம் is located in தமிழ் நாடு
இ. நல்லாக்கவுண்டம்பாளையம்
இ. நல்லாக்கவுண்டம்பாளையம்
தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்: 11°13′10.9″N 77°53′35.8″E / 11.219694°N 77.893278°E / 11.219694; 77.893278
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
தாலுக்காபரமத்தி வேலூர்
ஊராட்சி ஒன்றியம்கபிலர்மலை
ஊர் தலைவர்பெரியசாமி
மக்கள் தொகை 900[1]
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
637210
வாகனப் பதிவுதநா 28
அருகில் உள்ள நகரம்திருச்செங்கோடு.

பொருளாதாரம்

தொகு

விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக இருக்கின்றன. கரும்பு, மஞ்சள், அரிசி, மரவள்ளி கிழங்கு(குச்சிக் கிழங்கு), எள், தென்னை, வாழை, சோளம், காய்கறிகள், வாழைப்பழம், கீரைகள் போன்றவை இக்கிராமத்தில் பரவலாக பயிரிடப்படுகின்றன. மாடு, எருமை, செம்மறி ஆடு, கோழி வளர்ப்பின் மூலம் இக்கிராமத்தில் பால், இறைச்சி, முட்டை உற்பத்தி செய்யப்படுகின்றன. கிணறு, காவிரி நீர், போர்வெல், கால்வாய்கள், மழைநீர் ஆகியவை பாசன நிலத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளன. சராசரியாக, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 3-5 ஏக்கர் நிலம் உள்ளது. ரிக் (போர்வெல்), டிராக்டர்கள் போன்ற பண்ணை இயந்திரங்களை சொந்தமாக வைத்திருப்பதன் மூலமாகவும், ஓட்டுநர், கசாப்பு, எலெக்ட்ரிசியன், மெக்கானிக் போன்ற வேலைகளைக் கூடுதலாக செய்வதின் மூலமாக இக்கிராமத்தில் சிலர் கூடுதல் வருவாயை ஈட்டுகின்றனர்.

திருக்கோவில்கள்

தொகு
  • கோட்டைனார் திருக்கோவில்
  • கண்டியம்மன் திருக்கோவில்
  • கருப்பண்ணன் திருக்கோவில்
  • விநாயகர் திருக்கோவில்

போக்குவரத்து வசதிகள்

தொகு

மாரப்பம்பாளையம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அமைந்துள்ள பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஈரோடு, பாசூர் ஆகியவை அருகிலுள்ள இரயில் நிலையமாகும். சேலம் அருகில் உள்ள உள்நாட்டு விமான நிலையமாகும். கோயம்புத்தூர் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையமாகும்.

வங்கிகள்

தொகு

அருகில் உள்ள வங்கிகளான சிண்டிகேட் வங்கி, பல்லவன் கிராம வங்கி சோழசிராமணியில் அமைந்துள்ளது. கரூர் வைசியா வங்கியில் கொத்தமங்கலத்தில் அமைந்துள்ளது.

மருத்துவமனைகள்

தொகு

அருகில் உள்ள மருத்துவமனைகள் சோழசிராமணியிலும், ஜேடர்பாளையத்திலும் அமைந்துள்ளன.

திரையரங்கம்

தொகு

சோழசிராமணியில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கம் அருகில் அமைந்துள்ள திரையரங்கமாகும். இங்கு தினசரி இரவு 6.45 மணிக்கு ஒரு காட்சி திரையிடப்படும். பண்டிகை அல்லது பருவகாலங்களில் பார்வையாளர்களின் கோரிக்கைக்கேற்ப காட்சிகள் அதிகரிக்கப்படும்.

பிற வசதிகள்

தொகு

இ.நல்லாக்கவுண்டம்பாளையத்தில் ரேஷன் அலுவலகம், அரசு முதன்மை பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. ஸ்ரீ அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சோழசிராமணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை அருகில் அமைந்துள்ள பள்ளிகளாகும். அருகிலுள்ள சிறு நகரமான சோழசிராமணியில், பெட்ரோல் பம்ப், முதன்மை வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கம், தபால் அலுவலகம், தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவமனை, தமிழ்நாடு இ-சேவை மையம் போன்றவை அமைந்துள்ளன. அருகில் அமைந்துள்ள காவல் நிலையம் மொளசியில், ஜேடர்பாளையம், கந்தம்பாளையம் ஆகியவையாகும். கோட்டைனார் திருக்கோவில் மற்றும் கண்டியம்மன் திருக்கோவிலில் கைப்பந்து விளையாட்டுத்திடல்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு